மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சானிடைசர்கள் !

கண்ட இடங்களில் கை வைத்து விளையாடுவதால் குழந்தைகளின் கைகளில் கிருமிகள் சேர்ந்து விடுகின்றன.
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சானிடைசர்கள் !
சாப்பிடச் செல்வதற்கு முன்பு இதற்கென தண்ணீரில் கைகழுவத் தேவை இல்லை.

தங்களது நிறுவனத்தின் சேனிடைசரை தடவிக் கொண்டாலே போதுமானது என்கிறது ஒரு நிறுவனத்தின் சேனிடைசர் விளம்பரம். 

சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கை கழுவ வேண்டும் என சிறு வயதிலிருந்தே சுகாதாரமான வாழ்க்கை முறை நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.

நாம் கற்றுக் கொண்டு பின்பற்றுவதைத் தான் நமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சேனிடைசரை தடவிக் கொண்டாலே போதும் கை கழுவ வேண்டாம் என்பது தார்மீக அடிப்படையில் சரியான வழிகாட்டுத லாக இருக்குமா?

சரி அதை விட முக்கியமானது சேனிடைசர் என்பது மருத்துவமனையில் நோயாளிகளைப் பரிசோதித்த பின்னர் மருத்துவர்கள் பயன்படுத்தும் கிருமிநாசினி.
கிருமி களைக் கொல்லும் தன்மை யுள்ள சேனிடைசரை தடவி விட்டு கை கழுவாமல் சாப்பிட்டால் 

சேனிடைசரும்தானே உணவில் கலக்கும்? எந்த அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத செயல் இது.

சேனிடைசரின் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பொது மருத்துவர் தேவி சுகன்யாவிடம் கேட்டோம்...

சேனிடைசர் வகைகள்
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சானிடைசர்கள் !
சேனிடைசர்களில் Alcoholic, Non Alcoholic என இரண்டு வகைகள் இருக்கின்றன. இவை ஜெல், நுரை மற்றும் திரவம் என மூன்று வடிவங்களில் தயாரிக்கப் படுகின்றன.

ஆல்கஹால் சேனிடைசரில் Isopropyl Alcohol (Rubbing alcohol) மற்றும் எத்தனால் ஆகியவை 4590 சதவிகிதம் வரையிலும் சேர்க்கப் படுகிறது.

இவை Active ingredients ஆக செயல்பட்டு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழித்து விடும். 

காசநோய் உண்டாக்கும் பாக்டீரியாக் களையும் கொல்கிற அளவுக்கு இவை வீரியம் மிக்கவை.

இருந்தாலும் நமக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்து விடுவதால் அதன் மூலம் நமக்குக் கிடைக்கப் பெறும் நன்மைகளை நாம் இழக்க நேரிடுகிறது.

டிடெர்ஜென்ட் சோப்பில் கூட இதே விதமான Active ingredients இருக்கின்றன. 

இவை நல்ல பாக்டீரியாக் களையும் அழித்து விடுவதால் சருமத்தின் மேற்புறத்தில் இருக்கும் எண்ணெயை அழித்து நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து விடும்.
60 சதவிகிதத்துக்கும் அதிகமாக
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சானிடைசர்கள் !
ஆல்கஹால் இருக்கும் சேனிடைசர் தான் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கும். 

சேனிடைசரில் வாசனைக்காக சேர்க்கப்படும் வாசனைப் பொருட்கள் மற்றும் Triclosan எனும் உட்பொருள் தீவிர விளைவுகளை ஏற்படுத்துபவை.

ட்ரைக்ளோசனை பூச்சிக் கொல்லி மருந்தின் மிக முக்கியமான சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்து கின்றனர். 

இவை ரத்தக் குழாய்களுக்குள் சென்று ஒரு விதமான ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், தசை வலுவிழத்தல். மலட்டுத் தன்மை போன்ற விளைவு களையும் ஏற்படுத்தக் கூடியது. 

சில ஆய்வுகள் இவை புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன.

சருமத்தையும் அழிக்கும்
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சானிடைசர்கள் !
மருத்துவ மனையில் பயன்படுத்தும் சேனிடைசரில் Benzalkonium Chlorideஐ கலப்பார்கள். 

சில வீரியம் மிக்க பாக்டீரியாக்களை அழிப்பதற்காக அது பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியாக்களை சிதைத்து அழிப்பதைப் போலவே அவை நமது சருமத்தையும் அழிக்கும்.

ரசாயனம்
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சானிடைசர்கள் !
சில சேனிடைசர்களில் ஸ்ட்ராபெர்ரி போன்ற ஃப்ளேவர்களுக்காக Phthalates எனும் ரசாயனத்தைப் பயன் படுத்தி யிருப்பார்கள்.

இதனைக் கையில் தடவிக் கொண்டு ஏதேனும் உணவுப் பொருளை உட்கொள்ளும் போது அந்த ரசாயனம் உணவில் கலந்து உடலுக்குள் சென்று விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறாக உட்கொண்ட அமெரிக்காவை சேர்ந்த கர்ப்பிணிக்கு, ஆசனவாய் வேறு இடத்தில் மாறிய நிலையில் குழந்தை பிறந்திருக்கிறது.

இது மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக இதனைப் பயன் படுத்துவதன் மூலம் சருமமும் கடினமாகி விடும்.
மேலும் சருமத் துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டு வறட்சி ஏற்படும். Paradens எனும் உட்பொருள் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு, 

சுரப்பிகள் மற்றும் சருமப் பிரச்னை களையும் ஏற்படுத்து கிறது. இறுதிக் கட்டமாக புற்றுநோய் வரையிலும் கொண்டு செல்லக் கூடியது.

ஆல்கஹால்
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சானிடைசர்கள் !
ஆல்கஹால் சேனிடைசரில் 65 சதவிகித எத்தனால், 35 சதவிகித Isopropyl Alcohol இருக்கின்றன. 

ஆல்கஹால் அல்லாத சேனிடைசரில் Benzalkonium Chlorid மற்றும் Triclosan ஆகியவை முக்கிய மூலப்பொருட்க ளாக இருக்கின்றன.

இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியான கார்சினோஜெனை உருவாக்குகின்றன. 

ஆல்கஹால் சேனிடைசரை விட ஆல்கஹால் அல்லாத சேனிடைசர் அதிதீவிர விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறார் தேவி சுகன்யா.... 
Tags: