நாய்கள் ஊளையிடுவது ஏன்? தெரியுமா?

0

நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென நாய்கள் ஊளையிடும் இதனை அப்போது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். 

நாய்கள் ஊளையிடுவது ஏன்? தெரியுமா?

இவ்வாறு நாய்கள் ஊளையிட்டால் மரணம் நேரிடும் எனவும் மூடநம்பிக்கை இருந்து வந்தது ஒரு காலத்தில்.

சுவையான டேஸ்டில் முட்டை கபாப் செய்வது எப்படி?

நாய்கள் இரவில் ஊளையிடுவது இயல்பான ஒரு விஷயம் தான், பொதுவாக மக்களுடன் மிகவும் நெருங்கி அன்பாக பழகக் கூடிய விலங்கினம் என்றால் அதில் நாயும் ஒன்று.

செல்லப் பிராணியான நாய் தான் தனியாக இருக்கும் பொழுது கவலைப்பட்டு அழுகிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். 

மேலும் இவ்வாறு அழுவதால் நமது கவனத்தை ஈர்க்கவும் செய்வதற்காக இப்படி அழுகின்றது என கூறுகிறார்கள்.

நாய்கள் பொதுவாக இரவில் தான் ஊளையிடும். பகலில் அதிகம் குலைக்கும் ஆனால் ஊளையிடல் குறைவாக இருக்கும்.

ஓநாய் வம்சத்திலிருந்து ஏற்பட்ட இனம் என்பதால் அவற்றின் சில குணாதிசயங்களில் ஊளை இடுவதும் ஒன்றாகும்.

பல காரணங்களுக்காக ஊளையிடும். அது அவற்றின் சங்கேத பாஷை. பல செய்திகளை பரிமாறிக் கொள்ளும்.

இரைப்பையில் அமில மழைக்கு என்ன காரணம்?

உதாரணமாக :

தூரத்தில் குலைக்கும் நாயின் கவனத்தை ஈர்க்க.

அவற்றிற்கு ஆதரவு அளிக்க.

அவற்றின் உற்சாகத்தை வெளிப்படுத்த.

மற்ற நாய்களை விளையாட அழைக்க.

ஒரு கார் அல்லது மற்ற புது நாய்க்கு அது தன் எல்லை என்பதை அறிவிக்க.

மற்ற எல்லை நாய்களை விரட்டி விட.

புதிதாக ஏதாவது கண்ணில் தென்பட்டால் தன் கூட்டத்திற்கு அதை அறிவிக்க.

வேட்டை நாய்கள் தன் உரிமையாளர் மற்றும் அதன் கூட வேட்டையாடும் நாய்க்கு தெரிவிக்க.

ஆம்புலன்ஸ் அல்லது காவல் துறை வண்டி சைரன் ஒலியைக் கேட்டு.

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

தன் தனிமையை வெளிப் படுத்த.

நோய்வாய் அல்லது அடிபட்டு தன் வலியை தெரிவிக்க.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க.

நாம் நினைப்பது போல நாய்கள் சூரியன் சந்திரனைப் பார்த்து குலைக்காது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)