ஸ்டெம் செல்ஸ் சிறப்பு விழிப்புணர்வு பார்வை ! Stem Cells Awareness View! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

ஸ்டெம் செல்ஸ் சிறப்பு விழிப்புணர்வு பார்வை ! Stem Cells Awareness View!

Subscribe Via Email

நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிரினங்களிலும் உயிர் உள்ளது என்பதை நாம் மறுப்பதில்லை. உயிர் என்பது என்ன என யோசிப்போ மேயானால், விஞ்ஞான பூர்வமான பதில் உயிரணுக்களின் இயக்கம் என்பது தான். எல்லா உயிரினங் களிலும் உயிர் அணுக்கள் உண்டு.
ஸ்டெம் செல்ஸ்
ஆங்கிலத்தில் செல் (Cell) எனும் சொல் உயிரணுவைக் குறிக்கும். மனிதர்களின் உடலில் எலும்பு மஜ்ஜையில் (Bone Marrow)ல் தான் அதிகமாக ஸ்டெம் செல் எனும் அடிப்படை செல் காணப்படும். ஸ்டெம் செல்கள் இந்த நூற்றாண்டின் உன்னதமான கண்டுபிடிப்பு எனச் சொல்லலாம்.ஏனெனில் தீர்க்க முடியாது எனக் குறிப்பிட்டு, மருந்து மாத்திரைகளை நம்பியே மருத்துவம் செய்து கொண்டு வரும் நோயாளிகளு க்கு ஸ்டெம் செல்களின் கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதம் தான்.

ஸ்டெம் செல்களால் தீர்க்க முடியாத புற்று நோய், இருதயக் கோளாறு, பார்கின்சன்ஸ், அல்சமீர், சர்க்கரை வியாதி என பல வகையான நோய்களுக்கு அருமருந்தாக வந்துள்ளது.

மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் இனி நூறு ஆண்டுகள் ஆரோக்கிய மாக மனிதனை வாழ வைக்க இவ்வகை ஸ்டெம் செல்கள் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஸ்டெம் செல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விதையணுக்கள், நமது உடலில் உள்ள எழும்பு மஜ்ஜையில் ( போன் மேரோ) இருக்கின்றன.

இந்த செல்களை, ரத்த சுத்திகரித்தல் முறையில் எடுத்து, பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஸ்டெம் செல் தெரப்பி, தற்போது ஆங்கில மருத்துவத்தில் மாபெரும் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.

குறிப்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் சிறுநீரக நோயாளிகளுக்கு,
இதயத்தை ஆரோக்கியமா வச்சுக்கணுமா?
ஆரோக்கியத்துடன் கூடிய பலம் !
களிமண் குளியல் உள்ள சிறப்புகள் !
அளிக்கப்படும் ‘ஸ்டெம் செல் தெரபி’ இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இருவரின் ஸ்டெம் செல்களைக் கொண்டு, அவருக்கான இதயம், நுரையூரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால், மனிதர்கள் நோயிலிருந்து உயிர் பிழைக்கலாம்! உண்மையில் அது மருத்துவத் துறையின் பொற்காலமாக அமையப் போவது உறுதி.

ஸ்டெம் செல் சிகிச்சையின் வரலாறு... 

முதன் முதலில் ருதால்ஃப் லுட்விக் கர்ல்விர்சோவ் (1821- 1912) என்பவர் ஒரு செல்லிலிருந்து புதிய செல் பிரிந்து வளரும் என்ற நவீன செல் கோட்பாட்டை வெளியிட்டார்.
ஸ்டெம் செல் சிகிச்சை

இவரே நவீன செல் பற்றிய அறிவியலின் முன்னோடி. இவருடைய மாணவரான ஜூலியஸ் பிரடெரிச் கொஹெய்ம் புண்களில் பழுதுபட்ட செல்களின் மறுசீரமைப்பு புதிய செல்கள் ரத்த ஓட்டத்தின் மூலமாகவே எலும்பு மஜ்ஜை (Bone Marrow) யிலிருந்து புண்களை வந்தடைந்து வளருகின்றது என்பதனையும் கண்டறிந்தார்.

P.E டொன்னால் தோமஸ் ஆராய்ச்சியில் எலும்பு மஜ்ஜை குறைபாடுள்ள நோயாளியின் ரத்த ஒட்டத்தில் மற்றொருவரிடம் எடுக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை செல்களை செலுத்தி ஆராய்ந்த போது புதிய எலும்பு மஜ்ஜை உருவாகியதுடன் புதிய ரத்த செல்களும் உருவானது.

இதில் பலவகை உள்ளது. 
ஸ்டெம் செல்களிலிருந்து மலட்டுத்தன்மை பற்றிய நுண் அறிவு.. 

Kyoto University யில் பணியாற்றும் Mitinori Saitou தலைமையிலான ஜப்பானிய விஞ்ஞானிகளே இந்த புதிய சாதனையைச் செய்தவர்கள் ஆவர். மலட்டுத் தன்மை பற்றிய நுண் அறிவு, நெறி முறைகளுடன் முரண்படாத தன்மை,


இயற்கையுடன் இசைவான நவீன சிகிச்சை முறைகள் போன்ற விடயங்களில் ஆய்வாளர் களுக்கு புதிய எல்லைகளை இந்த ஆய்வு திறந்து விட்டிருக்கிறது.

முட்டை எவ்வாறு உருவாகி வளர்கிறது என்பதன் சூட்சுமங்களைக் கண்டறிந்து குழந்தையில்லா பெண்களில் இதனைப் பயன்படுத்த முடியும். ஸ்டெம் செல்களி லிருந்து அவர்களுக் கான முட்டைகளை உருவாக்க லாம். 

அதிலிருந்து அவர்களது பாரம்பரிய அம்சங்களுடன், அவர்களது ஊனும் உடலும் போன்ற சொந்தக் குழந்தைகளை உருவாக்குவதற் கான வழி வகைகளை புதிய தொழில் நுட்பங்களுடன் செயற்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
சுண்டெலி கருத்தரிப்பு... 

Mitinori Saitou தலைமையிலான குழுவினர் சுண்டெலியி லிருந்து கலங்களை எடுத்து அவற்றை மரபியல் ரீதியாக மீள் நிரலாக்கம் (Reprogramme) செய்ததன் மூலம், அதனை முட்டையின் முன்னோடிக் கலங்களாக (egg precursor cells) மாற்றினர்.

பெண் சுண்டெலியின் பொருத்தமான உடற்கலங்களுடன் அவற்றைக் கலப்பதன் மூலம் மாற்றி யமைக்கபட்ட சூலகங்களை உருவாக்கினர். சுண்டெலியின் உடலிற்குள் இவற்றை உட்செலுத்திய போது காலகதியில் இவை முட்டைக ளாகப் பரிமணித்தன.

இவ்வாறு கிடைத்த முட்டைகளை பிரித்தெடுத்து செயற்கை முறையில் ஆய்வகத்தில் கருத்தரிக்க (invitro fertilisation IVF) வைத்தனர். டெஸ்ட் ரியூப் முறை என்போமே, அது போலக் கருத்தரிப்பு நிகழ்த்தப் பட்டது.

இதன் மூலம் பெற்றெடுத்த சுண்டெலிக் குஞ்சுகள் நல் ரோக்கிய மானவை. இவ்வாறு ஸ்டெம் செல்சிலிருந்து முட்டையை உருவாக்கும் முயற்சி இப்பொழுது தான் புத்தம் புதிதாகச் செய்யப்பட்டது எனச் சொல்ல முடியாது. 

ஏனெனில் ஏற்கனவே 2003ம் ஆண்டளவில் பெனிசில்வேனியா பல்கலைக் கழகத்தில் (University of Pennsylvania) செய்யப் பட்டிருந்தது. ஆனாலும் அது குட்டியைப் பெற வைக்கும் அளவிற்கு செல்ல வில்லை. 

இப்பொழுது செய்யப்பட்ட செயன் முறையின் வளர்ச்சியானது பாலூட்டிகளில் மட்டுமின்றி மனிதர்களிலும் பெண்களின் கரு ஆற்றலை உடலுக்கு வெளியே வளர்த்து உள்ளே வைக்கும் பொறிமுறைக்கு வலுவான அடித்தளமாக அமைகிறது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இந்த ஆராச்சிய்க்கு சைட்டு குழவினர் இரண்டு வகையான ஸ்டெம் செல்ஸ்களைப் (மூலக் கலங்கள்) பயன்படுத்தினர். 

முதலாவது கருவுரு அல்லது முளையம் என்று சொல்லப்படுவ திலிருந்து பெறப்பட்ட ஆதி ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells) ஆகும். இவை உடலின் எந்தப் பகுதியின் கலங்களா கவும் மாற்ற மடையக் கூடியவை யாகும்.

தூண்டுதலால் பெறப்பட்ட பன்முறை ஆற்றலுள்ள ஸ்டெம் செல்ஸ்induced pluripotent stem cells ஆகும். உதாரணமாக சருமத்தி லிருந்து பெறப்பட்ட கலத்தை மறு நிரலாக்கம் செய்து முளையஸ்டெம் செல்களின் நிலைக்கு மாற்றிப் பெறப்படுவை. 

குருதிப் புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை 1968 ஆம் ஆண்டு முதலில் செய்யப் பட்டது. இதற்கும் அடிப்படை ஸ்டெம் செல்களே. நீரிழிவு, இருதய நோய்களில் இதைப் பயன் படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடை பெறுகின்றன.

பக்டிரியா பங்கஸ் மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் ஏற்கனவே ஸ்டெம் செல் பயன்படுகிறது

ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணு.. 

கியோட்டோ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி யாளர்கள் குழுவானது ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணுவை ஒரு வருடத்திற்கு முன்னரே உருவாக்கி யுள்ளார்கள்.


அதனை இயற்கையாக எலியிலிருந்து பெறப்பட்ட முட்டையுடன் செயற்கை முறையில் கருக்கட்டச் செய்து, எலிகளை உருவாக்கி யுள்ளனர்.

ஒப்பீட்டளவில் ஸ்டெம் செல்லிருந்து விந்து (Sperm) உருவாக்கல் சுலபமானது. ஏனெனில் விந்தணு வானது எளிமையான கலங்கள் ஆகும்.
ஸ்டெம் செல் என்றால் என்ன?
ஆனால் முட்டையினது கலம் (egg) மிகவும் சிக்கலானவை. எனவே தான் இப்புதிய செயன் முறையானது அசாதாரணமான வெற்றியாகக் கருதப் படுகிறது. பெறுபேறுகளின் விகிதாசாரம் குறைந்தளவே இருந்த போதும் ஸ்டெம் செல்லிருந்து பெறப்பட்ட முட்டையி லிருந்து

ஆரோக்கியமான சுண்டெலி களை உருவாக்கிய விகிதாசாரம் விகிதம் குறைவாக இருந்தது. சாதாரண முட்டையி லிருந்து 17.9% விகிதம் உருவாக்க முடிந்தபோது ஸ்டெம் செல் முட்டையி லிருந்து 3.9% சதவிகிதமே உருவாக்க முடிந்தது.

ஆனாலும் இதை ஒரு பின்னடைவாகக் கருத முடியாது குழந்தைப் பேறற்ற பெண்களில் முட்டைகளை உருவாக்கக் கூடிய இம்முயற்சி மிக வரவேற்கத் தக்கது. அறிவியல் பாய்ச்சலுடன் கூடிய மிக முன்னேற்ற கரமான தொழில் நுட்ப வளர்ச்சி இதுவாகும்.

இந்தச் செயல்முறை விகிதாசார ரீதியில் பெரு வெற்றியல்ல என்ற போதும், குஞ்சுகள் ஆரோக்கிய மாகப் பிறந்து வளர்ந்தன என்பதும், அவை வளர்ந்த பின்னர் மலட்டுத் தன்மையின்றி கருவளம் கொண்டவை யாக இருந்தன என்பதும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஆகும்.

புதிய எல்லைகள் வகுக்கப்படும்... 

நீண்ட காலம் எடுப்பதும் அர்ப்பணிப்புடன் கூடியதுமான இச்செயன்முறை, புத்தறிவியல் ரீதியில் ஒரு முக்கியமான மைற்கல் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆயினும் இவை மேலும் முன்னேற்றம் அடைந்து மனிதர்களில் களஆய்வு ரீதியாகச் செய்யப் படுவதற்கு இன்னமும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

ஸ்டெம் செல்களி லிருந்து ஆய்வகத்தில் முட்டைகளை உருவாக்க முடிவதானது மலட்டுத் தன்மைக்கான காரணங் களைப் புரிந்து கொள்ளவும் புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப் படுத்தவும் உதவும்.

அதற்கு மேலாக முட்டையின் வளர்ச்சி, அவை முதிர்ச்சியடையும் விதம், ஏன் அவை சிலரில் தவறாக உருவாகின்றன,

அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி போன்ற விடயங்களில் ஆழமான நுண்ணறிவு பெற உதவும். இது மலட்டுத் தன்மைக்கான சிகிச்சையில் பாரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்

எய்ட்ஸை குணமாக்கிய ஸ்டெம் செல்ஸ் புதிய சாதனை... 

தற்போது எய்ட்ஸ் யால்பாதிக்கப் பட்டஇரண்டு அமெரிக்கர்கள், ஸ்டெம்செல் சிகிச்சைக்குப் பின்னர் பூரண குணமடைந்துள்ளனர். இதனால், எய்ட்ஸ் நோய் சிகிச்சையில் புதிய சகாப்தம் தொடங்கி யுள்ளது.

இது என்னபுதுக்கதை என்கிறீர்களா? அமெரிக்கா வின் பாஸ்டன் நகரில்உள்ள ‘திமோத்தி ஹெண்ட்ரிச்’ மருத்துவ மனையில் இந்த நோயாளிகள் இருவருக்கும், எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் செலுத்தப் பட்டன.

இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இருந்து வந்த ஹெச்.ஐ.வி. கிருமிகள் ரத்தத்தில் இருந்தும்,


தசைகளில் ருந்தும் முழுமையாக அகன்றிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் ஹெச்.ஐ.வி. தொற்றில் இருந்து விடுதலைப் பெற, ஸ்டெம் செல் சிகிச்சை புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி யுள்ளது.

எனினும், இந்த இரு நோயாளி களுக்கும் மீண்டும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என, மருத்துவ மனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டாக்டர். சீனிவாசன். விவரங்களுக்கு -  044 - 28351200, 044 - 28150300

வருங்காலத்தில் நாம் நம்முடைய சந்ததிகளுக்கு செல்வத்தை சேமிக்கின் றோமோ இல்லையோ, தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்து வைத்து, நம் குழந்தை களுக்கு ஏதேனும் வியாதிகள் ஏற்பட்டால், தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல் மூலம் சரிசெய்யலாம்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close