மனித உடல் உறுப்புகள் செயல்படும் அனிமேஷன்கள் தளம் !

வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமானதாகி விட்டது. இணைய தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது. 
மனித உடல் உறுப்புகள் செயல்படும் அனிமேஷன்கள் தளம் !
மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

இந்த உறுப்புகள் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். 
தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணைய தளம் வழங்குகிறது. 

இந்த தளத்தை கண்டிப்பாக உங்கள் பிள் ளைகளுக்கு அறிமுகம் படுத்தி வையுங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இலகுவாக புரிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

இந்த medtropolis.com தளம் ஆங்கிலம் ஸ்பானிஷ் போன்ற இரு மொழிகளில் காணப்படுகிறது. இந்த லிங்கில் கிளிக் செய்து வரும் விண்டோவில் முதலில் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
மொழியை தேர்வு செய்தவுடன் அடுத்து நீங்கள் எந்த உடல் உறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த உறுப்பின் அனிமேசனும் அந்த உறுப்பின் செயல்படும் விதமும் கொடுத்து இருப்பார்கள்.

இதில் நீங்கள் கர்சரை ஒவ்வொரு பகுதியாக நகர்த்தினால் அந்த பாகத்தின் பெயரும் அது என்ன வேலையை மேற்கொள்கிறது என்ற விவரங்களும் உங்களுக்கு காட்டப்படும். 
இப்படி ஒவ்வொரு உறுப்புகளாக தேர்வு செய்து நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

பெற்றோர்கள் உங் கள் பிள்ளைகளுக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !