காப்புரிமை என்பது | Patent !

கண்டுபிடிப்பு களுக்கான காப்புரிமைகள் (Patent) அரசாங் கங்களால் அளிக்கப் படுகின்றன. 


ஒருவர் தன் கண்டு பிடிப்பின் விற்பனை உரிமை மூலம் சில ஆண்டு களுக்குப் பணம் ஈட்ட காப்புரிமை வழி செய்கிறது.

வேறு யாரும் அதே பொருளை அந்தக் கால கட்டத்தில் காப்புரிமை பெற்றவரின் அனுமதி இல்லாமல் தயாரித்தால் அது தண்டனை க்குரிய செயலாகும்.

காப்புரிமை க்கான விண்ணப் பங்கள் மூலம், கண்டுபிடிப்பு மற்றும் கண்டு பிடிப்பாளர் பற்றிய தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஆனால், பல கண்டு பிடிப்புகளை உருவாக்கிய கண்டுபிடிப் பாளர்கள், காப்புரிமை முறை அறிமுக மாவதற்கு முன்பே இறந்து விட்டார்கள்.

இன்னும் பலர் கண்டு பிடிப்புகளை நிகழ்த்திய போது எழுத்து முறையே கண்டுபிடிக்கப் படவில்லை.


அதனால் அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் பதிவாக வில்லை.

உலகை மாற்றிய பல முக்கிய கண்டு பிடிப்புகளைச் செய்தவர்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாது.

முதல் காப்புரிமை, இத்தாலி நாட்டில் உள்ள புளோரிடா நகரில் 1421-ம் ஆண்டில் வழங்கப் பட்டது.
Tags: