சட்டப்பூர்வ அறிவிப்பு (லீகல் நோட்டீஸ்) எப்போது அனுப்பலாம்?

0
சட்டப்பூர்வ அறிவிப்பு எப்போது அனுப்பலாம் ? நினைவில் கொள்ள வேண்டியவை:
லீகல் நோட்டீஸ் எப்போது அனுப்பலாம்?
சட்டப்பூர்வ அறிவிப்பு என்பது இறுதிகட்ட எச்சரிக்கை ஆகும். அதாவது, ஒரு நபரோ அல்லது நிறுவனத்துடைய தொடர்பையோ,

முற்றிலும் துண்டிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து பேசித் தீர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாகும். 

ஒருநபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ அவர்களால் ஏற்பட்ட மனக்குறைகளை தீர்ப்பதற்காக எழுத்து மூலம் 

ஆவணம் தயாரித்து அனுப்பப்படும் இறுதி எச்சரிக்கை அறிவிப்பு. இது, பல வழக்குகளில் செயல்படுகிறது. 

ஒரு வேளை இந்த இறுதி எச்சரிக்கை அறிவிப்பை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

இந்தியாவில் பொருத்த வரையில், சட்ட அறிவிப்பு என்பது முதல் கட்ட சட்ட நடவடிக்கை யாகும். ஒரு நபரோ அல்லது 

நிறுவனமோ சட்ட உரிமைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராகசட்ட அறிவிப்பு தொடுக்கலாம். 
அதாவது, சட்டப்பூர்வ அறிவிப்பின் அடிப்படை நோக்கம் என்ன வென்றால், சம்பந்தப் பட்ட பிரச்சினையில் நீதிமன்றம் தலையிடு வதற்கு முன்பு 

காரணமான நபர் பாதிக்கப்பட்ட நபரிடம் பிரச்சினை குறித்துப் பேசித் தீர்த்து இழப்பீடு அளித்து பிரச்சினையை சுமூகமாக முடிக்க அளிக்கும் கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது.

சட்டப்பூர்வ அறிவிப்பின் செல்லுபடி நிலை:

சட்டப்பூர்வ அறிவிப்பு என்பது குறிப்பாக சிவில் சார்ந்த வழக்குகளுக்கு மட்டுமே செல்லு படியாகும். 

குற்றவாளிக்கு எதிராக மாநிலத்தால் எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கை க்கு சட்டப்பூர்வு அறிவிப்பு செல்லுபடி ஆகாது. 

அதனால், குற்றவியல் வழக்குகளு க்கு சட்டப்பூர்வ அறிவிப்பு அவசியமற்றது. 

ஒருவர் மாநிலத்திற்கு எதிராக சிவில் வழக்கு தாக்கல் செய்ய உத்தேசித்துள்ள போது அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்ப வாய்ப்புகள் உண்டு.

இருப்பினும், சட்டப்பூர்வ அறிவிப்பை முன்கூட்டியே அனுப்பி இருந்தால் மட்டுமே மாநிலத்திற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். 

சிவில் நடைமுறை விதியின் 1908 பிரிவு 80ன் கீழ் பொது மக்களோ அல்லது அரசு அதிகாரியோ யார் தங்களின் பணியின் போது 

சட்ட உரிமைகளை மீறுகிறார்களோ அவர்களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பப்படும். 

ஆனால், சம்பவம் நடந்து இரண்டு மாதங்களு க்குள் அனுப்பிவிட வேண்டும் என்கிற காலவரையும் இதற்கு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

சட்டப்பூர்வ அறிவிப்பு ஏன் தேவை?

ஒரு விவகாரம் தொடர்பாக முன் கூட்டிய வழக்கு அனுபவம் இல்லாத பட்சத்தில், வழக்கு தொடர்வதாக தீர்மானித்தால், 

அதற்கு முன்பு சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்புவது நல்ல தொடக்கமாகும்.

ஒரு விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுத்து சரியானத் தீர்வு பெறுவதற் கான அனுப்புனரின் 

தெளிவான நோக்கம் என்ன வென்று சட்டப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்.
நீதிமன்றத்தின் தலையீடின்றி பிரச்சினையை தீர்த்துக் கொள்ள இரு தரப்பினரு க்கும் வழங்கப்படும் வாய்ப்பாகவே சட்டப்பூர்வ அறிவிப்பு செயல்படுகிறது.

ஒருவருடைய தவறான செயல்பாடு தெரிந்து செய்திருந்தாலோ அல்லது தெரியாமல் செய்திருந்தாலோ 

அவர்களால் ஏற்பட்ட சேதங்களை அவர்களுக்கு நினை வூட்டவும் சட்டப்பூர்வ அறிவிப்பு செயல்படுகிறது.
ஒருவர் எந்த சூழ்நிலையில் சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பலாம் ?

ஒரு நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத் திற்கோ சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்ப பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம்:

குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை ஒப்பந்தப்படி குறிப்பிட்டுள்ள விதிமுறை மீறுதல், 

சக ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், நிறுவனங்களின் மனிதவள கொள்கைகளை மீறுதல் 
போன்ற குற்றச் சாட்டுகளில் சிக்கிய ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பி எந்தவித முன் அறிவிப்பு மின்றி பணியில் இருந்து நீக்கலாம்.

சம்பளம் வழங்காதுதல், பணி ஒப்பந்தத்தை மீறுதல், நியாயமான காரணமின்றி பணியில் இருந்து 

நீக்கப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் சம்பந்தப்பட்ட நிறுவனங் களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பலாம்.

வழங்கிய காசோலை கணக்கில் சேராமால் திரும்பவரும் பட்சத்தில், காசோலை வழங்கியவரு க்கு எதிராக சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும்.

உரிமை கொண்டாடுவதில் மோதல், சொத்து அடமானம், ஆக்கிர மிப்பாளர்களை வெளியேற்றுதல் போன்ற 

சொத்து தொடர்பான பிரச்சினைளு க்கும் சட்டப்பூர்வ அறிவிப்பு பொருந்தும்.

பரம்பரையாக தொடரும் குடும்ப சண்டை, குழந்தைகளை வீட்டுச்சிறை பிடிப்பு, விவாகரத்து போன்ற 

சொந்த பிரச்சினை காரணமாகவும் குடும்ப உறுப்பினர் களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கலாம்.

தவறான தயாரிப்புகளை விநியோகம் செய்யும், தவறான சேவைகளை வழங்கும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கலாம்.

சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்குவதற் கான முக்கிய குறிப்புகள்:

சட்டப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பதில் முன் அனுபவம் இல்லை என்றால், வழக்கறிஞரைக் கொண்டு தயாரிக்கவே அறிவுறுத்தப் படுகிறது. 

வழக்கறிஞர் அதை தயாரிக்கா விட்டாலும், சட்டப்பூர்வ அறிவிப்பில் வழக்கறிஞரின் கையொப்பம் இருப்பது அவசியம். 
அது மட்டுமின்றி, சட்டப்பூர்வ அறிவிப்பு வழக்கறிஞரின் தன் முகவரியுடைய கடிதத்தாளில் (லெட்டர் பேட்) தான் தயாரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு முறை சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பிவிட்டால், திரும்பப் பெற்று மாற்றங்கள் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
சட்டரீதியாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் சட்டப்பூர்வ அறிவிப்பை பெற்றுக் கொள்ளும் நபரின் முழு விவரங்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். 
மற்றும், அதன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் முன்னதாகவே சேகரித்து வைக்க வேண்டும். 

சட்டப்பூர்வ அறிவிப்புகளை தபால் அல்லது இணையத்தள வழிகளிளோ அனுப்பப் படலாம்.

சட்டப்பூர்வ அறிவிப்பு பெறும் நபர் 30 முதல் 60 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். 

சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை தவிர்க்கவும். 

அறிவிப்பு பெற்றவர்கள் வேறு வழியின்றி அனுப்புனரின் விதிமுறை களை ஏற்கும் வகையிலும் சட்டப்பூர்வ அறிவிப்பு தயாரித்தல் வேண்டும். 

பெறுநர் மறுக்க முடியாத அளவிற்கு தகுந்த உண்மைகளும், எதிர் பார்க்கப்பட்ட தீர்வுகளும் துல்லியமாக தெரிவித்திருக்க வேண்டும். 
சட்ட அம்சங்கள்; அதாவது, எந்தசட்டத்தின் கீழ் தீர்வு கூறப்படுகிறது என்பதையும் தெளிவுப் படுத்த வேண்டும்.

காசோலை திரும்ப வந்தால், அந்ததினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்ப வேண்டும். 

அறிவிப்பு அனுப்பி 15 நாட்களுக்குள் பணத்தை செலுத்த வில்லை என்றால் சட்டப்படி வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)