வெற்றி பெறுபவர்கள் செய்யும் செயல்கள் !





வெற்றி பெறுபவர்கள் செய்யும் செயல்கள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
வெற்றிக் காக எதையும் செய்யத் துணிந்த வர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு சிலர் தங்களைத் தானே வருத்திக் கொண்டு வெற்றியினை அடைவா ர்கள், ஆனால் ஒரு சிலர் மற்றவ ர்களை வருத்தி வெற்றிய டைவார்கள்.
வெற்றி பெறுபவர்கள் செய்யும் செயல்கள்
இவ்வாறு இருக்கை யில், சில வெற்றியா ளர்கள் மட்டும் சரியான வழியில் எளிதாக முன்னேறிச் செல்வர். 

அவர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்கள் ஒவ்வொரு நாளின் முடிவிற்கு முன்னரும் செய்யும் விஷயங்கள் புலப்படும். 

தினமும் காலையில் நமது செயல்க ளை திட்டமிட்டு செய்தால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது, 

அதையும் தாண்டி நாம் ஒவ்வொரு நாள் முடியும் முன்பும் செய்ய வேண்டிய செயல்கள் பல உள்ளன. அவற்றில் முக்கிய மான ஐந்து செயல்கள் இங்கு பட்டிய லிடப்பட் டுள்ளன.
1. மதிப்பிடுதல்: நான் இன்று செய்த உருப்படியான செயல் என்ன?

“ஒவ்வொரு நாளிலும் நாம் நம் கடமை யினை செய்தோம் என்றால் அதில் எத்தனை சதவீதம் நம் வளர்ச் சிக்கு உதவும்படிச் செய்து ள்ளோம்” என்று நம்மை நாமே மதிப்பிட வேண்டும்.

ஒவ்வொரு நாள் முடிவிலும் இதுபோன்ற மூன்று கேள்வி களை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

எனது கனவினை அல்லது இலக்கினை நோக்கிய இந்தப் பயணத்தில், அதையடைய இன்று நான் என்ன செய்தேன்?

இந்த நாளில் நான் செய்த இந்த செயலுக் காக எனக்கு நானே நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும், என்று எண்ணும் செயல் எது? இன்று நான் கற்றுக் கொண் டதில் இருந்து எப்படி முன்னேற முடியும்?
2. நாளைக்கான முக்கிய மூன்று முன்னுரிமைகள்

இன்றைய நாள் முடிவிலே நாளைய நாளுக்கான வேலை யினைத் தொடங்குங்கள்.

இதைத் தான் அமெரிக்க ஜனாதிபதி, ஒபாமா அவர்களும் கூட செய்கிறார், அவரின் அடுத்தநாள் இன்றைய நாளின் முடிவி லிருந்தே தொடங்கி விடுகிறது.

ஒவ்வொரு நாள் முடிவிலும் அவர் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், முடிக்க வேண்டிய இலக்குகள் என

தனக்கான முக்கிய மூன்று முன்னுரி மைகளை அவரே தேர்ந்தெ டுத்துக் கொள்வார். இதைத் தான் பல எழுத்தாள ர்களும் செய்கி ன்றனர்.

நாளின் முடிவில் அவர்கள் அடுத்த நாள் எதைப் பற்றி எழுத வேண்டும், எப்படித் தொடங்க வேண்டும் என முடிவு செய்து விடுகி றார்கள்.

இதனால் தான், ஒரு நாளின் தொடங்க வேலை களை விரைவாகச் செய்ய முடிகிறது எனவும் அவர்கள் கூறுகி றார்கள்.

நாளின் முடிவுக் கான செயல் பாடாக, நாளைய வேலைக் கான நோக்க ங்கள், பணிகள், கால அட்ட வணை மற்றும் வெளிப் படுத்த வேண்டிய விளை வுகள் என

எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம், இவை உங்களின் கனவு இலக்குக ளைப் பொறுத்து வேறுபடும்.

எது எப்படியி ருந்தாலும், நீங்கள் தூங்கும் முன் நாளை முடிக்க வேண்டிய முக்கிய மான மூன்று வேலை களைக் குறித்துக் கொள்ளுங்கள், இதன் விளை வினை நீங்களே காணலாம்.
3. தெளிவான இலக்குகள்

இரண்டு மனதுடன் எந்த வேலை யையும் செய்யக் கூடாது. அதாவது, ஒரே இலக்கு மட்டும் தான் உங்கள் மனதில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் இலக் கினை மாற்றிக் கொண்டே இருப்பது, இறுதி வரை நம்மை எதையுமே தெளிவாக செய்ய விடாது.

இதற்கு உங்கள் மனது ஒரு நிலையாக இருக்க வேண்டும். தேவை யில்லாத விஷய ங்களை நோக்கி சலனப்படக்கூடாது.

அதற்காகத் தான் ஒவ்வொரு நாள் முடிவிலும் நமது தெளிவான இலக்கினை நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால், ஒவ்வொரு நாள் வேலை க்குப் பின்னரும் நமது மூளை அதேயளவு புத்துணர்ச் சியுடன் இருப்பது இல்லை.

புத்துணர்வு இல்லாத மூளை புதிதாக யோசிக் கவும் செய்யாது, தெளிவாக சிந்தி க்கவும் செய்யாது. வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் பிரச்சனை யாக இருப்ப தாகத் தோன்றும்.

இதற்காகத்தான் உலகிலேயே மிகவும் கடினமான இராணுவத் தினரிடம் ஆய்வு ஒன்று மேற் கொள்ளப் பட்டது, 

அதில் அவர்கள் தங்களின் தெளிவான நிலைக்கு திரும்பு வதற்கு சில மணித் துளிகள் சீருடை யினை கழற்றுவது

அல்லது மனதினை வேறு எதிலாவது கவனத்தில் ஆழ்த்துவது போன்றவை உதவுவ தாக குறிப்பிட் டிருந்தனர்.

அது போலத் தான் நாமும் நமது மூளையி னை தெளிவாக வைத்தி ருக்க தினமும் முயற்சி செய்ய வேண்டும்.

இதற்காக சிறிய தொலைவு வரை நடக்கலாம், உங்களு க்குப் பிடித்த பாடல் களைக் கேட்கலாம்,

அப்படியும் உங்களின் அழுத்தம் குறைய வில்லையா? யோகா கற்றுக் கொள்ள செல்லுங்கள், பொழுது போக்கினை அதிகரி யுங்கள்,

குடும்பத்தி னருடனும், நண்பர்க ளுடனும் அதிக நேரம் செல விடுங்கள். ஆனால் எதிலும் ஒரு அளவு இருக் கட்டும்.
4. சுகமான தூக்கம் – தெளிவான முடிவு:

சுமார் 70 மில்லியன் அமெரிக்கர் கள், தூக்கம் சம்பந்தப் பட்ட பிரச்சினை களை எதிர் கொள்கின் றனர்.

இதில் பெரும்பாலா னவர்கள் தொழில திபர்கள். தனது தொழிலைப் பற்றிய சிந்த னைகள் இரவிலும் அவர்களை தொந்தரவு செய்வதே இதன் காரணம்.

தொழிலைப் பற்றிய அவர்களின் கவலை, சோர்வினை ஏற்படுத்தக் கூடியது. எதற்கும் அஞ்சாமல் தூக்குங்கள், 

நாளைய நாள் நமக்கு நல்ல நாளாக அமையும் என நம்புங்கள். உங்களின் படுக்கை யில் சாப்பிடுவது,

தொழில் சம்பந்த ப்பட்ட வேலை களை செய்வதைக் குறைத்துக் கொள்ளு ங்கள்.

படுக்கை யறை சுகமான தூக்கத் திற்கு மட்டும் உதவட்டும். அளவான தூக்கம் உங்களின் அடுத்த நாளை சரியாக துவங் குவதற் கான மிகச் சரியான முடிவு.
5. உங்கள் விருப்பத்தி ற்கான செயல்

நாளின் 24 மணி நேரமும் நாம் வேலை செய்வ தற்கு நாம் இயந்திரம் அல்ல. நாள் முழுக்க வேலை செய்து விட்டு இரவிலும் அதையே தொடர்ந்தால் அந்த இலக்கின் மீது நாளைட வில் வெறுப்பு தான் தோன்றும்.

அதனால் நாளின் முடிவில் உங்களுக்குப் பிடித்த ஒரு செயலை செய்யு மாறு வைத்துக் கொள்ளு ங்கள்.

அது எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம். அதனால் நீங்கள் மகிழ்ச்சி யடைய வேண்டும் அவ்வளவு தான்.

மேற் கூறியவ ற்றை எல்லாம் சொல்வது எளிதுதான் என்றாலும், நாம் செய்வது சற்று கடினம் தான்.

கடினம் தானே தவிர முடியாத காரியம் இல்லை. தொடர்ந்து இதனை செய்து பாருங்கள் ஒரே மாதத்தில் உங்களில் ஏதாவது மாற்றம் தெரியும்.
Tags: