அனைத்து இல்லங்களுக்கும் இலவச தண்ணீர் திட்டம் !

0
டெல்லியில் அனைத்து மக்களின் இல்லங்களுக்கும் இலவச தண்ணீர் வழங்கும் திட்டம் அமலில் இருக்கிறது. இந்நிலையில்  அடுத்தப்படியாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தும் இரண்டாவது மாநிலமாக தெலங்கானா மாறப் போகிறது. 
அனைத்து இல்லங்களுக்கும் இலவச தண்ணீர்
இதனை செயல்படுத்துவதில் ஒரு கிலோ லிட்டருக்கு 40 ரூபாயை மின்சாரக் கட்டணமாக செலவிட்டு வருகின்றது. 

👉ஹைதராபாத் நகரில் நாளொன்றுக்கு 530 மில்லியன் கலோன்கள் தண்ணீரை குடிமக்களுக்கு வாரியம் விநியோகித்து வருகிறது. 

இது தொடர்பாக அமைச்சர் கே.டி ராமா ராவ் பேசுகையில், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அவர்களால் உறுதியளிக்கப்பட்ட திட்டம்👈 இலவச தண்ணீர் விநியோகம். 
இது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் வரும் ஜனவரி முதல் வாரத்தில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த இலவச தண்ணீர் திட்டம் தொடர்பாக பேசிய ஹைதராபாத் மெட்ரோ தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவுநீர்👈 வாரிய அதிகாரிகள், தலைநகர் டெல்லியை பொறுத்தவரை தண்ணீர் ஆணையத்திற்கு ஏற்படும் செலவை மாநில அரசு ஈடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஹைதராபாத் மாநகராட்சிக்கு ஆகும் செலவை தெலங்கானா மாநில அரசு ஏற்குமா என்று உறுதியாக தெரியவில்லை. இந்த திட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
அதன்படி, தினசரி 20 ஆயிரம் லிட்டருக்கு குறைவாக தண்ணீர் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படும். எனவே ஹைதராபாத்தில் உள்ள 12 லட்சம் பேரில் 9 லட்சம் பேர் புதிய திட்டத்தின் மூலம் பயனடைவர். 

இதன் மூலம் தண்ணீர்👈 வாரியத்திற்கு மாதம் 70 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடப்பு மாதத்தில் இருந்தே செயல்படுத்த முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
 
ஆனால் திட்டத்தை நடைமுறைப்படுத்த சாப்ட்வேர்களை அப்கிரேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் இருக்கின்றனர். 

அவ்வாறு செய்யும் பட்சத்தில் 20 ஆயிரம் லிட்டருக்கும் குறைவாக தண்ணீர்👈 பயன்படுத்தும் குடிமக்களுக்கு ரசீது சென்று சேராது. இல்லையெனில் திட்டம் அமல்படுத்த பின்னர் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். 

எனவே இலவச தண்ணீர் திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)