வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் F செயல்பாடுகள் என்ன?

0

வைட்டமின் எஃப் என்பது கொழுப்பு அமிலங்களின் கலவையாகும். இதை சிக்கலானது என்றும் சொல்லலாம். வைட்டமின் சத்துகள் உடலுக்கு எப்போதும் அவசியமானது. 

வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் F செயல்பாடுகள் என்ன?
வைட்டமின்கள் என்னென்ன அவை எதற்கெல்லாம் உதவுகிறது. என்னென்ன உணவில் என்ன விதமான சத்துகள் இருக்கிறது என்பது குறித்து போதுமான அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறோம். 

அது போன்று பலருக்கும் வைட்டமின் எஃப் குறித்து தெரிவதில்லை. இதில் இருக்கும் அமிலங்கள் செல் கட்டமைப்பை வழங்கவும். 

மேலும் பல கொழுப்புகளோடு இணைந்து உடலில் இருக்கும் அனைத்து உயிரணுக்களுக்கும் அவற்றின் வெளிப்புற உள்புற அடுக்கின் முக்கிய அங்கமாக பங்களிக்கிறது. 

பின் இருக்கையிலும் காற்றுப்பைகள் - மெர்சிடிஸ் பென்ஸ் !

இவை உயிரணுக்களுக்கு நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது. இவை உடலுக்குள் ஆரோக்கியம் தரும் கொழுப்பாக மாற்றப்படுகிறது.

உடலின் இயல்பான வளர்ச்சிக்கும், கண் பார்வை, மூளை வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் இந்த வைட்டமின் எஃப் குறைபாடு ஏற்படுவது அரிதானது. 

இதற்கான பொதுவான அறிகுறிகளாக சொல்லப்படுவது வறண்ட சருமம், முடி உதிர்தல், புண் ஆறுவதில் தாமதம், சருமத்தில் புண், பார்வை பிரச்சனை போன்றவை உண்டாகக்கூடும்.

வைட்டமின் F செயல்பாடுகள்

இந்த ALA மற்றும் LA கொழுப்பு அமிலங்கள் மனித வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு உயிரணுக்களுக்கு செல் கட்டமைப்பை தருகிறது. இதர செயல்பாடுகளையும் கீழே அறியலாம்.

கலோரிகளை வழங்குதல்

வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் F செயல்பாடுகள் என்ன?

இந்த அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களுக்கு கட்டமைப்பையும் நெகிழ்வுத் தன்மையையும் அளிக்கிறது. மேலும் இது கொழுப்புகளை எளிதாக மாற்றி மற்ற கொழுப்புகளாக நம் உடல் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

மேலும் கண் பார்வை, அறிவாற்றலை அதிகரிக்கிறது. அதே மாதிரி நரம்புகளுக்கு சிக்னலை கடத்த பயன்படும் வேதிப் பொருளுக்கு இந்த கொழுப்புகள் அவசியம். 

இது போக நோயெதிப்பு மண்டல செயல்பாடுகள், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டம் போன்ற பல முக்கிய செயல்பாடுகளுக்கும் இந்த வைட்டமின் F உதவுகிறது.

விமானத்தின் ஜன்னல் இப்படி இருக்க காரணம் என்ன?

மூளைத்திறன்

ஒமேகா கொழுப்பு அமிலங்களை எடுப்பது உங்க மூளைத் திறனை அதிகரிக்கிறது. தேவையில்லாத பயம் மற்றும் மன அழுத்தத்தை விரட்டுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அழற்சியை குறைத்தல்

மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், நுரையீரல், மூளை மற்றும் ஏன் வயிற்றில் ஏற்படும் அழற்சி தொற்றை கூட ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூலம் குறைக்கலாம். அந்தளவுக்கு இதன் பயன் ஏராளம்.

இதய ஆரோக்கியம்

வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் F செயல்பாடுகள் என்ன?

இந்த ALA அமிலம் இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது. 1% ALA உடம்பில் இருந்தால் நீங்கள் 10 % வரை மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குழந்தை வளர்ச்சிக்கு

கருவுற்ற பெண்கள் இந்த வைட்டமின் F உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதய நோய் பாதுகாப்பு

வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் F செயல்பாடுகள் என்ன?

தீங்கு விளைவிக்கும் சாச்சுரேட்டட் கொழுப்புகளை உணவில் இருந்து நீக்கி விட்டு வைட்டமின் Fயை எடுத்துக் கொள்ளுங்கள். இது 21 % இதய நோய் ஆபத்தில் இருந்து உங்களை காக்கிறது.

விமானத்தின் உள்ளே சுவாசிப்பது எப்படி? 

டைப் 2 சர்க்கரை நோய்

200,000 பேரைக் கொண்டு ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் LA என்ற லினோலிக் அமிலம் கொண்ட நபர்களுக்கு சர்க்கரை நோயைக் கட்டுபடுத்த உதவி புரிகிறது என்பது தெரிய வந்துள்ளது. 

எனவே உணவில் நீங்கள் சேர்த்து கொள்ளும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கு பதிலாக இந்த அமில கொழுப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் 14 % வரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வைட்டமின் F உள்ள உணவுகள்

வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் F செயல்பாடுகள் என்ன?

நீங்கள் வைட்டமின் F நன்மைகளை பெற நினைத்தால் முதலில் வைட்டமின் F உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

பாதாம் பருப்பு, வால்நட்ஸ், ஆலிவ் ஆயில், சோயாபீன் ஆயில், ஆளி விதைகள், சூரிய காந்தி எண்ணெய், சியா விதைகள், ஆளி விதை எண்ணெய் 

மற்றும் மக்காச் சோள எண்ணெய் இவற்றில் வைட்டமின் F கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. 

எனவே இந்த உணவுகளை அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் சேர்த்து வந்தால் நோயின்றி வாழலாம்.

முடிவு

வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் F செயல்பாடுகள் என்ன?

தினமும் உங்கள் கலோரி உணவில் 1 % லினோலிக் அமிலம் இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். 

அதே பொன்று ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையமானது 4% வரை உட்கொள்வது ஆரோக்கியமானது என்று பரிந்துரைக்கிறது. 

முகேஷ் அம்பானி கார் பற்றி தெரிந்து கொள்ள !

ஒமேகா 6 உள்ள உணவுகளையும், ஒமேகா 3 இருக்கும் உணவுகளையும் எடுத்து கொள்ளும் போது நீங்கள் இது குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் பெரும்பாலான உணவுகளில் இவை இரண்டுமே உண்டு.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)