காக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்? தெரியாத பதில் !

0

இனப்பெருக்கம்… இது தான் பூமியில் வாழ்கின்ற அசையும் உயிர்கள், அசையா உயிர்கள் என்று அனைத்திற்குமான அடிப்படை ஆதாரமாக இருந்து வருகின்றது. 

காக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்? தெரியாத பதில் !
பரிணாமத்தின் பாதையில், இங்குள்ள அனைத்து வகையான உயிரினங்களும் ஏதாவதொரு வகையில் தம் இனத்தைப் பெருக்குவதில் தான் முதல் கவனம் செலுத்துகின்றன. 

அதிலும் முட்டையிடும் குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்களில் பல வகைகள் உள்ளன.

பாராசிடிக் பறவைகள்

பாராசிடிக் பறவைகள்

அதாவது, கூடுகட்டி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பறவைகளுடைய கூடுகளைச் சார்ந்து, 

தம் குஞ்சுகளை வளர்க்க வேறு பறவையினத்தைச் சேர்ந்த தாய்ப் பறவையைச் சார்ந்து இருக்கின்ற பறவைகளும் இருக்கின்றன. 

அவற்றின் வாழ்வியலும் அவை சார்ந்திருக்கும் பறவைகளுடைய வாழ்வியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

தன் முட்டையை அடைகாத்து, அது பொறித்த பிறகு, குஞ்சுகள் பறக்கத் தொடங்கும் வரை கவனித்து, உணவளித்துப் பராமரித்துக் கொள்ளும் வேலையை, 

சுவையான சத்துமிக்க பிரக்கோலி பரோட்டா செய்வது எப்படி?

நேரத்தை தன்னுடையதாக எடுத்துக் கொள்ளாமல், வேறு பறவையின் கையில் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுகின்றன. 

அப்படிப்பட்ட பறவைகளை `பாராசிடிக் பறவைகள்’ என்றும் இந்த முறையை `பாராடிசிசம்’ என்றும் அறிவியல் துறையில் அழைக்கின்றனர். 

இதை ஒட்டுண்ணித் தன்மை என்று தமிழில் அழைக்கின்றனர். 

ஒட்டுண்ணித் தன்மை

ஒட்டுண்ணித் தன்மை

அதாவது, வாழ்விற்காக, பிழைத்திருப்பதற்காக மற்ற உயிரினங்களைச் சார்ந்து வாழும் உயிரினத்தின் வாழ்வியல் முறை. 

தாவரங்களில் ஒரு மரத்தைச் சார்ந்து காளான் உட்படப் பல்வகைச் சிறு தாவரங்கள் முளைப்பதைப் பார்த்திருப்போம். 

அவை, அந்த மரத்தின் ஊட்டச்சத்துகளில் குறிப்பிட்ட அளவை எடுத்துக் கொண்டு வாழக்கூடியவை. 

தனக்குத் தேவைப்படும் ஊட்டச் சத்துகளுக்காக, அது முளைத்திருக்கும் மரத்தைச் சார்ந்திருப்பவை. 

அதே போல, பறவைகளில் இளம் குஞ்சுகளைப் பராமரித்து, வளர்க்கும் வேலையை இன்னொரு பறவையிடம் விட்டு விடுவனவற்றை 

பாராசிடிக் பறவைகள் (Parasitic bird) என்றும் அவை சார்ந்து வாழ்கின்ற பறவையை ஒம்புயிரி (Host bird) என்றும் அழைக்கின்றனர்.

அதற்கு நம் கண்முன்னே இருக்கின்ற சிறந்த உதாரணம் காக்கையும் (Host bird) குயிலும் தான் (Parasitic bird).

ஒம்புயிரிப் பறவை

ஒம்புயிரிப் பறவை

இந்திய காட்டுயிர் ஆராய்ச்சி மையத்தில் (Centre for Wildlife Studies) ஆய்வு மாணவராகவுள்ள டின்சி மரியாம் (Dincy Mariyam) இது குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார். 

இருவேறு பறவையினங்கள் இது போன்ற வாழ்வியலில் ஈடுபட்டிருப்பதைப் பற்றி, குயில் மற்றும் காக்கையின் வாழ்வியலை உதாரணமாக வைத்து விளக்குகின்றார்.

இத்தகைய பரிணாம வளர்ச்சி, குயில் போன்ற ஒம்புயிரிப் பறவைகளை, தம் எதிர்காலச் சந்ததிகளை வளர்ப்பதற்காக 

நேரம் செலவிடுவதைத் தடுத்து, சிறிது புத்திசாலித்தனமாகச் செயல்படும் திறனைக் கொடுத்துள்ளன. 

அதன் மூலம் அவற்றுக்கு அதிக நேரம் கிடைத்து, இன்னும் அதிகமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. 

திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.. யார் இவர் தெரியுமா?

இத்தகைய இனப்பெருக்க ஒம்புயிரிகள் குறித்து மனிதர்களுக்கு நீண்ட காலமாகவே தெரிந்துள்ளது. ஆனால், அதற்கான காரணம் தான் நீண்ட காலமாகவே புரியாமலிருந்தது.

டின்சி மரியாம், சித்தூர் மாவடத்தில் அவர் ஆய்வு செய்த கிராமங்களில், அதற்கான விடையைத் தேடத் தொடங்கினார். 

ஒரு காகத்தையும் இனப்பெருக்கத்திற்காக அதைச் சார்ந்திருந்த ஆசியக் குயிலையும் அவர் கண்காணித்தார். 

நம்மில் பலரும் காகத்தின் கூட்டில், அதற்கே தெரியாமல் தன்னுடைய முட்டையை வைத்து விட்டுச் செல்லும் குயில் பற்றிய கதைகளைக் கேட்டிருப்போம். 

ஆனால், இந்தச் செயல்பாட்டின் இயக்கவியல் குறித்து நாம் யாருமே கேள்வி கேட்டதோ, அறிந்து கொள்ள முற்பட்டதோ இல்லை. 

பருவமழைக் காலம் தொடங்கும் போதே காகங்களின் இனப்பெருக்கக் காலமும் தொடங்கி விடுகின்றது. 

அந்தக் காலகட்டம் ஆகஸ்ட் வரை நீளும். குயில்களுடைய இனப்பெருக்கக் காலம் மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீளும். 

இரண்டின் இனப்பெருக்கக் காலகட்டமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வருகின்றது. இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட பிறகு, குயில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டு விடுகின்றது. 

முட்டையுடைய நிறம் மற்றும் வடிவத்தில், காகத்தின் முட்டையோடு குயிலுடையதும் ஒத்திருக்கும். 

குயில்களைப் போலவே, மற்ற கூடுகளைச் சார்ந்திருக்கும் பறவைகளுடைய முட்டைகளும் கூட, 

அவை எந்தப் பறவையினத்தைச் சார்ந்திருக்கின்றதோ அதன் முட்டை வடிவத்தையும் நிறத்தையும் ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். 

பருந்துக் குயில்

பருந்துக் குயில்

உதாரணத்திற்கு, பருந்துக் குயில் (common hawk cuckoo) என்றழைக்கப்படும் ஒருவகைக் குயில் இனம், தவிட்டுக் குருவியின் கூட்டில் முட்டையிடும். 

அதன் முட்டையும் தவிட்டுக் குருவியின் முட்டையும் வடிவத்திலும் நிறத்திலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். 

தங்களுடைய முட்டைகளை இது போல் அடைகாக்கவும் வளர்க்கவும் இதர பறவையினங்களைச் சார்ந்திருக்கும் பறவைகள், இப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன.

சுடலைக் குயில்

சுடலைக் குயில்

சுடலைக் குயில் (pied cuckoo) என்றழைக்கப்படும் ஒருவகைக் குயில் இனம், சின்னான் வகையைச் சேர்ந்த கேப் புல்புல் (cape bulbul) என்ற பறவையுடைய கூட்டில் முட்டையிடும். 

குழந்தைகளுக்கு எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் செய்வது எப்படி?

ஆனால், அதன் முட்டையும் சின்னானுடைய முட்டையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. 

இருந்தாலும், அதைச் சின்னான் தவிர்க்காமல், அடைகாத்து தன்னுடைய குஞ்சுகளைப் போலவே கவனித்துக் கொள்கின்றன. 

ஆள்மாறாட்டம் 

ஆள்மாறாட்டம்

இருப்பினும், “ஆசியக் குயில்களைப் போல, காக்கை முட்டைகளை யொத்த வடிவத்தில் ஆள்மாறாட்டம் செய்து வைப்பது தான் அதிகமாக நடக்கின்றன. 

அப்படி நிகழும் போது, எது தன்னுடையது, எது ஆள்மாறாட்டம் செய்து மறைத்து வைக்கப்பட்ட முட்டை என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் 

காகத்தைப் போன்ற ஒம்புயிரிப் பறவைகள் குழம்பி விடுகின்றன” என்று குறிப்பிடுகிறார் டின்சி மரியாம்.

காக்கை சராசரியாக ஒரு நாளைக்கு ஒன்று என்ற விகிதத்தில், மொத்தம் 5 முட்டைகளை இடும். ஆசிய குயிலும் கூட, இந்த ஐந்து நாள்களுக்கு உள்ளாகவே, அதன் கூட்டில் முட்டையிட்டு விடுகின்றது. 

அடைக்காக்க வேண்டிய காலம் குறை

அடைக்காக்க வேண்டிய காலம் குறை

ஒரு வேளை காக்கை முட்டையிடுவதற்கு முன்னமே, குயில் முட்டையிட்டு வைத்தால், அதைக் கண்டுபிடிப்பது எளிதாகி விடும். 

அதனால், குயில்கள், காக்கைக்கு அடுத்தபடியாக வந்து முட்டையிட்டு வைக்கின்றது. 

அதன் முட்டை, காகத்தினுடையதை விட ஓரளவுக்குச் சிறியதாக இருக்கும். அதனால், அதை அடைக்காக்க வேண்டிய காலமும் குறைவாகவே இருக்கும். 

சிறுநீரகம் செயலிழக்கும் என்பதை உணர்த்தும் கிரியேட்டினின் அளவு !

அதைக் கண்காணிக்கத் தொடங்கிய டின்சி மரியாம், காகம் இட்ட முட்டைகளையும் குயில் இட்ட முட்டைகளையும் குறித்து வைத்துக் கொண்டு, சற்று தள்ளி, 

அவற்றுக்குத் தெரியாமல் அமர்ந்து, தன்னுடைய தொலை நோக்கியில் கண்காணிக்கத் தொடங்கினார்.

எல்லையைக் காவல் காப்பது

எல்லையைக் காவல் காப்பது

இது போன்ற ஆள்மாறாட்ட முட்டை யிடுதல்களைத் தடுக்க, காகம் போன்ற பறவைகள் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. 

சில நேரங்களில் முறையாகக் கண்காணித்து, அப்படி முட்டையிட வந்தால் தாக்குகின்றன. 

இல்லையேல் சில நேரங்களில், எச்சரிக்கை ஒலிகளை எழுப்புவது, கூட்டை மறைவாக அமைப்பது, மிக மூர்க்கமாக எல்லையைக் காவல் காப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றன. 

இருந்தும், இவையனைத்தையும் தாண்டி குயில்கள் முட்டையிட்டு விடுகின்றன. காகங்கள் ஜோடியாகவும் கூட்டைக் காவல் காக்கின்றன.

சில நேரங்களில் அவை சிறு கூட்டமாகவும் கூட காவல் காக்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் காகங்கள் கூட்டு சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்படும் பழக்கத்தைக் கொண்டவை. 

இத்தகைய பழக்கங்களை, அவற்றிடம் ஆள்மாறாட்ட வேலைகளில் ஈடுபடும் குயில்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள அவை மேற்கொள்கின்றன. 

மரமல்லி மற்றும் புளிய மரத்தில் கட்டப்பட்டிருந்த காக்கைக் கூடுகளை டின்சி மரியாம் கண்காணித்துக் கொண்டிருந்தார். 

மறைவிடத்திற்குப் பஞ்சமில்லாத, அருமையான இடத்தில் தான் அவை கூடு கட்டியிருந்தன. 

எப்போதும் ஒரு காகம் இருந்து கொண்டேயிருக்கும். 

எப்போதும் ஒரு காகம் இருந்து கொண்டேயிருக்கும்.

இந்நிலையில், அவர் கண்காணித்துக் கொண்டிருந்த கூட்டில், எப்போதும் ஒரு காகம் இருந்து கொண்டேயிருக்கும். 

மற்றொரு காகம்தான் உணவு தேடிச் சென்றது. அந்த நேரங்களில், கூட்டைக் காவல் காக்கும் காகத்திற்கு உணவு கொண்டு வந்து கொடுக்கும் வேலையைக் கூட வெளியே செல்லும் காகமே ஏற்றுக் கொண்டது.

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாட்டைக் காண முடிகின்றது. 

குழந்தைகளுக்கு மும்பை ஸ்டைல் பேல் பூரி செய்வது எப்படி? 

பெரும்பாலும் காகங்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து இது போன்ற நேரங்களில் செயல்படுகின்றன. 

அவை, ஒரு குழுவாகச் சேர்ந்து தாய்க் காகம் வெளியே செல்வதற்கான நேரத்தைக் குறைக்க உதவுகின்றன. 

உணவு கொண்டு வந்து கொடுப்பது, உணவு ஊட்டுவது போன்றவற்றை அவை மேற்கொள்கின்றன. 

ஆள்மாறாட்டம் செய்வதிலிருந்து தற்காத்துக் கொள்கின்றன

ஆள்மாறாட்டம் செய்வதிலிருந்து தற்காத்துக் கொள்கின்றன

அதன் மூலம், குயில்கள் ஆள்மாறாட்டம் செய்வதிலிருந்து காகங்கள் தம் கூட்டைத் தற்காத்துக் கொள்கின்றன. 

அப்படிப்பட்ட நேரங்களில், ஏதேனும் பெண் குயில் கூட்டின் பக்கமாகப் பார்த்தாலும் கூட, தாய் காகம் துரத்தத் தொடங்கி விடுவதை டின்சி மரியாம் கவனித்துள்ளார். 

இருந்தும், இவையனைத்தையும் மீறி குயில் அந்தக் காகத்தின் கூட்டில் முட்டையிட்டதையும் அவர் கவனித்துள்ளார்.

எது குயிலுடையது, எது தன்னுடையது என்ற குழப்பம் வந்து விடுவதால், எதையும் உடைக்காமல் அனைத்தையுமே காக்கைகள் அடை காக்கின்றன.

காகம், குயில் போல இரண்டு தரப்பு பறவைகளுமே ஒன்றையொன்று சமாளித்து, தம் இனத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான தகவமைப்பைக் கொண்டுள்ளன. 

காகம், தன்னுடைய கூட்டிற்கே மிகுந்த எச்சரிக்கையோடும் கண்காணிப்போடும் தான் சென்று வந்தது. 

மரங்களுக்கு நடுவே மறைந்து கொள்ளும்

மரங்களுக்கு நடுவே மறைந்து கொள்ளும்

அதே நேரம், குயிலும் கூட அது முட்டையிட நினைக்கும் கூட்டைக் கண்காணிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றது. 

பெண் குயிலுடைய உடல், மரங்களுக்கு மத்தியில் மறைந்து கொள்ளும் நிறத்தை ஒத்து இருப்பதால் அவை எளிதில் மரங்களுக்கு நடுவே மறைந்து கொள்கின்றன.

இப்படியெல்லாம், மெனக்கெட்டு காக்கையின் கூட்டைச் சென்றடையும் குயில், முட்டையிடுவதை அவர் கவனித்துள்ளார். 

இரண்டு காகங்களும் வெளியே சென்றிருந்த நேரத்தில், வெற்றிகரமாக ஒரு குயில் அதன் கூட்டிற்குள் சென்றதை நாங்கள் பார்த்தோம். 

பால் குடித்தால் இப்டில்லாமா நடக்கும்... உணர்த்தும் சில அறிகுறிகள் !

அப்படிச் சென்ற சில நிமிடங்களிலேயே, காகங்கள் சுதாரித்து துரத்தியடித்து விட்டன. அங்கிருந்து தப்பித்து, நான் அமர்ந்திருந்த திசை நோக்கித் தான் அது பறந்து வந்தது. 

அப்போது, அதன் அலகில் ஒரு முட்டையைக் கவ்வியிருந்தது. பின்னர் காக்கைக் கூட்டைச் சோதித்துப் பார்த்த போது, ஒரு முட்டை குறைந்திருப்பதைக் கண்டுபிடித்தோம். 

வெற்றிகரமாக அது ஒரு முட்டையைக் கூட்டிலிருந்து அப்புறப்படுத்தி விட்டது. ஆனால், அந்த இடத்தில் வேறு முட்டையை இடவில்லை. 

அதற்கு அடுத்த நாள் காலையில் நாங்கள் சென்று கவனித்த போது, அந்த இடத்தில் புதிதாக ஒரு குயில் முட்டையைக் கண்டோம். 

எது குயிலுடையது என்ற குழப்பம்

எது குயிலுடையது என்ற குழப்பம்

முந்தைய நாள், முட்டையைத் திருடிச் சென்ற குயில் தான் அதை அங்கு வைத்திருக்க வேண்டும்” என்று அவர் தன்னுடைய ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது, அங்கிருப்பதில் எது குயிலுடையது, எது தன்னுடையது என்ற குழப்பம் காக்கைக்கு வந்து விடும். 

எங்கே, தன்னுடையதை உடைத்து விடுவோமோ என்ற சந்தேகத்தில் அனைத்தையும் அடை காக்கின்றன. 

தன்னுடைய அனைத்து முட்டைகளையும் ஒரே கூட்டில் வைத்தால், ஆபத்து என்பதைக் குயில்கள் நன்கு உணர்ந்திருக்கின்றன. 

முட்டைகளை உடைத்து விடும்

முட்டைகளை உடைத்து விடும்

ஆகவே, பல்வேறு கூடுகளில் வைக்கின்றன. அப்படி வைக்கும் போது, அது வைக்கின்ற முட்டைகளுடைய எண்ணிக்கைக்கு நிகரான முட்டைகளை உடைத்து விடுகின்றது. 

அப்படிச் செய்வதன் மூலம், அந்தக் கூட்டிலுள்ள குஞ்சுகளுக்குக் கிடைக்கும் உணவில், தன் குஞ்சுகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விடக் கூடாதென்பதில் கவனமாக இருக்கின்றது.

காகம், குயில் இரண்டுமே, அடைகாக்கப் போகும் காகங்களால் எந்தளவுக்கு உணவு வழங்க முடியும், 

நோய் எதிர்ப்பு சக்தியை பெற செய்ய வெண்டியதும், செய்யக் கூடாததும் !

எந்தளவுக்கு அவற்றால் கவனித்துக் கொள்ள முடியும் என்பதில் கவனமாக இருக்கின்றன. 

அப்படி இல்லாமல், காகங்களின் திறனைவிட அதிகளவில் கூட்டில் முட்டைகள் இருந்தால், தன்னால் அவற்றைக் காப்பாற்ற முடியாதென்பதை உணர்ந்து, காகங்கள் கூட்டை கைவிட்டு விடுகின்றன. 

காக்கைகள் குயில்களிடம் போராடுகின்றன

காக்கைகள் குயில்களிடம் போராடுகின்றன

ஒருமுறை ஒரே கூட்டில், 21 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வளவையும் தன்னால் பராமரிக்க முடியாதென்பதை உணர்ந்து, அந்தக் கூட்டையே காகங்கள் கைவிட்டு விட்டன. 

பின்னர், குரங்குகள் அந்த முட்டைகளைச் சாப்பிட்டுத் தீர்த்தன. இப்படி, தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக குயில்கள் காகங்களைச் சார்ந்திருக்கின்றன. 

அவற்றிடமிருந்து தன் முட்டைகளைக் காப்பாற்ற, காக்கைகள் குயில்களிடம் போராடுகின்றன. இரண்டின் போராட்டத்திற்கும் வெற்றி கிடைக்கின்றது. 

இறுதியில் இரண்டுமே தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. பரிணாமப் பாதையில், காக்கையைச் சார்ந்திருக்கும் வகையில் குயில்கள் தகவமைத்துக் கொண்டன. 

அவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் காகங்கள் கற்றுக் கொண்டன. இருந்தும், இரண்டுக்குமான போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. 

உங்க வீட்ல மிக்ஸி இருக்கா... அப்ப இத கண்டிப்பா படிங்க ! 

இது இரண்டுக்குமான இனப்பெருக்கக் காலம். இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட, எங்காவது, 

ஏதேனும் ஒரு தாய்க் குயில், ஒரு காக்கைக் கூட்டைக் கண்காணித்துக் கொண்டிருக்கலாம். தன் சந்ததிக்குப் புகலிடம் தேடி…

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)