2022-ல் காத்திருக்கும் பேரழிவுகள்? யார் இந்த பாபா வங்கா?

0

2022ல் பூமிக்கு ஏலியன்கள் வரப்போகிறார்கள்.. பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்து இருக்கிறாராம்.. 

2022-ல் காத்திருக்கும் பேரழிவுகள்? யார் இந்த பாபா வங்கா?
அதிலும் உலகை அச்சுறுத்த போகும் இன்னொரு விஷயம் குறித்தும் பாபா வங்கா கணிப்பில் தெரிவித்துள்ளார்.

பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் குறித்து பார்க்கும் முன்.. அவர் யார் என்று பார்த்து விடலாம்.

பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி தான் இந்த பாபா வங்கா. இவருக்கு பல்கேரிய நாஸ்ட்ரடாமஸ் என்ற செல்லப் பெயரும் உண்டு.

நீரிழிவின் முதல் எதிரி செர்ரி பழம் !

இவரது இயற்பெயர் வெஞ்செலியா பண்டவா டிமிட்ரோவா என்பதாகும். எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்டவராக கருதப்படுபவர். 

தனது 12 வயது வரை எல்லோரையும் போலத்தான் வாழ்ந்து வந்தார். ஆனால் அதன் பின்னர் இவரது வாழ்க்கையில் பெரும் மாற்றம் வந்தது.

12 வயதில் இவருக்கு கண் பார்வை பறி போனது. மிகப் பெரிய சூறாவளியால் இவரு பார்வை பறி போனதாக சொல்கிறார்கள். 

ஆனால் இவருக்குப் பார்வை எப்படிப் பறி போனது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.

சூறாவளி இவரது ஊரை சின்னா பின்னமாக்கி விட்டது. குடும்பமே பிரிந்து போனது. 

பல நாட்களுக்குப் பிறகு தான் வெஞ்செலியாவை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். அப்போது இவரது கண்கள் மூடி சீல் வைக்கப்பட்டது போல இருந்தது.

சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?

கண் பார்வையை இழந்த பிறகு, கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை கொடுத்துள்ளார் எனறு பாபா வாங்கா கூறி வந்தார்.

அதன் பின்னர் வெஞ்செலியா எதிர்காலத்தைக் கணித்துக் கூற ஆரம்பித்தார். என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் கூற ஆரம்பித்தார். 

இது பலருக்கு வியப்பளித்தது. பலரின் பிரச்சினைகளையும் அருள் வாக்கு கூறி தீர்த்து வைத்தார் வெஞ்செலியா.

பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கி அந்த வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் !

அவரது கணிப்புகளில் 85 சதவிகிதம் பலித்துள்ளது என்கிறனர் அந்நாட்டு மக்கள். இவருக்கென்று ஆதரவாளர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது. 

இரண்டாம் உலகப் போரின் போது பல்கேரிய ஜார் மன்னர் 3ம் போரிஸ் இவரைப் பார்த்து அருள் வாக்கு கேட்டதாக சொல்கிறார்கள்.

உங்களுக்கு எப்படி எதிர்காலத்தைக் கணித்துக் கூற முடிகிறது என்று இவரிடம் கேட்டால், 

உருவம் இல்லாத சில மனிதர்கள் தனக்குத் தகவல் தருவதாகவும் அதை வைத்தே தான் கணித்துக் கூறுவதாகவும் கூறியுள்ளார் இவர்.

கடந்த 1996ம் ஆண்டு 84 வயதில் பாபா வங்கா உயிரிழந்தார் என்றாலும், இவர் ஒவ்வொரு ஆண்டும் 

இந்த உலகத்தில் நடக்கக்கூடிய முக்கிய, பயங்கர நிகழ்வுகள் குறித்து கணித்து வைத்து சென்றுள்ளார். பாபா வங்காவின் பல்வேறு கணிப்புக்கள் ஏற்கனவே உண்மையாகி உள்ளன. 

விபரீத செயலியால் சிக்கிய தோழிகள்... பீம்ராவ் வில்லங்கம்... அரங்கேறும் விபரீதம் !

அவர் முன்கூட்டியே கணித்திருந்த சோவியத் யூனியன் சீர்குலைவு, இளவரசி டயானா மரணம், 2004ல் தாய்லாந்தை சுனாமி தாக்கியது. 

அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றது உள்ளிட்ட நிகழ்வுகள் உண்மையாகி உள்ளன. 

2022-ல் காத்திருக்கும் பேரழிவுகள்? யார் இந்த பாபா வங்கா?

மேலும், 9/11 தீவிரவாத தாக்குதல் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகியதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்தும் பாபா வங்கா முன்கூட்டியே கூறியுள்ளார். 

அதனிடிப்படையில்  5079ம் ஆண்டு  இந்த உலகம் முடிவுக்கு வரும் என்று கருதப்படுகின்றது. 

டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்து அந்தரத்தில் வீசி கொடுமை !

மேலும், புவி வெப்பமடைதல், அதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் பாபாவின் கொடிய வைரஸ் 

கூற்று உண்மையாகும் சாத்தியங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுமே உலக மக்கள் கடினமான வாழ்வைத் தான் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பது 2022 ஆம் ஆண்டு தான். 

இன்னும் சில நாட்களில் புது வருடம் பிறக்க உள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டில் நடக்க உள்ள 

பேரழிவுகள் குறித்து முன்கூட்டியே கணித்த பாட்டி குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கி அழிக்கும் என்றும் 

இதன் காரணமாக பஞ்சம் தலைவிரித்தாடும் என்றும், உலகின் மிகப் பெரிய நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு, 

7 ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட்... இன்று மாபெரும் வெற்றி கொடுத்த ராபின்சன் கதை !

நிச்சயமாக இந்த ஆண்டு ஒரு உண்மையான போர் வெடிக்கும். ஆசிய தலைவர் ஒருவர் அவருடைய தலைவர் அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசப்படுவார். 

அவரது நாடு ஆயுத மோதலின் களமாக மாறும். இதற்கு ஐரோப்பா அணுவாயுத தாக்குதலின் மூலம் பதிலளிக்கும். 

வானிலை மற்றும் காலநிலையை பொறுத்தவரை இந்த ஆண்டில் அமெரிக்கா மோசமான வறட்சியை எதிர்கொள்ளும். பூமியின் மறுபக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழை கொட்டி தீர்க்கும். 

அப்பளம் விற்ற சிறுவனுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அனுமதி !

சீனாவின் தலைநகரம் தண்ணீரால் பரவும் நோயால் பாதிக்கப்படுவர். இதில் ஏராளமான மக்கள் இறக்க நேரிடும். அதே போன்று ஜப்பானை மழை விட்டு வைக்காது, மழை கொட்டி தீர்க்கும். 

ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏழ்மையான பகுதிகளை பஞ்சம் அழிக்கும்  என்று இப்படி பல கணிப்புகளை பாபா வாங்கா கூறியுள்ளார். 

மேலும், வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என்றும், 2022ம் ஆண்டு அதிகளவில் கணினி பயன்பாடுகளை சார்ந்ததாக இருக்கும் என்றும் 

உலக மக்கள் முன்பை காட்டிலும் அதிக நேரத்தை திரைகளின் முன் செலவிடுவார்கள் என்றும் தனது 2022ம் ஆண்டுக்கான கணிப்பில் பாபா வங்கா கூறியுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள முக்கிய கணிப்பு என்றால், 2022ல் பூமிக்கு ஏலியன் வரும் என்பது தான். 

அதன்படி ஒமுஅமுவா (oumuaumu) என்ற சிறிய கோள் மூலம் பூமிக்கு ஏலியன் வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் இந்த பெயரை தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

விண்வெளி செய்திகளை அடிக்கடி படிப்பவர்களுக்கு இந்த பெயர் ஏற்கனவே பரிட்சயமாக இருக்கும். கடந்த 2017லேயே இந்த ஒமுஅமுவா பூமிக்கு அருகில் வந்தது. 

கடந்த 2017ம் வருடம் பூமிக்கு அருகில் வந்த சிகரெட் போன்ற வித்தியாசமான அந்த சாதனம் பூமிக்கு அருகில் வந்தது. 

கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன?

இதற்கு ஒமுஅமுவா என்று பெயர் வைக்கப்பட்டது. இது பூமி, சூரியனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படவில்லை. இதனால் இது ஏலியன் வாகனமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

இது பூமிக்கு மிக அருகில் வந்துவிட்டு சென்றது. அதன்பின் சூரியனை நோக்கி சென்று விட்டு, பின் சூரியனை கடந்து வேறு வழியாக சென்று விட்டது. 

2022-ல் காத்திருக்கும் பேரழிவுகள்? யார் இந்த பாபா வங்கா?
இது எந்த கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காமல் மிக நேர்த்தியாக அனைத்தையும் கடந்து மிக மெதுவாக சென்றது. தற்போது இது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. 

எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !

இது 2022ல் மீண்டும் பூமிக்கு மீண்டும் வரும். இதில் ஏலியன் வரும் என்று பாபா வங்கா கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் 2022ல் முழுக்க முழுக்க உலகம் ஏஐ மயம் ஆகும். 

அதிகளவில் இணையம், கணிப்பொறியால் virtual உலகமாக எல்லாம் எல்லாம் மாறும் என்று பாபா வங்கா கூறியுள்ளார். 

பேஸ்புக்கின் மெட்டா உலகம் காரணமாக இந்த கணிப்பு உண்மையாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 

இதெல்லாம் போக உலகை அச்சுறுத்த போகும் இன்னொரு விஷயம் குறித்தும் பாபா வங்கா கணிப்பில் தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்வீடன் நாட்டில் பனிப்பாறைகள் உருகி இதனால் பனியில் இத்தனை வருடம் 

உறைந்த நிலையில் காணப்பட்ட ஒரு கொடிய வைரசை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள். இதை வெளியே கொண்டு வருவார்கள் என்று அவர் கூறியுள்ளார். 

கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?

ஏற்கனவே இந்த வருட தொடக்கத்தில் திபெத் நாட்டில் உள்ள பனிப்பாறைகளில் சுமார் 15,000 ஆண்டுகள் உறைந்திருந்த 28 புதிய வகை வைரஸ் உட்பட 33 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் 

கொரோனாவிற்கு இடையே இந்த வைரஸ்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். காலநிலை மாறுபட்டால் பனிப்பாறைகள் உருகுவதால் இந்த வைரஸ்கள் வெளியே வர தொடங்கி உள்ளனர். 

சைனசைடிஸ் நோயின் அறிகுறிகள் என்ன?

இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டில் பனிப்பாறைகள் உருகி இதனால் பனியில் இத்தனை வருடம் உறைந்த நிலையில் 

காணப்பட்ட ஒரு கொடிய வைரசை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று பாபா வங்கா கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings