வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

0

குளிர்காலமோ, வெயில் காலமோ எப்போதுமே சூடுநீரில் மட்டும் தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம்.

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !
சுடு நீரில் குளிப்பது தான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர்.

சளி, காய்ச்சலா, ஒரு சில சொட்டு யூகலிப்டஸ் எண்ணெயை குளிக்கும் சுடுநீரில் விட்டுக் குளித்தால், சளி பறந்து போகும் என்று சிகிச்சைகள் கூட சொல்வார்கள்.

சட்டப்பூர்வ அறிவிப்பு (லீகல் நோட்டீஸ்) எப்போது அனுப்பலாம்?

ஆனால், நல்ல சூடான தண்ணீரில் குளிப்பது, உடலுக்குக் கெடுபயனையே விளைவிக்கும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பச்சை தண்ணீரில் குளிப்பதுடன் ஒப்பிடும்போது வெந்நீரில் குளிப்பது அதிக தீமைகள் உள்ளன. 

பச்சை தண்ணீர் குளியல் மற்றும் வெந்நீர் தோலின் மேலடுக்கில் ஈரப்பதம் மற்றும் கெரட்டின் செல்களைத் தக்க வைக்க உதவும் சரும அடுக்கை, வெந்நீர் சேதப்படுத்துகிறது.

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

காலை ஆறு மணி. குளிர் காலம். கதகதப்பான படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனம் வராது. ஆனால் வேறு வழியில்லை, எழுந்து தான் ஆக வேண்டும். 

மெதுவாக கண் விழித்து, பல் துலக்கியபின் நல்ல சூடான தண்ணீரில் குளித்தால் தான் பலருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். 

வெந்நீர்க் குளியல் உடலுக்கும் மனத்துக்கும் சுகம் அளிக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள். 

ஏன் டவ் சோப் சிறந்தது என்று தெரியுமா? 

மிகச் சூடான வெந்நீரில் சிறிதளவு யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து குளித்தால் உடல்வலி நீங்குவதுடன் சளி இருமல் பிரச்னைகள் இருந்தால் சரியாகும் என்று நினைப்பீர்கள். 

ஆனால் அது உண்மை இல்லை. சுடுதண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

உண்மையில் வெந்நீர்க் குளியல் உடலுக்கு நன்மை செய்வதை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன. 

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

ஆண்கள் கொதிக்கும் நீரில் அரை மணிக்கு மேலாக குளித்துக் கொண்டிருந்தால் அது அவர்களின் ஆண்மைக்கே பிரச்னையாகி விடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

ஏற்கனவே பிரச்னை இருப்பவர்கள் பச்சைத் தண்ணீரில் குளிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள். 

சுடு தண்ணீர் நிரம்பிய பாத் டப்பில் அவர்கள் வெகுநேரம் குளிக்கவே கூடாது.

நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் ?

உங்கள் சருமம் மென்மையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்த்து விடுங்கள். 

வெந்நீரில் குளிக்கும் போது சருமத்தின் ஈரத்தன்மை குறைந்து விடும். 

உங்களுடைய சரும வகை சென்சிட்டிவ்வாக இருந்தால் நிச்சயம் சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது. அரிப்பு, அலர்ஜி போன்றவை இலவச இணைப்பாக வந்து சேரும்.

தோல் வறட்சி 

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

பொதுவாக, குளிர்காலத்தில் நம்மை புத்துணர்ச்சிக்கு உள்ளாக்கும் என்று மிகவும் நம்பும் சூடான குளியல் தான், 

ஏற்கனவே பனியால் வறண்டு போன நமது தோலை மேலும் வறட்சிக்குள்ளாக்குகிறது.

வணிக ரீதியிலான சேனிடைசர்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு !

சூடான தண்ணீரை தோலின் மீது ஊற்றும் போது, அதிலிருக்கும் ஈரப்பதத்தையும் தண்ணீர் எடுத்து விடுகிறது. 

ஒரு வேளை உங்கள் தோல், மிருதவானதாக இருந்தால், நிச்சயம் சுடுதண்ணீரில் குளிப்பதைத் தவிர்த்து விடலாம். 

இதனால் சில தோல் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

முடி கொட்டும் 

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

மிகச் சூடான தண்ணீரை தலையில் ஊற்றி குளிக்கும் போது, அதனால் தோல் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு முடி உதிரும் பிரச்னை ஏற்படும். 

சிலருக்கு ஏற்கனவே அதிகமாக முடிகொட்டும் பிரச்னை இருக்கும். அதற்காக சில சிகிச்சைகளையும் செய்வார்கள். 

ஆனால், அப்போது தொடர்ந்து சுடு தண்ணீரில் குளித்துக் கொண்டே இருந்தால் முடி கொட்டும் பிரச்னை குறையாது.

குழந்தைப் பேறு 

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

சுமார் 30 நிமிடங்கள், தொடர்ந்து மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களுக்கு குழந்தைப் பேறு தொடர்பான 

பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மருத்துவ இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள் ! 

எனவே, குழந்தைப் பேறு பிரச்னையை எதிர்கொண்டிருப்பவர்கள், மிகச் சூடான தண்ணீரில் 

குளித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக்கி இருந்தால், அதனை கை விட்டு, குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

மிகச் சூடானா தண்ணீரை குளிக்கும் டப் முழுக்க நிரப்பி விட்டு, அதில் பல மணி நேரம் செலவிடுவது நிச்சயம் உகந்ததல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.

பழக்கமாகி விடலாம் 

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

தொடர்ந்து சுடு தண்ணீரில் குளிப்பதை ஒருவர் செய்து வரும் போது, அது அவர்களுக்கு பழக்கமாகி, விட்டால், எப்போதுமே சுடுநீரில் தான் குளிக்க விரும்புவார்கள். 

வேறு வழியில்லாத நிலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும் நிலை ஏற்பட்டால், அது ஒரு சங்கடத்தை அளிக்கலாம். 

எனவே, சுடு நீரில் குளிக்கும் பழக்கத்துக்கு சிலர் அடிமையாகி விடக் கூடும்.

வயதான தோற்றம் 

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

குளிர்ந்த நீரில் குளிப்பவர்களை விடவும், சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல் மிக விரைவாகவே தளர்வடைந்து விடும்.

பொதுவாக எல்லோருக்குமே நாம் மிக அழகாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். 

2022-ல் காத்திருக்கும் பேரழிவுகள்? யார் இந்த பாபா வங்கா?

ஆனால், தொடர்ந்து அதுவும் மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல்வி மிக விரைவாக தளர்ந்து வயதான தோற்றத்தைக் கொடுக்கும் அபாயம் உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)