விண்ணுக்கு சென்று திரும்பிய ஜெப் பெசோஸ் மெய்சிலிர்க்கும் அனுபவம்... ப்ளூ ஆர்ஜின் !

0

ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

விண்ணுக்கு சென்று திரும்பிய ஜெப் பெசோஸ் மெய்சிலிர்க்கும் அனுபவம்... ப்ளூ ஆர்ஜின் !
ஜெப் பெஸோஸ் அடங்கிய ப்ளூ ஆர்ஜின் குழு வெற்றிகரமாக விண்ணுக்கு சென்று பாதுகாப்பாக திரும்பி வந்துள்ளது. 

ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் குழு ஸ்பேஸுக்கு சென்று வந்த நிலையில் தற்போது ப்ளூ ஆர்ஜின் ஜெப் பெஸோஸ் குழுவும் இதே சாதனையை படைத்துள்ளது.

முதலில் சிறிய ஆன்லைன் புக் விற்பனை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அமேசான் இன்று மிகப் பெரிய ஆன்லைன் சாம்ராஜ்ஜியத்தையே கொண்டுள்ளது. 

அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இன்று தனது முதல் தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

விண்வெளி குறித்தும், மற்ற கிரகங்கள் குறித்தும் நடக்கும் ஆய்வுகள் கடந்த நூற்றாண்டில் நடுப்பகுதியில் இருந்தே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின்

குறிப்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இதில் பெரிய போட்டியே நிலவியது. ஆனால், இது 21ஆம் நூற்றாண்டு. 

இப்போது விண்வெளி பயணங்களில் உலக நாடுகளைக் காட்டிலும் தனியார் நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கின.

மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. 

குறிப்பாக ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. 

கடந்த வாரம் தான் யூனிட்டி 22 விண்கலம் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் ஸ்பேஸுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், இன்று ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கேட் மூலம் ஜெஃப் பெசோஸ் ஸ்பேஸ் சுற்றுலாமேற்கொண்டார். 

ஜெஃப் பெசோஸுசுடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயதான பைலட் வாலி ஃபங்க் ஆகியோர் விண்வெளிக்குச் சென்றனர். 

ஆலிவர் டேமன்
இவர்கள் மூவருடன் 18 வயதே நிரம்பிய இளைஞன் ஒருவரும் விண்வெளிக்குச் சென்றார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் விண்வெளிக்குச் சென்றவர் எனச் சாதனையைப் படைத்துள்ளார். 

இந்த இளைஞர் தனது டிக்கெட்டிற்கு 28 மில்லியன் டாலர் கொடுத்துள்ளார்.

இருப்பினும், விண்வெளி பயணத்திற்கு சில நாட்கள் வரை அந்த 18 வயது இளைஞர் யார் என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் அந்த 18 வயது இளைஞர் குறித்த தகவல்களை ப்ளூ ஆர்ஜின் வெளியிட்டது. அந்த நபரது பெயர் ஆலிவர் டேமன். 

இவர் நெதர்லாந்து நாட்டின் கோடீஸ்வரரான ஜோஸ் டேமன் என்பவரது மகன். ஜோஸ் டேமன் அங்கு சோமர்செட் கேபிடல் பார்ட்னர்ஸின் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

பள்ளிப் படிப்பை முடித்துள்ள ஆலிவர் டேமன், பைலெட் லைசென்ஸ் வாங்க கல்லூரி படிப்பிற்கு ப்ரேக் விட்டுள்ளார்.

இன்றைய ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டின் ஸ்பேஸ் பயணத்தின் மூலம் மிகக் குறைந்த வயதில் விண்வெளிக்குச் சென்றவர் என்ற பெருமையை ஆலிவர் டேமன் பெற்றுள்ளார். 

நெதர்லாந்து நாட்டின் கோடீஸ்வரரான ஜோஸ் டேமன் என்பவரது மகன்

ஜெஃப் பெசோசுஸடன் விண்வெளிக்குச் சென்ற போதும் இவருக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தான் ரோல் மாடலாம். எலான் மஸ்க் வேறு யாருமில்லை.

நாவில் நீர் ஊற வைக்கும் ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் !

ஸ்பேஸ் சுற்றுலாத் துறையில் ஜெஃப் பெசோஸுக்கு கடும் போட்டி தந்து கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராக்கெட் பூமியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு பேரையும் அழைத்துச் சென்றது. 

அதன் பின் புவிஈர்ப்பு குறைவாக இருக்கும் 100 கிமீ தாண்டிய பகுதியில் இந்த ராக்கெட்டின் கேப்ஸ்யூல் சில நிமிடங்கள் மிதந்து விட்டு பின் பூமியை நோக்கி திரும்பியது. 

மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இவர்களின் விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட்டது.

புதிய ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் (New Shepard) இவர்கள் விண்வெளிக்குச் சென்றனர். கேப்ஸ்யூலை விண்ணுக்கு அனுப்பிய பின் இந்த ராக்கெட்டும் பாதுகாப்பாக திரும்பி வந்தது. 

ஜாக்கிரதையாக போ தாயி... அன்பா பாசமா இருந்துட்டு போவோம்... ஞானகுருக்கள் !

அதன் பின் 6 நிமிடங்கள் கழித்து குழு இருந்த கேப்ஸ்யூலும் பூமிக்கு திரும்பி வந்தது. இந்தப் பயணம் 10 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் 4 நிமிடங்கள் குழு புவி ஈர்ப்பு விசை இன்றி மிதந்தனர். 

தனது பல ஆண்டு ஸ்பேஸ் கனவு முதல் முறையாக ஜெஃப் பெசோஸ் இந்த பயணம் மூலம் இன்று நிறைவேறினார்.

1961 ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கரான ஆலன் ஷெப்பர்டின் நினைவாக இந்த ராக்கெட்டிற்கு New Shepard எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இது தானாக இயங்கும் ஒரு ராக்கெட் (autonomous aircraft), அதாவது இதை இயக்க தனியாக ஒரு பைலட் தேவையில்லை. 

ஜெஃப் பெசோஸ்

இதன் மூலம் விண்வெளி வீரர்களாக இல்லாமல் சாதாரண நபர்களுடன் ஆட்டோமேடிக் ராக்கெட் மூலம் விண்ணுக்குச் செல்லும் முதல் ராக்கெட் என்ற பெயரை நியூ ஷெப்பர்டின் பெற்றுள்ளது.

சுவையான ரமலான் மட்டன் ஹலீம் செய்வது எப்படி? 

அதாவது டெக்சாஸிலிருந்து இந்த ராக்கெட் புறப்படும் போது இதை வழி நடத்த எந்த வொரு பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் உள்ளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இது மட்டுமின்றி விண்வெளிக்குச் செல்லும் அதிக வயதான நபர், மிகக் குறைந்த வயது நபர் ஆகியோரும் இதில் தான் இடம் பெற்றுள்ளனர்.

அந்த 18 வயது இளைஞர் 28 மில்லியன் டாலர் கொடுத்து இந்த ஸ்பேஸ் பயணத்தை மேற்கொண்டார். 

10 நிமிட ஸ்பேஸ் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு டெக்ஸாஸ் பகுதியில் இந்த கேப்ஸ்யூல் பாதுகாப்பாக குழுவுடன் தரையிறங்கியது. 

ரிச்சர்ட் பிரான்சனை தொடர்ந்து தற்போது ஜெப் பெஸோசும் வெற்றிகரமாக ஸ்பேஸ் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாவில் நீர் ஊற வைக்கும் ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் !

இந்த விண்கலன் வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியதும், "ஆஸ்ட்ரனாட் பெசோஸ்: இது வரை இல்லாத மிகச்சிறந்த தினம் இது" என்று அழைத்து பெசோஸ் பெருமிதப்பட்டுக் கொண்டார்.

சாதாரண நபர்களுடன் ஆட்டோமேடிக் ராக்கெட் மூலம் விண்ணுக்குச் செல்லும் முதல் ராக்கெட்

முன்னதாக, பூமியில் இருந்து இரண்டு நிமிடங்கள் பயணம் செய்த பிறகு, இவர்களை சுமந்து சென்ற ராக்கெட் விண்கலனில் இருந்து பிரிந்தது. 

ரமலான் கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் செய்வது எப்படி?

பிறகு மேல்நோக்கி கர்மன் கோடு என்று அழைக்கப்படும் பூமியில் இருந்து மேல்நோக்கி 100 கி.மீட்டர் தூரத்தில் உள்ள 

விண்வெளி எல்லையாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தை நோக்கி நால்வர் குழுவுடன் விண்கலன் முன்னேறியது.

அங்கு எடையற்ற மிதவை நிலையை சுமார் நான்கு நிமிடங்களுக்கு பெசோஸ் உள்ளிட்ட நால்வரும் அனுபவித்தனர். 

தங்களுடைய இருக்கைகளில் இருந்து பெல்டை கழற்றி விட்டு கலனுக்குள்ளேயே மிதந்த நால்வரும் பூமிக்கிரகத்தின் அழகை ஜன்னல் வழியே கண்டு ரசித்தனர். 

ரமலான் கேரளா மட்டன் மசாலா செய்வது எப்படி?

கர்மன் கோடு பகுதியை கடக்கும் போது, நால்வரும் உற்சாகத் துள்ளலுடன் குரல் கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

82 வயதான வேலி ஃபங்க், "ஓ என்ன அதிசயம், பூமியை பாருங்கள்," என்று தான் கண்ட அனுபவத்தை விவரித்தார். 

கர்மன் கோடு பகுதி

விண்வெளி பயணத்துக்கு ஆயத்தமாகும் முன்பு, புவிஈர்ப்பு இல்லாத நிலையில், குட்டிக்கரணம் அடிக்கலாம் என்று உத்தேசித்திருந்ததாக அவர் கூறினார்.

விண்வெளியை அடைந்த போது இவர்களின் விண்கலன் பூமியில் இருந்து 106 கி.மீ தூரத்தில் அதாவது மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் அடி உயரத்தில் பறந்தது. 

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் உணவு !

பின்னர் பூமியை நோக்கி இறங்கிய விண்கலன், பாலைவனத்தில் பாரசூட் உதவியுடன் தரையிறங்கியது.

தரையைத் தொட்டதும் ஜெஃப் பெசோஸ், "நம்ப முடியாத வகையில் நான் நலமாக இருக்கிறேன்," என்று உற்சாகத்துடன் கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)