'ரூட் தல' மாணவர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்கும் - டி ஐ ஜி !

0
ரயில் பயணிகளுக்கு அச்சுறுத் தலையோ, ஆபத்தையோ ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால், ரயில்வே சட்டப்படி கைது நடவடிக்கை பாயும் என, ரயில்வே பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி . அருள் ஜோதி எச்சரித்துள்ளார்.
'ரூட் தல' மாணவர்களுக்கு எச்சரிக்கை



சென்னையில் கடந்த செவ்வாய்க் கிழமை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக பேருந்தில் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை யடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி மற்றும் ராயப் பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிக ளிலும், சுமார் 90 "ரூட்டு தல" மாணவர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளதாக காவல்துறை இணை ஆணையர் சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள்

இந்த நிலையில், செய்தி யாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி . அருள் ஜோதி, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்க ளில் இருந்து சென்னையில் கல்லூரி படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்கள். ரயில்கள் மூலம் காலை மற்றும் மாலை கல்லூரி களுக்கு வந்து செல்கின்றனர்.

தாக்குதல் சம்பவங்கள்
90



சில மாணவர்கள் கத்தியுடன் சக பயணிகளு க்கு அச்சுறுத்தல் களையும், ஆபத்தையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கற்களை கொண்டு வீசி, ரயில்வே பொருட்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது தொடர்கிறது.

எச்சரிக்கை

இது போன்று அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க, ஒரு ரயிலுக்கு 4 ஆர் பி எப் வீரர்கள் வீதம் பணிய மர்த்தப்பட்டு உள்ளனர். 

மேலும் அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்கள் கண்டறியப் பட்டால், அவர்கள் மீது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 153 ன் படி வழக்கு பதிந்து கைது செய்யப் படுவதின் மூலம், 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க ரயில்வே நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

1,360 சிசிடிவி கேமராக்கள்
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வரையிலும், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரையில் உள்ள புறநகர் ரயில் நிலையங் களில், ஒரு ரயில் நிலையத்துக்கு 10 கண்காணிப்பு கேமராக்கள் வீதம், 
1,360 சிசிடிவி கேமராக்கள்
சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 136 புறநகர் ரயில் நிலையங் களில் சுழலும் வகையிலான 1360 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக டிஐஜி அருள்ஜோதி, தெரிவித்தார்

உடனடி நடவடிக்கை

இது தவிர ரயிலில் பயணிக்கும் பயணிகள், ஆர் பி எஃப் உதவி எண்ணான 182 க்கு தகவல் கொடுத்தால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் டிஐஜி அருள் ஜோதி கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)