வறுமையில் இருந்து வெளியேறுவதற்கு சிறந்த வழிகள்?

0

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்து இருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.

வறுமையில் இருந்து வெளியேறுவதற்கு சிறந்த வழிகள்?

நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

ஆர்டர் செய்த உணவு கேன்சல் எதற்காக - சொமட்டோ பதிலடி !

ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட் டெல்லாம் தெரியாதே என்றான் துடைக்க வந்தவன். 

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே! என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். 

பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. 

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகி விட்டார்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

நோய்களை மாயமாக்கும் தேங்காய் மாயா ஜாலம் !

வியாபாரி, ஈமெயில் முகவரி இல்லை என்று பதிலளிக்க, ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? 

உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட் டெல்லாம் தெரிந்திருந்தால்…? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன் என்றார் வியாபாரி.........!!!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)