தமிழகத்தில் உள்ள ஏழைமக்கள் அரசு அலுவலக தேவைகளை பெறுவதற்கு ‘லஞ்சம்’ என்ற போர்வையில் ஏராளமானோர் சிக்கித் தவித்து வருகின்றனர். உதராணமாக, புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தால் அதைப் பெறுவதற்கு ஓராண்டு ஆகி விடுகிறது.
குடும்ப அட்டை, மின் இணைப்பு பெற ஆதரவு இயக்கம்ஆனால், தமிழக அரசு விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது தான் கேலிக்கூத்தாக உள்ளது. சில இடங்களில், லஞ்சத்தின் அடிப்படையில் ஒரு மாதத்தில் குடும்ப அட்டை கிடைத்து விடுகிறதாம்.
ஆனால், பாவம் ஏழை எளிய மக்கள் லஞ்சப் பணத்திற்கு எங்கே செல்வார்கள். அவர்கள் மட்டும் 6 மாதமோ ஒரு வருடமோ காத்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதை அரசு கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், அரசு அலுவலக தேவைகளை ஏழை, எளிய மக்களுக்கு லஞ்சம் இல்லாமல் பெற்றுத்தர ஆதரவு இயக்கம் ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த இயக்கத்தைப் பற்றி இன்னும் மக்களுக்கு சரிவரத் தெரிய வரவில்லை.

இந்த இயக்கத்தின் மூலமாக மக்கள் பயன்பெற தற்போது வாட்ஸ்அப்பிலும் அறக்கட்டளை பற்றிய தகவல்களை வெளி யிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.குடும்ப அட்டை 5 ரூபாயிலும், 4 சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும், வீட்டிற்கு மின் இணைப்பு 1,600 ரூபாயிலும், 2 சிலிண்டர் இணைப்பு 3,285 ரூபாயிலும், சுமார் 36 வகையான அரசு அலுவலகத் தேவைகளை லஞ்சம் தராமல் பெற.

பெற்றுத் தருவது உண்மையிலேயே பாரட்டுக்குரிய விஷயம். மேலும் அரசு உதவிகளை எப்படி பெற வேண்டும் என்ற அடிப்படை தெரியாத மக்களுக்கு இந்த உதவி பெறும் பயனாக அமையும் என்பது திண்ணம்.
ஆதரவு இயக்க அறக்கட்டளை, மொபைல் எண்: 90437 44957, 82200 44957 மூலமாக தொடர்பு கொள்ளலாம். மேலும் www.atharavuiyakam.weebly.com இணையத்தின் வழியாகவும் தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.