கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?

எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றி பேசும் போது முதலில் நினைவுக்கு வருவது அவற்றின் லோகோவாகும். 
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
உலகில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பிராண்டுக்கும் லோகோக்கள் உள்ளதை நாம் கவனித்திருப்போம். சில சந்தர்ப்பங்களில் இந்த லோகோக்கள் காரணமாகவே சில தயாரிப்புகள் அல்லது சேவைகள் பிரபலமாகி விட்டன. 

அந்த வகையில் சில வாகனங்கள் முதலிடத்தைப் பெறுகின்றன. வாகனங்கள் அவற்றின் பிராண்ட் அல்லது பிராண்ட் பெயர் காரணமாக சந்தையை உருவாக்கிக் கொண்ட ஒரு தயாரிப்பாகும். 

எனவே இந்த லோகோ அல்லது ஒரு வாகனத்தின் சின்னம் அந்த சந்தையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. 
எந்தவொரு வாகனத்தின் பெயரையும் நாம் கூறும் போது, ​​முதலில் நினைவுக்கு வருவது அந்த வகை வாகனத்தின் லோகோவாகும்.
 
அந்த ஒவ்வொரு லோகோக்களுக்கும் பின்னால் ஒரு கதையிருக்கும். அப்படி விலையுயர்ந்த உலக பிரபலமான கார் நிறுவனங்களின் லோகோவுக்கு பின் உள்ள கதையையும், அதனுடைய அர்த்தத்தையும் இப்போது பார்க்கலாம்.
 
மிட்சுபிஷி லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
மிட்சுபிஷி எங்களுக்கு மிகவும் பரீட்சயமான வாகன நிறுவனமாகும். இந்த மிட்சுபிஷி வாகனத்தின் சின்னம் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட மூன்று வைர அடையாள சின்னமாகும். 

1870ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் நிறுவப்பட்டபோது, ​​அதன் நிறுவனர் யடாரோ இவாசாகி, இரண்டு சந்ததியினரின் சின்னங்களால் ஆன லோகோவைப் பயன்படுத்த முடிவு செய்தார். 

தோசா வம்சத்தின் முதல் சின்னம், மூன்று ஓக் இலைகள் மற்றும் இவாசாகி குடும்பத்தின் மூன்று அடுக்கு நீர் செஸ்னட் இலை சின்னம் ஆகியவற்றின் கலவையாகும். 

இது 1914இல் சிறிய மாற்றங்களின் பின்னரே பதிவு செய்யப்பட்டது.
 
ஆஸ்டன் மார்டின் லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பாண்டால் அதிகம் பயன்படுத்தப்படும் கார்களில் ஒன்றான ஆஸ்டன் மார்ட்டின் பெயரில் உள்ள ஆஸ்டன், ஆஸ்டன் என்ற மலையைக் குறிக்கும். 

மார்ட்டின் என்பது இந்த நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான லயோனல் மார்ட்டினின் பெயராகும். காரின் லோகோவில் வேகத்தைக் குறிக்கும் இறக்கை , 1927-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. 

இது பெண்டிலே நிறுவனத்தின் விங்கிட் பி லோகோவை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப் பட்டது.
ஆடி லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
நாம் அறிந்த வகையில் Audi காரில் இன்டர்லாக் ரிங் அல்லது 4 ரிங் போன்ற லோகோ உள்ளது. இந்த நான்கு மோதிரங்கள் ஒரு வாகனத்தின் நான்கு சக்கரங்களை அடையாளப் படுத்துவதாக சிலர் நினைக்கிறார்கள். 

மற்றவர்கள் இந்த நான்கு மோதிரங்கள் ஒலிம்பிக் மோதிரங்களுடன் தொடர்புடையவை என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த லோகோவின் பின்னால் உள்ள உண்மையான கதை இது தான்.
 
இந்த Audi நிறுவனம் ஓகஸ்ட் ஹார்ச் என்ற நபரால் 1909 இல் தொடங்கப் பட்டது. 1932 ஆம் ஆண்டில் நிறுவனம் அதன் பெயரை Audi என்று மாற்றியது. 

ஆகஸ்ட் ஹார்ச்சின் பெயரில் உள்ள ஹார்ச் என்றால் ஜெர்மன் மொழியில் கேளுங்கள் என்று பொருள். கேளுங்கள் என்ற அதே வார்த்தையின் அர்த்தம் லத்தீன் மொழியில் Audi. 

இப்படித் தான் இந்த பெயர் வந்தது. இந்த பெயர் மாற்றத்துடன் Audi 4 நிறுவனங்களுடன் இணைந்து கொண்டது. அதைக் குறிக்கவே 4 வளைய சின்னம் பயன்படுத்தப் படுகிறது.
பிஎம்டபுள்யூ லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
பவேரியன் மோட்டார் வொர்க்ஸ் என்பதின் சுருக்கமே பிஎம்டபுள்யூ. லோகோவில் உள்ள வெள்ளை மற்றும் நீல நிறங்கள் பவேரியாவின் கொடியை குறிக்கிறது. 

வெளியில் உள்ள கருப்பு வட்டம் பிஎம்டபுள்யூ வின் தாய் நிறுவனமான ராப்பின் லோகோவிலிருந்து வடிவமைக்கப் பட்டது.
 
ஹூண்டாய் லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
ஹூண்டாய் என்பது தென்கொரியாவில் தயாரிக்கப்படும் வாகனம். இதன் பெயர் H எழுத்துடன் தொடங்குவதால் அதன் லோகோ எங்களுக்கு ஒரு எச் போல் தெரிகிறது. 

இந்த லோகோவிற்கும் இதுவே பயன்படுத்தப் படுகிறது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த லோகோவில் எச் எழுத்துக்கு அப்பாற்பட்ட மற்றொரு அடையாள அர்த்தம் உள்ளது. 

இரண்டு பேர் கைகளைப் பிடித்து நட்பை வெளிப்படுத்துவதை இது சித்தரிக்கிறது. ஒன்று நிறுவனத்தையும் மற்றொன்று வாடிக்கையாளரையும் குறிக்கிறது. 
இந்த ஹேண்ட்ஷேக் இருவருக்கும் இடையிலான நம்பிக்கையையும் திருப்தியையும் குறிக்கிறது. மேலும், அதைச் சுற்றியுள்ள ஓவல் வடிவம் உலகளாவிய வரம்பைக் குறிக்கிறது.
 
பெண்டிலே லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
பெண்டிலே நிறுவனம் முதன் முதலில் விமான இன்ஜின்கள் தயாரித்து வந்ததால், பெண்டிலேவின் லோகோவில் சிறகுகள் வடிவமைக்கப் பட்டன.
 
புகாட்டி லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
புகாட்டியை சுற்றி உள்ள 60 புள்ளிகளுக்கு பின் 2 கதைகள் உள்ளன. இந்த புள்ளிகள் முதலில் முத்துக்களைக் குறிக்கின்றன. 

மேலும் புகாட்டி இன்ஜினில் கேஸ்கட்டுகளுக்கு பதிலாக வடிமைக்கப்பட்டுள்ள சேஃப்டி வயர்களையும் குறிக்கின்றன. புகாட்டி என்பது இந்த நிறுவனத்தை தொடங்கிய எட்டோர் புகாட்டியின் பெயராகும்.
 
டொயோட்டா லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
டொயோட்டா இலங்கையில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் விரும்பப்படும் வாகனங்களில் ஒன்றாகும். இந்த டொயோட்டா லோகோவைப் பற்றி மக்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். 

இந்த வாகனம் ஜப்பானில் தயாரிக்கப்படுவதால் அந்த நாட்டின் விவசாய மற்றும் மத பின்னணியுடன் சேர்ந்ததால், கிண்ணத்திற்குள் ஒரு நெல் விதை இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். 

ஆனால் இதுவே டொயோட்டா சின்னத்தின் உண்மையான கதை, லோகோவின் நடுவில் உள்ள இரண்டு ஓவல் வடிவங்கள் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளரைக் குறிக்கின்றன. 
இரண்டையும் ஒருவருக்கொருவர் மேல் இணைப்பது இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகிறது. டொயோட்டா அதன் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய லோகோவை 1989 இல் வெளியிட்டது.
 
ஃபெராரி லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
ஃபெராரியின் லோகோவின் பின்னால் உள்ள கதை மிகவும் சுவாரசியமானது. இந்த லோகோவில் மேலே உள்ள வண்ணங்கள் இத்தாலி நாட்டுக் கொடியின் வண்ணத்தைக் குறிக்கின்றன. 

நடுவில் உள்ள மஞ்சள் வண்ணம் ஃபெராரி நிறுவனத்தை தொடங்கிய என்ஸோ ஃபெராரியின் சொந்த நகரமான மொடெனா நகரத்தை குறிக்கிறது.

லோகோவில் முன்னங்கால்களைத் தூக்கியபடி உள்ள கருப்பு குதிரைக்கு பின்னால் ஒரு கதை உண்டு. 

முதல் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக சண்டையிட்டவர் இத்தாலி நாட்டு போர் விமான பைலட் ஃபிரான்ஸெஸ்கோ பராக்கா. 34 விமானங்களை வீழ்த்திய இவர் தேசிய அளவில் கதாநாயகனாக கொண்டாடப் பட்டார். 

அவரது போர் விமானத்தின் முன் பகுதியில் இதே போன்ற கருப்பு குதிரையின் படத்தை அவர் வரைந்திருந்தார். பின்பு பராக்கா 1918-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
 
பராக்காவின் தாயையும் தந்தையையும் ஃபெராரியின் நிறுவனர், என்சோ ஃபெராரி சந்தித்தார். 

அப்போது பராக்காவின் தாய் ஃபெராரியை, அவர் மகனின் விமானத்திலிருந்த குதிரையை அவர்களின் லோகோவில் பயன்படுத்தச் சொன்னார். 
அது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் எனவும் அவர் சொன்னதை யடுத்து என்ஸோ அதே குதிரையின் படத்தை தன் லோகோவிலும் வடிவமைத்தார்.
 
மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
மெர்சிடிஸ் பென்ஸ் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நிறுவனம் மற்றும் அதன் சின்னம் முன்பு இருந்ததைவிட வித்தியாசமானது. 

பார்ப்பதற்கு மூன்று துருவங்களை கொண்ட நட்சத்திரம் போல் இருக்கும் இந்த லோகோவில் சித்தரிக்கப்படும் விடயங்கள், பூமி, கடல் மற்றும் வானம் முழுவதையும் குறிக்கின்றன. 

மேலும் இந்த நிறுவனம் முழு உலகத்தையும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் வெளிப்படுத்துகிறது.
 
ஜாகுவார் லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் வரை ஜாகுவார் கார்கள் எஸ் எஸ் என்ற பெயரிலேயே விற்பனைக்கு வந்தன. 

இது ஹிட்லரின் நாசிப் படைகளின் எஸ் எஸ் பெயரை தாங்கி யிருந்ததால், இதன் பெயர் ஜாகுவார் என மாற்றப்பட்டது. மேலும் முன்னேறுவதையும், கம்பீரத்தையும் ஜாகுவார் விலங்கு குறிப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
 
மஸ்தா லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
மஸ்தா என்பது இலங்கையில் நன்கு அறியப்பட்ட ஒரு வாகன வகையாகும். இது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது நாம் காணும் மஸ்தா லோகோ ஒரு சின்னம். 

அது அவ்வப்போது மாறி விட்டது. தற்போதைய லோகோ எம் எழுத்தை சித்தரிக்கிறது. 
mazda நிறுவனத்தின் வாசகமான light toward the future என்பதை சித்தரிப்பதற்காகவே அதில் உள்ள அந்த எம் எழுத்து, வளையத்தை தாண்டி சற்றே வெளியே சென்றுள்ளது.
 
ரோல்ஸ் ராய்ஸ் லோகோ
கார் லோகோ சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தொடக்கத்தில் விமான இன்ஜின்களையும், விலையுயர்ந்த கார்களையும் தயாரித்துக் கொண்டிருந்தது. 

இதனுடைய லோகோவை வடிவமைத்தவர் சிற்பி சார்லஸ் ராபின்சன். இந்த லோகோவில் உள்ள பெண் ராபின்சனின் காதலியான எலியோனர் தராண்டன்னை குறிக்கிறது.
Tags: