பாசிட்டிவாக சிந்தித்தால் வலி குறையும் !

நார்ச்சத்து : இது பெண்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. நாள் ஒன்றுக்கு 21 கிராம் நார்ச்சத்து கொண்ட உணவுப் பொருள் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சிறுநீரகக் கல் உருவாகும் அபாயம் 22 சதவிகிதம் குறைகிறது. 
 நினைவாற்றல்

ஓர் ஆய்வுக்காக சில கேள்விகளைக் குறும்படமாகத் தயார் செய்து வைத்திருந் தார்கள் இங்கிலாந்தின் ஆஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

கேள்விகள் கேட்கப்பட்ட போது, கண்களை மூடிக் கொள்ள அறிவுறுத்தப் பட்டவர்கள், கண்களைத் திறந்து கொண்டிருந்த வர்களைவிட 23 சதவிகிதம் அதிக கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கு காரணம், கண்களை மூடிக்கொள்ளும் போது மூளைக்குக் கொடுக்கப் படும் அழுத்தமும் கவனச் சிதறலும் குறைவது தான். 

நினைவாற்றலும் இதன் மூலம் அதிகரிக்கிறது’ என்கிறார் ஆய்வை மேற்கொண்ட மனோதத்துவப் பேராசிரியரான ராபர்ட் நாஷ்.
ரத்த அழுத்தம்

உடற் பயிற்சியை 5 நாட்களுக்கு மேல் நிறுத்தினால் மேம்பட்டு வந்த ரத்த நாளங்களின் செயல்திறன் மீண்டும் குறைவதாக ஓர் ஆய்வு கூறி யிருக்கிறது. 

இதனால் உடற் பயிற்சி செய்யாத வர்களைப் போலவே ரத்த அழுத்தமும் இதய நோய்களும் உருவாகும் வாய்ப்புகளும் உண்டு என்று எச்சரித்தி ருக்கிறது அந்த ஆய்வு.

தலைவலி

மைக்ரேன் எனப்படுகிற ஒற்றைத் தலை வலியால் அவதிப்ப ட்ட சிலருக்கு வலி நிவாரணி என்கிற பெயரில் போலியான ஒரு மாத்திரையைக் கொடுத்திரு க்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அடுத்த சில நிமிடங்களில் 25 சதவிகிதம் வலி குறைந்ததாக உணர்ந்திரு க்கிறார்கள். 

கொடுக்கப்பட்ட மாத்திரை வலிக்கானது அல்ல என்றாலும், அது வலி நிவாரணி என அவர்கள் நம்பியதே வலி குறைந்ததற்குக் காரணம் என்கிறது ஒரு தரப்பு.

எது எப்படியோ... பாசிட்டிவ் சிந்தனை என்பது வலிக்குக் காரணமான நியோரனல் சர்க்யூட் டுகளை தூண்டி விட்டு, வலியைக் குறைக்கும் என்கிறது விஞ்ஞானம்!
தியானம்
 
தியானத்தின் நன்மைகள் பற்றி அமெரிக்காவின் ‘வேக் ஃபாரஸ்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ ஆய்வு ஒன்று நடத்தியி ருக்கிறது. 

ஆய்வின் முடிவில் தியானத்தின் போது 39 சதவிகிதம் மனப்பதற்றம் குறைந்து அமைதியடைவதை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்தி ருக்கிறார்கள்.

தியானம் செய்யும் போது கோபம், பதற்றம் போன்ற எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் மூளையின் பகுதிகள் செயலிழந்து போவதை உணர்ந்தோம் என்று சிலிர்த்திருக் கிறார்கள் ஆய்வில் பங்கு கொண்ட அமெரிக்கர்கள். 
உடற்பயிற்சி
பாசிட்டிவாக சிந்தித்தால் வலி குறையும் !
இது உடற்பயிற்சி செய்கிறவர் களுக்கு சந்தோஷம் தரும் செய்தி. வாரத்தில் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறவர் களுக்கு பார்க்கின்ஸன் எனும் நரம்பியல் நோய் வரும் வாய்ப்பு 43 சதவிகிதம் குறைவதாக ஓர் ஆய்வு கூறியிருக்கிறது.

குறைந்தபட்சம் நாய்க் குட்டியைக் கூட்டிக் கொண்டு வாக்கிங்கோ அல்லது லிஃப்ட்டை பயன் படுத்தாமல் படிகளில் நடந்தாவது செல்லுங்கள் என்று ஆலோசனை யையும் கூறியிருக் கிறார்கள்
Tags: