ஒரே ஆளை 3 முறை பழி வாங்க நினைத்த மின்னல் கல்லறையை தாக்கி பயங்கரம் !

0

மின்னல் என்பது மழைக் காலங்களில் திரண்ட கார் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல். 

ஒரே ஆளை 3 முறை பழி வாங்க நினைத்த மின்னல் கல்லறையை தாக்கி பயங்கரம் !
கண்ணைப் பறிக்கும் ஒளி வீச்சோடு, கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப் பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி தான் மின்னல். 

மின்னலோடு கூட பேரொலியாய் இடி இடிப்பதையும் கேட்கலாம். சில பொழுதுகளில் மின்னல் ஒரு மரத்தையோ நிலத்தையோ தாக்க வல்லது. 

அதிக சிரிப்பு, தூக்கம், பேச்சு, கோபம் ஆபத்தா?

இம்மின்னல் நிலத்தில் உள்ள விலங்குகளையும், ஆட்களையும் கூட தாக்கும். இதனால் பலர் உயிரிழந்து உள்ளனர்.

ஆனால் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியாக இருந்த வால்டர் சமர்ஃபோர்டு என்பவரை இடி மின்னல் பலி வாங்க துடித்து அவரை மூன்று முறை தாக்கியது. 

ஒரே ஆளை 3 முறை பழி வாங்க நினைத்த மின்னல் கல்லறையை தாக்கி பயங்கரம் !

ஒவ்வொரு முறையும் தாக்குதலிலிருந்து தப்பிய அவரை மின்னலால் கொல்லவே முடியவில்லை. 

இறுதியாக அவர் இறந்த பின்பும் அவர் கல்லறையை தாக்கிய மின்னல் அதன் பின்புற தான் அவர் மீதான தாக்குதலை நிறுத்தியது. 

காலையில் சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி?

இதை படித்ததும் எந்த பைத்தியகாரன் எழுதியது என நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. 

ஆனால் இது ஒரு உண்மை சம்பவம் உ்ண்மையிலேயே ஒரு மனிதனை இடி மின்னல் கொலை செய்வதற்காக பலி வாங்க துடித்தது. அது குறித்த முழு கதையை கீழே படியுங்கள்.

இடி, மின்னல் 

இடி, மின்னல்

இந்த மின்னல் ஏன் தோன்றுகிறது தெரியுமா? அதற்குக் கொஞ்சம் இயற்பியலின் துணை தேவை. மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும் போதோ, வேறு பல காரணங்களாலோ மின்னூட்டம் பெற்று விடும். 

எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகருகே வரும்போது காற்றின் வழியாக மின் பரிமாற்றம் ஏற்படும். அப்போது ஏற்படுகிற ஒளிக்கீற்று தான் மின்னல். 

இடியும் மின்னலும் ஒருங்கிணைந்த நிகழ்வுகள் என்றாலும் ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் முதலில் மின்னல் நம் கண்களுக்குத் தெரிகிறது. 

பிசாசு 2 ல் ஆடை இல்லாமல் நடிக்கும் ஆண்ட்ரியா !

இடிச்சத்தம் அதற்குப் பிறகு தான் நம் காதுகளை அடைகிறது. ரு ஆண்டு முழுவதற்குமான மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். 

ஆனால் மின்னலின் மின் சக்தியைச் சேமிக்கும் ஆற்றல், நம்மிடம் இல்லாததால் அது வீணாகப் போகிறது.

பூமி மீது தாக்குதல்

பூமி மீது தாக்குதல்

வானில் இருள் சூழ்ந்து மேகங்கள் மோதி இடி மின்னல் உருவாகும் நேரத்தைப் பார்க்கவே அருமையாக இருக்கும். 

நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் செல்லும் போது பலர் இவ்வாறாக இடி மின்னல்களைப் பார்த்திருப்போம். 

இந்த இடி மின்னல் நம்மைத் தாக்கினால்? இந்த உலகை இடி மின்னல் தினமும் தாக்கிக் கொண்டே தான் இருக்கிறது.

மின்னல் மேன்

மின்னல் மனிதன்

இடி மின்னல் தாக்கியவர் உயிர் பிழைப்பது அதிசயம். அப்படியே உயிர் பிழைத்தாலும், கை கால்கள் அல்லது உடலில் ஏதேனும் ஒரு பாகம் செயல் இழந்து போகும். 

அந்த அளவிற்குச் சக்தி வெளியேறும். ஆனால் ஒருவருக்கு வாழ்வில் பல முறை இடி தாக்கியுள்ளது. அதில் ஒரு முறை கூட அவருக்கு உயிர் பிரியவில்லை. 

குழந்தைகளுக்கு சோள ரவை உப்புமா செய்வது எப்படி?

அது மட்டுமல்ல இவர் இறந்த பின்பு கூட அவரது கல்லறையை இடி தாக்கியது. இந்த மனிதரைப் பற்றித் தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வால்டர் சம்மர்ஃபோர்ட்

வால்டர் சம்மர்ஃபோர்ட்

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் வால்டர் சம்மர்ஃபோர்ட். இவர் பிரிட்டிஷ் நாட்டு ராணுவ அதிகாரி. பிரிட்டிஷ் ராணுவத்தில் மேகராக பணியாற்றினார். 

1918ம் ஆண்டு நடந்த முதல் உலகப் போரில் இவர் பங்கு மிகவும் பெரியது. 

எதிரிகளை அழிக்கப் பல வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். பல சண்டைகளைத் தலைமை வகித்து நடத்தி வெற்றி கண்டார்.

மழை நேரம்

மழை நேரம்

இவர் ஒரு முறை சண்டைக்குக் குதிரையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வானம் மேக மூட்டத்துடன் மழை பெய்யத் தயாராகிக் கொண்டிருந்தது. 

மழை பெய்தாலும் சண்டை விடக்கூடாது எனத் தனது குழுவினரை வழி நடத்தி சண்டை போடும் உத்வேகத்தில் குதிரையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தார்.

மின்னல் தாக்குதல்

மின்னல் தாக்குதல்

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு பயங்கரமான இடி மின்னல் ஏற்பட்டு அது வால்டரை தாக்கியது. இதனால் வால்டர் குதிரையிலிருந்து தூக்கி வீசப்பட்டார். 

இதைப் பார்த்த சக வீரர்கள் அதிர்ச்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அவர் பறப்பதைப் பார்த்தவர். 

சினிமாவில் வரைகலை காட்சிகளில் பீரோக்கள் அடித்து வில்லன்கள் அந்தரத்தில் பறப்பார்களே ஸ்லோ மோஸனில் அந்த மாதிரி பறந்து ஒரு இடத்தில் சென்று விழுந்தார்.

ராணுவ டாக்டர்

ராணுவ டாக்டர்

சில விநாடிகளுக்குப் பின்பு அவரை மின்னல் தாக்கியது சக வீரர்களுக்குத் தெரிந்தது. பின்னர் படையிலிருந்த சிலர் அவரை மீட்டு ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

சுவைமிக்க மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி ?

அவர் உயிருடன் தான் இருக்கிறார். என அறிந்த ராணுவ டாக்டர்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்கத் துவங்கினர். மின்னல் தாக்கியதில் அவர் சென்ற குதிரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது.

உடல் தகுதியில்லை

உடல் தகுதியில்லை

ராணுவ டாக்டர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றி விட்டனர். ஆனால் அவரது இடுப்பு கீழே வேலை செய்யாமல் போனது. 

டாக்டர்கள் இதற்குச் சிகிச்சை அளிக்கப் பல நாட்கள் ஆகும். அப்படியே அளித்தாலும் அவர் பழைய படி ராணுவத்தில் இணைய உடற்தகுதி இல்லாமல் போய் விடுவார் எனக் கூறினர்.

கனடா 

கனடா

இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு ராணுவ பணியிலிருந்து ஓய்வு அளித்தது. 

இதனால் அவர் தனக்கு வாழ்வில் ஏற்பட்ட பெரும் துன்பத்தை மறக்கத் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்குச் சென்று செட்டில் ஆக நினைத்து கனடா நாட்டிற்குச் சென்றார்.

புளியை பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன? #India Dates

அந்த நாட்டிற்குச் சென்ற அவர் அங்குச் சிகிச்சையும் பெற்றார். ஒரு சில ஆண்டுகளில் எழுந்து நடக்கத் துவங்கி விட்டார். கால்கள் எல்லாம் ஓரளவிற்கு வேலை செய்யத் துவங்கி விட்டது.

இரண்டாவது சம்பவம்

இரண்டாவது சம்பவம்

இந்நிலையில் 1924ம் ஆண்டு வால்டர் கனடாவில் அவர் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் உள்ள ஒரு ஆற்றில் சென்று மீன் பிடித்து நேரத்தைக் கழிக்க முடிவு செய்தார். 

அவர் மீன் பிடிக்கும் போது வானம் இருண்டு கொண்டு வந்தது மழை வரும் போல இருந்தது. அவர் எழுந்து நடக்கத் துவங்கும் முன் லேசாக மழை பெய்யத் துவங்கியது.

மரம் தீ பிடித்தது

மரம் தீ பிடித்தது

அதன் பின் அவர் ஒரு மரத்திற்குக் கீழே சென்று மழைக்காக ஒதுங்கினார். அங்கு தான் அவருக்கு வாழ்வில் அடுத்த திருப்பு முனை ஏற்பட்டது. 

அவர் நின்ற இடத்திலிருந்த மரம் மின்னலில் சிக்கியது. இதனால் பெரும் பெரும் மின்னல் வந்து மரத்தை தாக்கியதில் மரமே தீ பிடித்து எரிந்தது. அதன் தாக்கம் இவரது உடலிலும் பரவியது.

மீண்டும் உயிர் தப்பினார்

மீண்டும் உயிர் தப்பினார்

இவரும் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானார். ஆனால் அதைப் பார்த்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். 

மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு உயிர் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கத் துவங்கினார். 

அந்த சிகிச்சையில் அதிர்ஷ்டவசமாக இரண்டாவது முறையும் வால்டர் மின்னல் தாக்குதலிலிருந்து உயிர் தப்பி விட்டார்.

செயலிழந்தது

செயலிழந்தது

ஆனால் அவருக்கு உடலின் வலது பாகம் முழுவதும் செயலிழந்து போனது. 

ஆனால் அதற்கும் சில ஆண்டுகள் தொடர் சிகிச்சை செய்தால் அதிலிருந்து மீண்டு வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஆடு, மாடு, கோழி, மீன் என வித்யாசமான முறையில் சீர் கொடுத்த மாமனார் !

அதன் பின் மீண்டும் மின்னல் தாக்குதலிலிருந்து மீண்டு வரச் சிகிச்சை பெறத் துவங்கினர். சரியாக 2 ஆண்டுகள் சிகிச்சையில் அவர் எழுந்து நடக்கவே துவங்கி விட்டார்.

இதிலும் மீண்டு விட்டார்

இதிலும் மீண்டு விட்டார்

அவரது நரம்புகள் சரியாக செயல்படத் தினமும் உரிய அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். 

அதன் படி அவர் தினமும் அவர் வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்று நடைப் பயிற்சி மேற்கொள்வார். 

எந்த வித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த நான்கு ஆண்டுகள் சென்றன. அவர் கிட்டத்தட்ட இரண்டாவது தாக்குதலிலிருந்தும் மீண்டு வந்து விட்டார்.

அதிர்ஷ்டசாலி

அதிர்ஷ்டசாலி

அவரை எல்லோரும் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவே பார்த்தனர். ஒரு முறை இடி மின்னல் தாக்குதலில் சிக்கினாலே மரணம் தான் எனும் நிலைதான் பலர் பார்த்திருப்பார்கள். 

இவர் இரண்டு முறை சிக்கியும். இரண்டு முறையும் உயிர் பிழைத்து விட்டார். இவரை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகில் யாரும் இல்லை என்றே பலர் பேசினர்.

மூன்றாவது தாக்குதல்

மூன்றாவது தாக்குதல்

இந்நிலையில் 1930ம் ஆண்டு அவர் அந்த பூங்காவில் வாங்க்கிங் செல்லும் போது மீண்டும் மழை பெய்ய மேகக் கூட்டங்கள் ஒன்றாகக் கூடியது. 

மழைக்கு முன்பு இவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என வேக வேகமாக நடக்கத் துவங்கினார். ஆனால் இந்த முறையும் ஒரு மின்னல் வந்து இவரைத் தாக்கியது.

மீண்டும் உயிர் தப்பினார்

மீண்டும் உயிர் தப்பினார்

இவர் அவர் தூக்கி வீசப்பட்டார். இந்த  முறை அவருக்குப் பாதிப்பு அதிகமானது. அவரை மீட்டு மருத்துவமனைக்குக் 

கொண்டு சென்ற போது டாக்டர்கள் பரிசோதனை செய்த போது பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. 

சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட் செய்வது எப்படி?

ஆம் இந்த முறையும் அவர் உயிர் தப்பி விட்டார். அவரது உடலில் உயிர் இருந்தது. ஆனால் அசைவும் இல்லை.

நரம்பு மண்டலம் பாதிப்பு

நரம்பு மண்டலம் பாதிப்பு

பின்னர்கள் டாக்டர்கள் சிகிச்சை அளித்த போது மூன்றாவது முறை மின்னல் தாக்குதலில் உடலில் நரம்பு மண்டலங்கள் 

அதிகமாகப் பாதிக்கப்பட்டு அவரது உடல் முழுவதும் செயல் இழந்து விட்டதை டாக்டர்கள் அறிந்தனர். 

ஆனால் சிகிச்சை மூலம் அவரை மெல்ல மெல்லச் சரி செய்து விடலாம் என டாக்டர்கள் நம்பினர்.

சிகிச்சை பலனில்லை

சிகிச்சை பலனில்லை

தொடர்ந்து அவருக்குச் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. டாக்டர்கள் பல நாட்களாக இவரது நரம்பு மண்டலத்தைச் சரி செய்யும் முயற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தனர். 

வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி?

ஆனால் பெரியதாகவும் எதுவும் பலனில்லை. ஆனால் அவர் மனதிற்குள் பெரும் உறுதியுடன் இருப்பதை டாக்டர்கள் உணர்ந்தனர்.

தன்நம்பிக்கை

தன்நம்பிக்கை

ராணுவ வீரனுக்கே உண்டான உறுதி அவர் மனதிலிருந்தது. கடந்த இரண்டு முறை தாக்குதலிலிருந்தும் அவர் மீண்டு வருவதற்கு அவர் மன உறுதியே காரணம் என டாக்டர்கள் நம்பினர். 

இந்த முறை உடல் முழுவதும் செயல் இழந்திருந்தாலும் மனம் உறுதியுடன் இருப்பதால் தான் மீண்டு வருவேன் என அவர் தன்னுள் நம்பிக் கொண்டிருக்கிறார் என டாக்டர்கள் கூறினர்.

வால்டர் மரணம்

வால்டர் மரணம்

ஆனால் 1932ம் ஆண்டு அவர் உயிர் அவர் உடலை விட்டுப் பிரிந்தது. மூன்று மின்னல் தாக்குதலுக்கு பின்பும் இரண்டு ஆண்டுகள் உயிருடன் இருந்து பின்னர் உயிரை விட்டார் வால்டர். 

பண்ணை வீட்டில் சிக்கிய துணை நடிகை... யார்? இவர் ! 

வால்டர் இறந்ததும் அவரது உறவினர்கள் அவரது உடலைக் கிறிஸ்துவ முறைப்படி புதைத்து அந்த இடத்தில் கல்லறை கட்டினர்.

ஆய்வு

ஆய்வு

இந்த உலகில் ஒரே மனிதரை மூன்று முறை மின்னல் தாக்கியது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இது எப்படிச் சாத்தியம் எனப் பலர் ஆய்வு செய்யத் துவங்கினர். அவரது உடலில் மின்னலை தன் வசம் ஈர்க்கும் ஏதேனும் சக்தி இருக்கிறதா? எனச் சிலர் சந்தேகித்தனர்.

கல்லறையில் தாக்குதல்

கல்லறையில் தாக்குதல்

இந்நிலையில் 1936ம் ஆண்டு அதாவது வால்டர் இறந்து சரியாக 4 ஆண்டுகளுக்குப் பின்பு அவர் வசித்த இடத்தில் இரவு நேரத்தில் ஒரு மயான பகுதியில் மின்னல் தாக்கியது. 

இரவே மின்னல் மற்றும் இடி சத்தம் கேட்டு பலர் எங்கோ இடி விழுந்து விட்டதாகக் கருதினர். மறுநாள் காலையில் எங்கு இடி விழுந்தது என ஆய்வு செய்த போது கல்லின் மீது விழுந்துள்ளது.

4 வது தாக்குதல்

4 வது தாக்குதல்

யாருடைய கல்லறை அது என விசாரித்த போது தான் பலருக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. 

வாழும் போதே மூன்று முறை மின்னல் தாக்குதலுக்கு உள்ளான வால்டன் கல்லறை தான் அது 

மூன்றாவது தாக்குதல் நடந்து சரியாக 6 ஆண்டுகள் கழித்து 4வதாக ஒரு முறை அவரது உடல் மின்னலால் தாக்கப்பட்டது.

விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள்

இந்த செய்தி பலருக்கும் ஆச்சரியத்த்தை ஏற்படுத்தியது. கண்டிப்பாக இவரது உடலில் மின்னலை ஈர்க்கும் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று பலர் சந்தேகித்தனர். 

விண்ணுக்கு சென்று திரும்பிய ஜெப் பெசோஸ் மெய்சிலிர்க்கும் அனுபவம்... ப்ளூ ஆர்ஜின் ! 

அதன் பின்னர் அவர் கல்லறையில் பல விஞ்ஞானிகள் ஆய்வுகள் எல்லாம் நடத்தினர்.

6 ஆண்டு

6 ஆண்டு

ஆனால் யாராலும் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. எப்படித் தொடர்ந்து வால்டரே மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிறார் என யாராலும் அறிவியல் ரீதியாக எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை. 

இதில் ஆச்சரியம் என்ன வென்றால் 1918ம் ஆண்டிலிருந்து 1936ம் ஆண்டு வரை சரியாக ஒவ்வொரு 6 ஆண்டு இடைவெளியிலும் வால்டரை மின்னல் தாக்கியுள்ளது.

மர்மங்கள்

மர்மங்கள்

ஒரு மின்னல் தாக்கினாலே உயிர் பிரியும் என்ற நிலையில் ஒவ்வொரு மின்னல் தாக்குதலிருந்து வால்டர் எப்படித் தப்பினார். 

ஒவ்வொரு முறையும் சரியாக 6 ஆண்டுகள் இடைவெளியில் அவரை மின்னல் தாக்குவது எப்படி? அவரது உடலில் மின்னலை ஈர்க்கும் ஏதேனும் சக்தி உள்ளதா? 

மார்பகம் பெரிதாக்க உண்ண வேண்டிய உணவுகள் !

உயிருடன் இருந்த போது தான் மின்னல் தாக்கியது என்றால் அவர் மரணமடைந்து 4 ஆண்டுகளுக்கு பின்பும் மின்னல் தாக்கியது எதனால் இவை எல்லாமே தீராத மர்மம் தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)