ஹோட்டல் பணிப்பெண்ணுக்கு 3.67 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர் !

உலகில் ஆங்காங்கே மனிதநேயம் வெளிப்படுவதால் தான் இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது என பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். சில நிகழ்வுகளை நேரிலேயே கண்டிருப்போம். 
ஹோட்டல் பணிப்பெண்ணுக்கு 3.67 லட்சம் டிப்ஸ்
சமீபத்தில் உணவு தயாராக தாமதமானதால், தங்களுடைய பில்லில் உள்ள டிப்ஸ் பகுதியில் “ஒரு மணி நேரத்திற்கு” என குறிப்பிட்டு, “லொல்👈” (LOL-laughing out loud) என எழுதி விட்டு சென்றனர். 

அந்த பில்லை புகைப்படமெடுத்த ஜெஸ், உணவு தாமதமானதற்கு தகுந்த காரணத்தையும் விளக்கி தனது முகநூல் கணக்கில் பதிவேற்றினார்.

“பில்லின் டிப்ஸ் பகுதியில் “லொல்” என்ற வார்த்தையை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். 

அவர்கள் “லொல்” என எழுதியதற்கு பதிலாக “$0” என எழுதி விட்டு சென்றிருக்கலாம். என்று ஒரு பணிப்பெண்👈 கூறியிருந்தார்.

ஆனால் ஓர் உணவக பணிப்பெண்ணிற்கு இவ்வகையான கிண்டல்களும், மிகக்குறைந்த டிப்ஸ்களும் இயல்பான ஒன்று தான். 

ஆனால் இதற்கு மாறாக பென்சில்வேனியாவில் மனிதநேயம் மிக்க சம்பவம் ஒன்று  நடந்துள்ளது.

👉கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்பிட வந்த நபர் ஒருவர் 5000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 3.67 லட்சம் பணிப்பெண்ணிற்கு டிப்ஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பென்சில்வேனியாவின் பாக்ஸ்டன் எனும் டவுனில் அமைந்திருக்கும் அந்தோணிஸ் எனும் உணவகத்தில் பணிபுரிந்து வருபவர் கியானா டி ஏஞ்சலோ. 

இவர் எப்போதும் போல ஒரு டேபிளில் உணவருந்த வந்த நபருக்கு உணவு பரிமாறி தனது வேலையை செய்து வந்தார். சாப்பிட்டு முடித்த பிறகு, உணவு 👈பரிமாறியவருக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். 

ஆனால், ஒரு நபர், கியானாவிற்கு $5000 டிப்ஸ் கொடுத்து ஆச்சரியம் அளித்துள்ளார். 
இந்திய மதிப்பில் இது 3.67 லட்சம் ஆகும். அனைவரையும் ஆச்சரியப்படுத்திய அந்த நபரின் மனிதநேயத்தை பாராட்டி. உணவக உரிமையாளர் அந்த டிப்ஸ் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உங்கள் நல்ல மனதை பாராட்ட, எங்களிடம் வார்த்தைகள் இல்லை. நன்றிகள் தவிர வேறு என்ன கூறுவது என தெரியவில்லை. 

எங்கள் உணவகத்தில்👈 பணியாற்றும் தொழிலாளி ஒருவர் இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையை சிறப்பாக கொண்டாட நீங்கள் உதவியமைக்கு நன்றி, நன்றி, நன்றி! என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட் 19 காரணத்தால் உலகெங்கிலும் 👉உணவகங்கள் மற்றும் விடுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை மனதில் கொண்டு, மனதார பெருமளவு டிப்ஸ் கொடுத்து உதவியுள்ளார் அந்த நபர்.

லோக்கல் ஊடகங்களில் பேட்டியளித்திருக்கும் கியான டி ஆஞ்சலோ, எனக்கு எவ்வளவு டிப்ஸ் கொடுத்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன். ஆனால், $5000 என்றதும் என்னால் நம்பவே முடியவில்லை. 

நாம் மிகுந்த ஆச்சரியத்திற்கு ஆளானேன் என்று கூறி இருந்தார். தனக்கு கிடைத்த இந்த டிப்ஸ்👈 பணத்தை வைத்து கல்லூரி கட்டணம் செலுத்துவேன், 

மேலும், சில நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவேன் என கூறி இருந்தார் கியானா. தற்சமயம் கியானா பல்கலைக்கழகத்தில் நர்ஸிங்👈 படித்துக் கொண்டே பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

We have no words other than THANK YOU !! Unbelievable support for our staff here!! THANK YOU THANK YOU THANK YOU...

Posted by Anthony's at Paxon Hollow on Saturday, 12 December 2020
Tags: