வணிக ரீதியிலான சேனிடைசர்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு !

0
விளம்பரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் வணிக ரீதியிலான சேனிடைசர்களின் விளைவுகள் குறித்துப் பார்க்கலாம்.
வணிக ரீதியிலான சேனிடைசர்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு !
இவற்றுள் எத்தனால் ஆல்கஹால் மற்றும் ஐசோப்ரொஃபைல் ஆல்கஹால் சேர்க்கப் பட்டிருக்கிறது.

கொடிய விஷம்

Tocopheryl Acetate எனும் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் பயன்பாட்டுக்கு இவற்றைக் கொடுக்கும் போது 

இவற்றின் நறுமணம் காரணமாக குழந்தைகள் அவற்றை உட்கொண்டு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகள் இவற்றை 10 மில்லி அளவு உட்கொண்டாலே அது கொடிய விஷத்துக்கு நிகரான விளைவுகளை ஏற்படுத்திவிடும். 

சேனிடைசரை உட்கொண்டு இது வரையிலும் யாரும் இறந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

ஆனால், அமெரிக்கா வின் தேசிய விஷக் கட்டுப்பாட்டு வாரியம் சேனிடைசரில் இருக்கும் ரசாயனங்கள் காரணமாக அதனை நேரடியாக உட்கொண்டவர் களுக்கு சுயநினைவு இழத்தல்,

பார்வைக் குறை பாடுகள், வயிற்றுப் போக்கு, வலிப்பு, உள் உறுப்புகளில் பிரச்னைகள் ஏற்பட்டிருப்ப தாகத் தெரிவிக்கிறது. 

கையில் தடவிக் கொண்டு கை கழுவாமல் சாப்பிடுவது நல்லது அல்ல.

குறிப்பாக குழந்தைகள் கையில் தடவும் போது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வளர்ந்து வரும் போது சவாலான சூழலை சமாளிக்க முடியாத நிலைக்கு ஆளாகி விடுவர்.

ஊறு விளைவிப்பதாகவே இருக்கிறது...
வணிக ரீதியிலான சேனிடைசர்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு !
ஆல்கஹால் சேனிடைசரை நியூயார்க்கில் உள்ள சிறைக் கைதிகள் போதைக்காகப் பயன்படுத்து கின்றனர். 

இதனால் ஆல்கஹால் பாய்சனிங் ஏற்பட்டு சர்க்கரை அளவு குறைந்து மூளை பாதிப்புக்கு ஆளாகி உயிரிழப்பைக் கூட சந்திக்க நேரிடலாம்.

எப்படிப் பார்த்தாலும் சேனிடைசர் என்பது மனிதர்களுக்கு ஊறு விளைவிப்பதாகவே இருக்கிறது. 

சேனிடைசராலுமே கூட எல்லா விதமான வைரஸ், பாக்டீரியாக்களையும் அழிக்க முடியாது.

2000 -ம் ஆண்டு தொடக்கத்தில் உலகெங்கும் பரவிய ஆந்த்ராக்ஸ் வைரஸை அவை அழித்தாலும், அதன் முட்டைகளை அழிக்க முடிய வில்லை. 

தேவைப்படும் இடத்தில் மட்டும் சேனிடைசரை பயன்படுத்தலாமே தவிர, அதனை ஒரு மாற்றாக வைத்துக் கொள்ளக் கூடாது.
கை கழுவத் தேவையில்லை... 
வணிக ரீதியிலான சேனிடைசர்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு !
இதை துடைத்துக் கொண்டாலே போதும் என்பது சோம்பேறித் தனத்தை வளர்க்கும் செயலாக மாறி விடும். 

சோப்பு போட்டு கை கழுவுவது தான் சரியானது என நம் குழந்தைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும் என்கிறார் பொது மருத்துவர் தேவி சுகன்யா.... 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)