தொழிற்சாலை கழிவுநீரின் தரத்தை ஆன்லைனில் கண்காணிக்க திட்டம் !

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரின் தரத்தை ஆன்லைன் மூலம் கண்காணித்து, உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. 
 
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆறுகளும், நீர்நிலைகளும் மாசடைந்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நீர்நிலை களில் கலப்பதைத் தடுக்கவும், 

தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதை நிறுத்தவும் நீர் தர கண்காணிப்பு மையத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்துள்ளது. 

எஸ்எம்எஸ், இ-மெயில் 

நீர் மாசுபாட்டை உடனுக்குடன் கண்காணிக்கவும், அத்தகவலை உடனுக் குடன் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக கண்காணிப்பு மையத்துக்கு தெரிவிக்கவும் மென்பொருள் தேவைப்படுகிறது. 

இந்த மென்பொருளை உருவாக்க மென்பொருள் வல்லுநர்களுக்கு மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. 

மென்பொருளை உருவாக்க... 

இது தொடர்பாக மாசு கட்டுப் பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீரின் தரத்தை கண்காணிப்பதற்கான மென் பொருளை உருவாக்க விருப்பம் உள்ள வல்லுநர்கள் தாங்கள் உருவாக்கும் மென்பொருள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழில்நுட்பக் குழு முன்னிலையில் செயல் விளக்கம் அளிக்கலாம். 
 
 ஏற்கெனவே 3 தொழிற்சாலைகள் தரப்பில் உருவாக்கப்பட்ட மென் பொருள்கள் அங்கீகரிக் கப்பட்டுள்ளன” என்று கூறப் பட்டுள்ளது. 
Tags:
Privacy and cookie settings