கொலஸ்ட்ரால் என்பது என்ன? நம் உடல் எங்கிருந்து பெறுகிறது?

0

கொலஸ்ட்ரால் (Cholestrol) என்பது வெண்மை நிறத்திலான மெழுகு போன்ற, கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். 

கொலெஸ்ட்ரோலை உடல் எங்கிருந்து பெறுகிறது?
இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் (எடுத்துக்காட்டாக ஈஸ்ட்ரோஜென்), 

பித்த நீர், வைட்டமின் D போன்ற உடலின் பல்வேறு முக்கியச் செயல்பாடுகளில் பங்கு வகிக்கும் புரதச் சத்துகள் மற்றும் திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் உதவிகரமானதாகும்.

கொலெஸ்ட்ரோலை உடல் எங்கிருந்து பெறுகிறது?

கொலெஸ்ட்ரோலை உடல் எங்கிருந்து பெறுகிறது?

கொலெஸ்ட்ரோலை நமது உடல் பொதுவாக இரண்டு விதங்களில் பெறுகிறது. முதலாவதாக, நமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. 

நமது உடலுறுப்புகளுள் ஒன்றான கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லி கிராம்கள் வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.

இரண்டாவதாக நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கொலஸ்ட்ரால் உற்பத்தியாகிறது. 

பழங்கள் காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில்கொலஸ்ட்ரால் இல்லை.

உடலில் உள்ள பல்வேறு விதமான கொழுப்புச் சத்துகள்:

உடலில் உள்ள பல்வேறு விதமான கொழுப்புச் சத்துகள்:

நமது உடலில் ஓடும் இரத்தத்தில் ‘கொலெஸ்ட்ரால்‘ மற்றும் ‘டிரைகிளிஸெரைட்ஸ்‘ (Triglycerides) ஆகிய இரண்டு விதமான கொழுப்புகள் உள்ளன. 

டிரைகிளிஸெரைட்ஸ் என்பது கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒரு விதக் கொழுப்பே. இது நம்முடைய அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடலுக்கு வழங்குகின்றது. 

கொலெஸ்ட்ரோலைப் போலவே இரத்தத்தில் டிரைகிளிசெரைடுகள் அதிக அளவில் இருந்தாலும் இருதய நோய்களின் அபாயத்தை அதிகப்படுத்தி விடும்.

கொலஸ்ட்ரால் புரதங்களுடன் இணைந்து ஒரு லிபொப்ரொடீன் ஆகி, அதன் மூலம் உடல் முழுவதும் பயணிக்கிறது. லிபோபுரோட்டீன்கள் என்பவை இரண்டு வகைகளாகும். 

அவை:

1. குறைந்த அடர்த்தியுள்ள (Low density) லிபோப்ரோட்டின் (LDL)

2. அதிக அடர்த்தியுள்ள (High density) லிபோபுரோட்டின் (HDL)

அடர்த்திக் குறைவான லிபோபுரோட்டீன் (LDL):

அடர்த்திக் குறைவான லிபோபுரோட்டீன் (LDL):

இது ‘தீய கொலஸ்ட்ரால் ‘ என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த (LDL) அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலந்து செல்லும் போது, இருதயத்திற்கும் மூளைக்கும் செலுத்தப்படும்.

இரத்தக் குழாய்களின் சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டு கொழுப்புக் கோடுகளை உற்பத்தி செய்து விடுகிறது. 

இந்தக் கொழுப்பு கோடுகள் நாளடைவில் அதிகமதிகம் சேர்ந்து உயரத்திலும் அகலத்திலும் பெருத்த நாறுகளாலான தடுப்புப் பலகைகளைப் போல் மாறி விடுகின்றன. 

காலப் போக்கில் இவற்றின் அளவு மேலும் அதிகரிப்பதன் மூலம் இருதயத்தின் பகுதிகளுக்குச் செலுத்தப்படும். 

இரத்த ஓட்ட வேகத்தைத் தடுத்து விடுவதனால் மாரடைப்பு (Heart attack) ஏற்படலாம். மூளைக்குச் செலுத்தப்படும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் பக்கவாத நோயால் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

அடர்த்திமிகு லிபோபுரோட்டீன் (HDL):

அடர்த்திமிகு லிபோபுரோட்டீன் (HDL):

இது ‘நல்ல கொலஸ்ட்ரால்‘ என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்ட்ரோலை தமனியிலிருந்து அகற்றியபின் கல்லீரலுக்குக் கொண்டு செல்கிறது. 

இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்டொரோலை இவ்வாறு அகற்றுவதவன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது.

அதிக அளவான கொலஸ்ட்ரால் எவ்வாறு இருதய நோய்களுக்கு காரணமாகிறது?

அதிக அளவான கொலஸ்ட்ரால்  எவ்வாறு இருதய நோய்களுக்கு காரணமாகிறது?

நமது உடல் தனக்குத் தேவையான அளவில் கொலெஸ்ட்ரோலைக் கல்லீரலின் இயக்கம் மூலம் தயாரித்துக் கொள்கிறது. 

ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர், நாம் மாமிச உணவுகள் உட்கொள்வதன் மூலம் தேவைக்கு அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உருவாகி, 

அது இரத்த, தமனிக் குழாய்களின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் தடுப்புப் பலகைகளைப் போல் தங்கி விடுகிறது. 

மேலும் இவை சிறிது சிறிதாகச் சேர்ந்து அளவை அதிகப்படுத்தும் வகையில் வளர்வதன் காரணமாக இருதயத்திற்கு 

இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களின் உள் சுற்றளவைக் குறுக்கி விடுகின்றது. 

இதன் விளைவாகத் தனக்குத் தேவைப் படும் அளவை விடக் குறைவான இரத்தத்தை நமது இருதயம் பெறுகிறது. 

இரத்தம் நம் உடலில் பயணிக்கும் போது தன்னுடன் இருதயத்திற்குத் தேவையான ‘ஆக்ஸிஜன்‘ (Oxygen) எனும் உயிர்வளியையும் கொண்டு செல்கிறது. 

நல்ல அளவிலான ஆக்ஸிஜன் கொண்ட இரத்தம் இருதயத்திற்குச் செல்ல இயலவில்லை யெனில், ‘ஆன்கினா‘ Angina எனும் நெஞ்சு வலி ஏற்படலாம். 

தொடர்ந்து இருதயத்தின் பகுதிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுவது துண்டிக்கப்பட்டால் அதன் விளைவாகவே heart attack எனும் மாரடைப்பு ஏற்படுகிறது. 

சில நேரங்களில் இந்தக் கொழுப்புச் சில்லுகள் இடம் பெயர்ந்து கட்டிகளாக இரத்தக் குழாய் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. 

அதன் விளைவாக நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. 

அளவை விட அதிகமான கொலெஸ்ட்ரோலின் விளைவாக சீறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) உட்பட டெமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

கொலஸ்ட்ரால் அளவை இரத்தத்தில் அதிகப்படுத்துபவை யாவை?

கொலஸ்ட்ரால்  அளவை இரத்தத்தில் அதிகப்படுத்துபவை யாவை?

பல்வேறு காரணிகள் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்துகின்றன :

– அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்

– அதீத உடற்பருமன் (Obesity)

– உடல் இயக்கக் குறைவான பணிகள்

– புகைப் பழக்கம்

– மன அழுத்தங்கள்

மதுப் பழக்கம்

– சர்க்கரை நோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்

– கருத்தடை மாத்திரைகள் உட்கொள்தல்

– வயோதிகம்

– பாலியல் காரணங்கள் (பெண்கள் குழந்தை பெறும் பருவத்தில் குறைந்த கொலஸ்ட்ரால் அளவினைப் பெற்றிருப்பர்).

– தலைமுறை

இரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதன் அறிகுறிகள் என்ன?

பொதுவாக இரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான எந்த ஓர் அறிகுறியையும் அது ஏற்படுத்துவதில்லை; 

ஆகையால் தான் அது “அமைதியான உயிர்க்கொல்லி” என்று அறியப்படுகிறது.

இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோலை எவ்வாறு கணக்கிடுவது?

இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோலை எவ்வாறு கணக்கிடுவது?

இளைஞர்களும் வயதானவர்களும் தங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு என்பது, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் எடுக்கப்பட்ட மாதிரி (sample) இரத்தத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.

அதிலும் ‘லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்‘ (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.

இப்பரிசோதனை மூலம் :

இரத்தத்திலுள்ள மொத்த கொலஸ்ட்ரால்

LDL (தீய) கொலஸ்ட்ரால்

HDL (நல்ல) கொலஸ்ட்ரால்

ட்ரைகிளிசரைடுகள் - Triglycerides

ஆகியவற்றின் விபரங்களை அறியலாம்.

நல்ல ஆரோக்கியமான நிலையான கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவுகள் எவை?

நல்ல ஆரோக்கியமான நிலையான கொலஸ்ட்ரால்  மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவுகள் எவை?

1) மொத்த கொலெஸ்ட்ரோலின் இயல்பான அளவு

200 mg/dl க்கும் குறைவாக 

5.2 mmol/L க்கும் குறைவாக

2) LDL (தீய) கொலெஸ்ட்ரோலின் இயல்பான அளவு: 

130 mg/dl  -க்கும் குறைவாக 

3.37 mmol/L  -க்கும் குறைவாக

3) HDL (நல்ல) கொலெஸ்ட்ரோலின் இயல்பான அளவு: 

ஆண்கள் : 40-50 mg/dl  -க்கும் குறைவாக 

1.0-1.28 mmol/L  -க்கும் குறைவாக

பெண்கள் : 50-60 mg/dl -க்கும் குறைவாக 

1.28-1.54 mmol/L  -க்கும் குறைவாக

4) ட்ரைகிளிசரைடுகள் - Triglycerides இயல்பான அளவு :

150 mg/dl க்கும் குறைவாக 

1.69 mmol/L க்கும் குறைவாக

முக்கியமாக இரண்டு விதமான அளவு கோல்கள் மூலம் கொலஸ்ட்ரால் அளவு கணக்கிடப்படுகின்றது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 

முதல் விதம், எடையின் அடிப்படையில். அதாவது ஒரு டெசி லிட்டரில் உள்ள மில்லி கிராம் (mg/dl) எண்ணிக்கையளவு முறை. 

இன்னொன்று, மூலக்கூறு எண்ணிக்கையளவு (molecular count) அதாவது ஒரு லிட்டரில் உள்ள மில்லிமோல்கள் (mmol/L) முறை. 

உங்களது கொலஸ்ட்ரால் பரிசோதனை முடிவை நீங்கள் புரிந்து கொள்வதற்கும் குறிப்பிட்டுச் சொல்வதற்கும் 

இந்த இரு விதங்களில் எவ்விதத்தில் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு கணக்கிடப்பட்டது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)