உடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாத 7 செயல்கள்!

வேகமாகச் சுழன்று கொண்டிருக்கும் இந்த நவீன உலகத்தில் இன்று பலர் சமைக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை.

 உடல் எடையை குறைக்க


பெரும்பாலும் கடைகளிலேயே உணவருந்தி வருகின்றார்கள். இப்படி வெளியில் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தாலும், அது நமக்கு எந்தவித ஊட்டச்சத்தும் அளிப்பதில்லை. 

இதனால், நமது உடல்நலம் பெரிதும் பாதிப்படைகின்றது. இவ்வகை உணவு வகைகளில் இருக்கும் அதிக கொழுப்புச் சத்து, நமது உடல்நலத்தைக் கெடுத்து, நமது எடையை அதிகரிக்கச் செய்கின்றது. 

ஆகவே, நாம் இயன்ற வரை வெளியில் சாப்பிடுவதை குறைத்து, வீட்டிலேயே அதிக கொழுப்பைக் கரைக்கும், ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது. 

உடல் எடையை குறைக்கும் முயற்சிகள் நம்மை வெவ்வேறு முறைகளைத் தேர்ந்தெடுக்க வழிவகுக்கும். 

அவற்றுள் பத்திய உணவு சாப்பிடுதல், உடற்பயி ற்சி செய்தல் ஆகியவை அடங்கும். இவற்றை நாம் எவ்வளவு காலம் செய்து வந்தாலும், நாம் எந்த பயனையும் அடைவதில்லை.
காலை உணவை தவிர்த்தல்
அப்படி யென்றால், நாம் செய்யும் தவறு தான் என்ன? நாம் எதை சரியாக செய்ய வில்லை இதனை அடைவதற்கு? குழப்பமாக உள்ளதா? வாருங்கள், உடல் எ டையை குறைக்க முயற்சிக்கும் போது நாம் செய்யக்கூடாதது என்ன என்பதை பார்க்கலாம்.

காலை உணவை தவிர்த்தல் 

காலை உணவு என்பது ஒரு நாளில் நமக்கு இன்றியமையாத உணவு ஆகும். இது நாம் இரவு முழுவதும் உணவு அருந்தாமல் இருந்த பின்பு சாப்பிடும் உணவு. 

மேலும், காலை உணவானது அன்றாட செயல்கள் சரிவர செய்யும் உடலுக்கு தேவையான வலிமையை அளிக்கின்றது. நமது வளர்சிதை மாற்றம் சரிவர இயங்குவதற்கு உதவுகின்றது.


நீண்ட இடைவேளைக்கு பின்பு உணவு அருந்துவது 

சிறு இடைவேளைகளில் குறைவான உணவை சாப்பிடுவது/சிற்றுண்டி சாப் பிடுவது ஆகியவை, நீண்ட இடைவேளை க்கு பிறகு சாப்பிடும் உணவைக் காட்டிலும் சிறந்தது. 

இதற்கு முரணாக நாம் நம்புவது என்ன வென்றால், நீண்ட நேரம் நாம் உணவு அருந்தாமல் இருப்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது தான். 

இது நமது மெட்டபாலிசத்தை மெதுவாக்கி, நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை யின் அளவை தகர்த்து விடும். இதனை தொடர்ந்து எடை குறைக்க மேற்கொள் ளும் முயற்சியும் கண்டிப்பாக பாதிப்படையும். 

நீண்ட இடைவேளைக்கு பின்பு உணவு அருந்துவது

ஒழுங்கற்ற நடைமுறைகளை பின்பற்றுதல் 

ஒழுங்கற்ற வேலை புரியும் நேரங்கள், உணவு உண்பதற்கு நிலையற்ற நேரங் கள் மற்றும் அன்றாட செயல்களில் ஒழுங்கற்ற நடைமுறைகள் ஆகியவற் றால் சீரான உடல் செயல்பாடுகள் பாதிப்படையும். 

இந்த செயல் பாடுகளுள் ஒன்றான மெட்டபாலிசம், நாம் சாப்பிடும் உணவை ஜீரணிப்பதிலும், கலோரிகளை குறைப்பதிலும் பொறுப் பேற்கின்றது. 

ஊட்டச்சத்து இல்லாத உணவை அடிக்கடி சாப்பிடுதல் 


எண்ணெயில் பொரித்த உணவு மற்றும் பர்கர் முதலியவற்றை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இவ்வகை உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது உடல் எடை குறைப்பிற்கு தடையாக இருக்கும். 

அதிக அளவிலான எண்ணெய், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் நமது உடலின் மெட்டபாலிசத்தை குறையச் செய்து, கலோரிகளை அதிகரிக்கச் செய்யும்.

திரவக் கலோரிகளை சேர்ப்பது 

நீர் நீக்கத்தை குறைப்பதற்காக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் அதிகமாக குடித்தால், அது உடல் எடையை அதிகரிக்கும். 

மதுபானங் களை அதிகமாகக் குடிப்பதால், நாம் என்ன தான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும், அது நமது மெட்டபாலிசத்தை மெதுவடையச் செய்யும்.

ஊட்டச்சத்து இல்லாத உணவு

ஒரே வேளையில் நிறைய உணவை சாப்பிடுதல் 

உடல் எடையை குறைப்பதற்காக நீண்ட இடைவேளையில் உணவு அருந்தலா ம் எனக் கூறுவதை சற்று யோசித்துப் பாருங்கள். இடைவேளை நீளுவதால், உடல் எடையை குறைப்பதில் கடினமாகும். 

அதனால், அடிக்கடி உணவு உட்கொள்ளுதல் மற்றும் 2 மணி நேரத்திற்கு மே லாக ஒரு உணவிற்கும், இன்னொரு உணவிற்கும் இடைவேளை விடக்கூடா து என்பதை மனதில் வேண்டும். 


ஒரு வகையான உணவை முற்றிலுமாக தவிர்த்தல் 

ஒரே வகையான உணவை மட்டுமே அதிக அளவில் சாப்பிடக்கூடாது. அதே போல், ஒரு வகையான உணவை முற்றிலுமாக தவிர்க்கவும் கூடாது. மாறாக மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். 

ஒரு வகையான உணவை முற்றிலுமாக தவிர்த்தல்

உதாரணமாக, இனிப்புக்கள். எந்த செயல்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதில் முக்கியத்துவம் கொடுத்து, உடல் எடை குறைப்பதை முறைப்படி செய்ய வேண்டும். இதனால் உடல் எடையை நல்ல முறையில் சீக்கிரம் குறைக்கலாம்.
Tags: