வியப்பூட்டும் புகைப்படம் முதலையின் வாயில் | Surprisingly, in the mouth of the crocodile photo ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

வியப்பூட்டும் புகைப்படம் முதலையின் வாயில் | Surprisingly, in the mouth of the crocodile photo !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
தான்சானியாவின் காட்டுபகுதியில் உள்ள சிவடு ஏரியில் மஞ்சள் நிற நாரை ஒன்று மீன்களை பிடித்து உணவாக்கி கொண்டு இருந்தது. அப்போது புலித்தலை மீன் ஒன்று நீரில் நீந்தி வந்து கொண்டு இருந்தது.
அதை குறிவைத்து அந்த பறவை நகர்ந்து கொண்டு வந்தது. லபக் என்று தனது கூரிய அலகால்  மீனை கவ்வியது அதே நேரம்  பசி உடைய முதலை ஒன்றும் அதே மீனை குறி

வைத்து வந்து உள்ளது அதுவும் ஒரே நேரத்தில் அந்த மீனை குறிவைத்து தனது ரம்ப பற்கள் அடங்கிய வாயை நீட்டி உள்ளது.

கண்ணிமைக்கும் நேரம் தான்  முதலையின் வாயில் மாட்டி இருந்தால் மீனுடன் சேர்ந்து நாரையும் உணவாகி இருக்கும் ஆனால் அதிர்ஷ்டவசமாக நாரை தனது  அலகை மின்னல் வேகத்தில் வெளியே இழுத்து கொண்டது .

ஆனால் இப்போது அது குறிவத்த மீனின் தலை மட்டுமே அதன் வாயில் சிக்கியது  மற்ற பகுதியை முதலை கபளிகரம் செய்து விட்டது.

மேலும் முதலை  மீன் வேட்டையாட அங்கிருந்து நகர்ந்தும் சென்று விட்டது. இந்த மீன் வேட்டை காட்சியை புகைப்பட கலைஞர் மார்க் ஷெரிடன் ஜான்சன் தனது கேமிராவில் பதிவு செய்து உள்ளார்.  நான் நாரை நீரில் மீனை பிடிக்க விளையாடுவதை பார்த்து கொண்டு இருந்தேன்.

அப்போது மீனை வேட்டையாடிய நாரையும் முதலையும் சேர்ந்து வாயை நீட்டியதை பார்த்தேன் சிறிது நேரத்தில் நாரையில் வாயில் மீனின் தலை மட்டுமே இருந்தது.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause