பெண்களின் உடல் பற்றிய விளக்கம் !

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நுரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மாதியாகவே உள்ளது.
பெண்களின் உடல் பற்றிய விளக்கம் !
இவர்களுக்கிடையே உள்ள ஒரே வித்தியாசம் இவர்களின் பாலியல் மற்றும் இனவிருத்திக்கான உடலுறுப்புகள் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளது தான்.
ஒரு செல்ஃபி எடுத்து வாயடைக்க வைத்த விஜய்  - மக்கள் என் பக்கம் தான் !
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உருவாக்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்களின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த உறுப்புகளை பாதிப்பதாய் அமைந்துள்ளது.

பாலியலுடன் சம்பந்தப்பட்ட நம் உடலுறுப்புகளை குறித்து பேசுவது சற்று கடினமான காரியம் தான். குறிப்பாக நீங்கள் வெட்கப் படுபவராக இருந்தால் இதை குறித்து விவாதிப்பது ரொம்பவே கஷ்டம்.

உடலின் பல்வேறு இனப்பெருக்க உறுப்புகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் விவாதிப்பது கஷ்டம் தான். இன விருத்திக்கான உடலுறுப்புகள் பொதுவாகவே அந்தரங்கமான ஒன்றாகவே எங்கும் கருதப்படுகிறது.

நம் உடல் எப்படி இயங்குகிறது என்று நமக்கு தெரிந்தால் நம் உடலை நம்மால் மேலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். பிரச்சினைகள் வரும்பொழுது அதற்கான காரணங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அந்த அடிப்படையில் பிரச்சினை யின் காரணத்தை அறிந்து, எது சிறந்த சிகிச்சை என முடிவெடுக்க முடியும். 

நம்மை பற்றி மேலும் மேலும் அறியும் பொழுது மற்றவர்களின் அறிவுரை (நல்லதோ, கெட்டதோ எதுவாய் இருந்தாலும்)யையும் மீறி நம்மால் சொந்த முடிவு எடுக்க முடியும்.

ஒரு பெண்ணுக்கு பெண் என்பதற்கு அடையாளமான இனவிருத்தி உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந் துள்ளன. இவை பிறப்புறுப்புகள் அல்லது இனவிருத்திக்கான உறுப்புகள் என அழைக்கப் படுகின்றன.
 பெண்களின் உடல் பற்றிய விளக்கம் !
வெளிப்பாகத்தை உல்வா என்றழைப்பர். இந்த பாகம் முழுவதையும் சிலர் யோனி என்றழைப்ப துண்டு. ஆனால் யோனி என்பது உல்வாவின் திறப்பிலிருந்து உள்ளே கர்ப்பப்பை வரை போகின்ற வழி யாகும். யோனியை சில நேரங்களில் பிறப்பு வழி என்றும் அழைப்பதுண்டு.

ஆனால், பெண்ணுக்கு பெண் உடல் வித்தியாசப்படும். உறுப்புகளின் அளவு, வடிவம் நிறம்கூட வித்தியாசப்படும். குறிப்பாக வெளி மற்றும் உள் மடிப்புகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும். 
33 வயதில் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் - அதிர்ச்சியில் ரசிகர்கள் !
மார்பகங்கள் மார்பகங்கள் எல்லா வடிவிலும் எல்லா அளவிலும் காணப்படும். ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும் போது இது வளர ஆரம்பிக்கிறது.

அதாவது சிறுமி யாயிருந்து பூப்படையும் பருவத்தில் இது வளர ஆரம்பிக்கிறது. கருத்தரித்த பின் குழந்தைக்கான பால் இங்கு தான் உற்பத்தி யாகிறது.

உடலுறவின் போது இதைத் தொட்டால் பெண்ணின் யோனிக் குழாய் ஈரமாகி பெண்ணை உடலுறவுக்கு தயார்படுத்துகிறது.

மார்பகத்தின் உள்பாகம் சுரப்பிகள் : குழந்தைக்கான பாலை உற்பத்தி செய்கிறது. சுரப்பி குழாய்கள் : இவை பாலை மார்புக் காம்புக்கு கொண்டு செல்கிறது. திறவு (Sinuses) : குழந்தை பால் குடிக்கும் வரை பால் இங்குதான் சேமித்து வைக்கப்படுகிறது.
 பெண்களின் உடல் பற்றிய விளக்கம் !
மார்புக்காம்பு : இதன் வழியே பால் வெளிவருகிறது. சில நேரம் இது விரைத்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சில நேரம் இது தட்டையாக இருக்கும். ஏரியோலா (Areola) : மார்புக் காம்பை சுற்றிய கருத்த மேடான பகுதி.

கருவட்டத்தில் உள்ள மேடுகள் எண்ணெய் பசையை உற்பத்தி செய்கின்றன. அவை மார்புக் காம்பை சுத்தமாகவும் மிருது வாகவும் வைத்திருக்க உதவுகிறது. பருவ மாற்றங்களும் ஹார்மோன்களும் ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் விஷேச வேதிப் பொருட்களாகும்.

இவை உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிடாய்க்கு சற்று முன்பு எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டெரோன் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின்றன.
இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவமடைகிறாள்.

 பருவமடைந்த பின் மாதவிடாய் நிற்கும் வரை, ஹார்மோன்கள் பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார்படுத்துகிறது.

இந்த ஹார்மோன்களின் ஆணைப்படி தான் ஒவ்வொரு மாதமும் சினைப் பைகள் ஒரு முட்டையை வெளி யிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாய் விளங்குகின்றன.

பல குடும்ப கட்டுப்பாட்டு வழிமுறைகள் இந்த ஹார்மோன் களை கட்டுப் படுத்துவது மூலம் நடக்கிறது. கருத்தரித்த பின்பும், தாய்பால் ஊட்டும் போதும் கூட ஹார்மோன்கள் பல மாற்றத்தை உண்டாக்குகின்றன. 

இந்த ஹார்மோன்க ளால் தான் கர்ப்பமாயிருக்கும் போது மாதவிடாய் வருவதில்லை. குழந்தை பிறந்த உடனே பால் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.

ஒரு பெண் இன விருத்திக்கான கட்டத்தை கடக்கும் பொழுது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக குறையும்.

சினைப் பைகளும் முட்டையை வெளியிடாது. அவள் உடலில் கருத்தரித்த லுக்கான நிலை முடிந்து போகும். மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும்.
 பெண்களின் உடல் பற்றிய விளக்கம் !
இதற்கு பெயர் தான் மாதவிடாய் நின்று விடுதல் (Menopause) அதைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் மனநிலை, காம உணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகிய வற்றிலும் மாற்றம் ஏற்படும்.

மாதவிடாய் ஒரு பெண் இன விருத்திக்கான காலக்கட்டத்தில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் அவளின் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் யோனிக் குழாய் வழியாக உடலை விட்டு வெளியேறு கிறது. இதற்கு பெயர்தான் மாதவிடாய்.

மாதவிடாய் நடப்பது உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம். இதன் மூலம் உடல் கருத்தரித் தலுக்கு தயாராகிறது. இந்த மாதவிடாயை பல பெண்கள், தங்கள் வாழ்வின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் பல நேரங்களில் அவர்களுக்கு இது ஏன் நிகழ்கிறது? இந்த மாற்றம் ஏன் ஏற்படுகிறது என்றெல்லாம் தெரிவதில்லை. 

மாதாந்திர சுற்று (மாதவிடாய் சுற்று) மாதாந்திரச் சுற்று ஒவ்வொரு பெண் ணுக்கும் வித்தி யாசப்படும். இரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிறது.

பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த ரத்தப் போக்கு ஏற்படும். சில பெண்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை கூட இது ஏற்படும். சில பெண்களுக்கோ 45 நாட்களுக்கு ஒருமுறை தான் இது நிகழும்.
பெண்களின் உடல் பற்றிய விளக்கம் !
மாதவிடாய் சுற்றின் போது, ஒவரியில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ் டெரான் ஹார்மோன் களின் அளவு மாறிக் கொண்டே யிருக்கும். மாதச்சுற்றின் முதல் பாதியில் பெரும்பாலும் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் தான் சுரக்கும்.

இதனால் கருப்பையின் உட்சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களா லான மிருதுவான படலம் உருவா கிறது. ஒரு வேளை பெண் கருத்தரித்தால் உருவாகும் குழந்தை இந்த மிருதுவான கூட்டில் சுகமாக இருக்கும்.
மாதச் சுற்றின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயார் ஆன உடன், ஏதாவது ஒரு சினைப் பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும். இம்முட்டைஃபெலோப்பியன் குழாய் வழியாக கருப்பையை அடையும்.

அப்போது பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அப்போது பெண் உடலுறவுக் கொண்டாள், ஆணின் உயிரணு முட்டையோடு சேர வாய்ப்புண்டு. இதற்கு கருத்தரித்தல் எனப்பெயர். அது கர்ப்ப காலத்தின் தொடக்கமும் ஆகும்.

மாதச்சுற்றின் இரண்டாம் பாகத்தில், அதாவது அவளது அடுத்த மாதவிடாய் தொடங்கும் வரை அவள் உடல் புரோஜெஸ்டொரோன் ஹார்மோனை சுரக்கிறது.
பெண்களின் உடல் பற்றிய விளக்கம் !
இந்த ஹர்மோனும் கருத்தரித லுக்கு ஏதுவாக கருப்பையின் மிருதுவான உட்சுவரை உருவாக்குகிறது.

பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்தரிக்காது. எனவே கருப்பையின் சுவர்ப் படலத்துக்கு தேவையிருக் காது. சினைப் பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்தி விடும்.

இதன் விளைவாய் சுவர்படலமானது உடைந்து சிதையும். உடைந்து சிதைந்த இரத்தக் குழம்பு கருப்பை யிலிருந்து மாதவிடாயின் போது, உடலை விட்டு வெளியேறும். இதனோடு கூடவே முட்டையும் வெளியேறும்.

இது புதிய மாதாந்திர சுற்றின் தொடக்கமாகும். மாதவிடாய் நின்ற உடன் சினைப் பைகள் சுவர்ப்படலம் உருவாகும். பெண்களுக்கு வயதாகி, மாதவிடாய் முற்றிலுமாக நிற்பதற்கு முன்பு இரத்தப் போக்கு அடிக்கடி ஏற்படலாம்.

இரத்தப் போக்கின் அளவும், இளமையாய் இருந்தபோது உண்டானதை விட அதிகமாக இருக்கலாம். மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிடாய் சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம்.
Tags:
Privacy and cookie settings