தாய்லாந்தில் விற்பனையாகும் கஞ்சா பீட்சா... விலை எவ்வளவு தெரியுமா?

0

உலகம் முழுவதும் பிரபலமான போதை பொருள் கஞ்சா. இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. 

தாய்லாந்தில் விற்பனையாகும் கஞ்சா பீட்சா... விலை எவ்வளவு தெரியுமா?

சில நாடுகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. சில நாடுகளில் இதை பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன. 

போதை பொருளா? அல்லது மருத்துவ குணம் கொண்ட மூலிகையா? என இருவேறு தரப்புகளிலும் கடும் வாதங்கள் கஞ்சாசெடி குறித்து வைக்கப்படுகிறது. 

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் அது தடை செய்யப்பட்ட போதை பொருளாக கருதப்படுகிறது.

இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் !

தடை செய்யப்பட்டிருக்கும் போதும் இந்தியாவில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், 

அது சார்ந்து நிறைய குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கஞ்சா வைத்திருப்பதும் 

பயிரிடுவதும், விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் கடும் குற்றமாக கருதப்படுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் தாய்லாந்தில் பிரபல சங்கிலி உணவு நிறுவனம் தி பீட்சா கம்பெனி, 

இந்நிறுவனம் பல இடங்களில் பீட்சா விற்பனை மையம் அமைத்து பீட்சாக்களை விற்பனை செய்து வருகிறது. 

தாய்லாந்தில் விற்பனையாகும் கஞ்சா பீட்சா... விலை எவ்வளவு தெரியுமா?

இந்நிறுவனம் சமீபத்தில் தங்கள் மெனுவில் கிரேஸி ஹேப்பி பீட்சா Crazy Happy Pizza என்ற புதிய வகை பீட்சாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த பீட்சாவின் புதுமை என்ன வென்றால் இந்த பீட்சாவில் டாப்பிங்ஸாக கஞ்சா இலை வைக்கப்பட்டிருக்கும்.

மிகவும் ஆபத்தான போதை பொருள் பட்டியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கஞ்சா நீக்கப்பட்டது. 

உடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாத 7 செயல்கள்!

இதையடுத்து இந்தியாவிலும் கஞ்சா பயன்பாட்டுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்த்தாலும் 

தற்போது வரை மத்திய மாநில அரசுகள் அது குறித்து விவாதத்தை கூட தொடங்கவில்லை.

இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள பீட்சா நிறுவனத்தில் கிரேசி ஹேப்பி பீட்சா என்ற பெயரில் விற்கப்படும் பீட்சாவில் கஞ்சாவும் சேர்த்து தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அரிமுகப்படுத்தப்படவுள்ளது.

தாய்லாந்தில் விற்பனையாகும் கஞ்சா பீட்சா... விலை எவ்வளவு தெரியுமா?

புகழ்பெற்ற தாம் யெம் சூப்பின் சுவை கொண்ட இந்த வகை கிரேசி ஹேப்பி பீட்சா உடன் நன்கு வறுக்கப்பட்ட கஞ்சாவும் 

சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படும். ஆனால் சாப்பிட்டு விட்டு தூங்கி விழத்தான் வாய்ப்புள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் 1,200 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பீட்சாவில் எக்ஸ்ட்ரா சீஸ் போல எக்ஸ்ட்ரா கஞ்சா வேண்டும் என்றால்

200 முதல் 300 ரூபாய் வரை கொடுத்தால் கூடுதலாக இரண்டு முதல் மூன்று கஞ்சா இலைகள் சேர்த்து வழங்கப்படும்.

வாயில் வாழும் பாக்டீரியாக்கள்

எக்ஸ்ராவாக 2-3 கஞ்சா இலைகளுக்கு அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

தாய்லாந்தை பொறுத்தவரை கஞ்சா தடை செய்யப்பட்ட ஒரு பொருள் என்றாலும் கஞ்சாவை உணவு மற்றும் 

குளிர்பான தயாரிப்பில் குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தலாம் என அந்நாட்டு அரசு சட்டம் கொண்டு வந்து விட்டது. 

அதுவும் உணவின் ஒட்டு மொத்த எடையில் 0.2 சதவீதத்திற்கு மிகாமல் கலவை செய்யலாம் யுன சட்டம் சொல்கிறது. 

மேலும் இப்படி தயார் செய்யப்படும் உணவுகளை விளம்பரபடுத்தவோ 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு வழங்கவோ கூடாது. என சொல்கிறது.

தாய்லாந்தில் விற்பனையாகும் கஞ்சா பீட்சா... விலை எவ்வளவு தெரியுமா?

தற்போது தாய்லாந்தில் தயாரிக்கப்படும் இந்த கஞ்சா பீட்சாவிற்கு பயங்கரமான வரவேற்ப்பு கிடைத்துள்ளது. 

விற்பனையும் அமோகமாக இருக்கிறது. ஆனாலும் அங்கும் கஞ்சா சட்ட விரோதமானது தான். 

வாக்கிங்... ஜாகிங்... தவறுகள் தவிர்க்கும் வழிகள் !

அதே நேரத்தில் மருத்துவத்தேவை மற்றும் தனிநபர்கள் மட்டும் தங்கள் சொந்த நலனுக்காக குறைந்த அளவிலான கஞ்சா செடிகளை வளர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கஞ்சா பீட்சா குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings