பித்தப்பைக் கல் பரிசோதனைகள் என்ன?

வயிற்றை ‘அல்ட்ரா சவுண்ட்' அல்லது சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்து பித்தக் கற்களின் எண்ணிக்கை, அளவு, பித்தப்பையில் வீக்கம் உள்ளதா, 
பித்தப்பைக் கல் பரிசோதனைகள்
கற்கள் பித்தப்பையை அடைத்துள்ளதா, கல்லீரலைப் பாதித்துள்ளதா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். 

சாதாரண மாக வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால் பித்தப்பைக் கற்களில் 10 சதவீதம் மட்டுமே தெரியும்.

அதே நேரத்தில், பித்தநீரில் கரைகிற ஒரு சாயக் கரைசலை மாத்திரை வடிவில் வாய் வழியாக உட்கொள்ள வைத்து, வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால் இந்தக் கற்கள் இருப்பது தெளிவாகத் தெரியும்.

இவை தவிர, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் 'கோலாஞ்சியோகிராபி' (Cholangiography) எனும் பரிசோதனைகள் மூலமும் இவற்றைக் கண்டறியலாம்.

இதுதவிர, ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனை களை மேற்கொண்டு பித்தப்பைக் கற்களால் கல்லீரலின் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Tags: