மின் இணைப்பு இல்லை. ஆனால் கரண்ட் பில் எவ்வளவு தெரியுமா?





மின் இணைப்பு இல்லை. ஆனால் கரண்ட் பில் எவ்வளவு தெரியுமா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலை கிராமத்தில் மின் இணைப்பே இல்லாத வீட்டிற்கு ரூ.621 கரண்ட் பில் வசூலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் கரண்ட் பில் எவ்வளவு தெரியுமா?

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வடக்கு சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் புது வீடு கட்டி வருகிறார்.

வீட்டு வேலை முடிந்து விட்டதால் மின் இணைப்பிற்காகவும், மீட்டர் பொறுத்துவதற்காகவும் சாலை கிராமம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பத்து விட்டு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ம் செலுத்தி உள்ளார். 

ஆனால் இதுவரை மீட்டர் பொறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், புது வீட்டிற்கு உடனடியாக மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 

இதை கேட்ட அவர், வீட்டில் மீட்டரே பொறுத்தவில்லை, மின் கட்டணம் எப்படி வந்தது என்று அதிர்ச்சி அடைந்தார். 

அவரது மாமா முத்துவயிரன் சாலை கிராமம் மின்நிலையத்திற்கு சென்று கேடடுள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் சரியான பதிலை கூறவில்லை என்று சொல்லப்படுகிறது.

அத்துடன் மின்கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல் அவர் ரூ.621 மின் கட்டணத்தை செலுத்தி உள்ளார். 

வீட்டில் கரண்ட் இல்லாமல், மீட்டரும் வைக்காத நிலையில் மின் கட்டணம் வசூலித்த சம்பவம் இளையான்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது மாதிரி தான் 2019 ல் மின் இணைப்பு இல்லாதவருக்கு ரூ. 128 கோடி மின் கட்டணம் வந்தது. கீழே படியுங்கள் உங்களுக்கே புரியும்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷமிம். இவர், தனது மனைவியுடன் ஹப்பூர் சாம்ரி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த மாதம் வந்த மின்கட்டணம், இவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

2 கிலோவாட் மின் இணைப்புக்கு ரூ. 128, 45, 95,444 தொகை மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என எண்ணிய ஷமிம், இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். 

ஆனால், மின்வாரிய அதிகாரிகள் கூறியது ஷமிமை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்தத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை செலுத்தாததால், அவரது வீட்டுக்கு வழங்கியிருந்த மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். 

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஷமிம், எங்களது வேண்டுகோளை செவிகொடுத்து கேட்க யாரும் இல்லை. அவ்வளவு பெரிய தொகையை என்னால் எப்படி செலுத்த முடியும். 

நான் இது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற போது, மின் கட்டணத்தைச் செலுத்தினால் தான் மின்சாரம் வழங்குவோம் எனக் கூறி, மின் இணைப்பைத் துண்டித்து விட்டனர்.

மின் இணைப்பு இல்லை

ஹப்பூர் நகரத்துக்கான மொத்த மின் கட்டணத்தையும் நான் செலுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் என்னால் இந்தத் தொகையை செலுத்த முடியாது. எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக துணை மின் பொறியாளர் ராம் சரண் கூறுகையில், இது தொழில்நுட்பப் பிழையாக இருக்க வேண்டும். 

அவர்கள் மின் கட்டண ரசீதைக் கொடுத்தால், கணினியில் உள்ள தொழில்நுட்பப் பிழைகளைச் சரிசெய்து, புதிய ரசீதை வழங்குவோம். 

இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தொழில்நுட்பத் தவறுகள் நடப்பது இயல்புதான் என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)