உங்கள் மொபைல் சரியாக வேலை செய்கிறதா?

நாம ஸ்மார்ட்டா இருக்கோமோ, இல்லையோ… ஆனா நம்ம கையில இருக்க போன் ஸ்மார்ட்டா தான் இருக்கு. ஸ்மார்ட் போன்ல பல வருஷமா இருக்கும் ஸ்பீச் ரெககனைஷன் (speech recognition) ஆப்ஷனை நீங்கள் அதிகம் பயன படுத்தி யிருக்கவே மாட்டீர்கள் அல்லவா? 
அதில் இருந்த பல குறைபாடுகள் காரணமாக இந்த தொழில்நுட்பம், மக்களிடம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. 

ஆனாலும் கூட, இந்த ஸ்பீச் ரெககனைஷன் தொழில்நுட்பத்தில் சாதிப்பதற்காக அதிகம் ஆர்வம் காட்டுகின்றன டெக் நிறுவனங்கள். இதனால், சத்தமே இல்லாமல் இதன் வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 

இதன் வளர்ச்சியை போன்றே இதன் வேகமும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்கிறார் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் லேண்டே.
மேலும் தற்போது இந்த, “ஸ்பீச் ரெககனைஷன்’ சாஃப்ட்வேர் டெக்ஸ்ட் செய்வதை விட மூன்று மடங்கு வேகமாக செயல்படுகிறது. 19 முதல் 32 வயதினருக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டது. 

நாம் பயன்படுத்தும் qwerty கீபோர்டு மூலம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் ஆங்கிலம் மற்றும் மேன்டரின் சைனீஷ் ஆகிய இருவேறு மொழிகளில் டெக்ஸ்ட் செய்தனர். 

மொத்தமாக ஆராய்ச்சியில் 32 பேர் பங்கெடுத்தனர். இதற்காக சொற்றொடர்களின் தினசரி அகராதியில் (standard library of everyday phrases) இருந்து 100 வார்த்தைகளை எடுத்து டைப் செய்தும், ஸ்பீச் ரெககனைஷன் சாஃப்ட்வேரில் பேசியும் பதிவு செய்யப்பட்டன. 
இரண்டும் மக்களை எவ்வாறு சென்றடைகின்றன என்பதையும் ஆராய்ந்தனர். (have a good week end, physics and chemistry very hard, go out for some pizza) போன்ற சொற்றொடர்கள் தான் இதில் அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டது. 

முடிவில் ஆங்கிலத்தில் டைப் செய்வதை காட்டிலும் மூன்று மடங்கு வேகமாக ஸ்பீச் ரெககனைஷன் சாஃப்ட்வேரானது செய்தியை அதிவேகமாக அனுப்புவது கண்டு பிடிக்கப்பட்டது.

ஸ்பீச் ரெககனைஷன் மூலம் அனுப்பப்படும் செய்தி டைப் செய்வதைக் காட்டிலும் 20.4% குறைவான தவறையே ஏற்படுத்துகிறது. 

மேன்டரின் சைனீஸ் மொழியில் செய்திகள் டைப் செய்வதைக் காட்டிலும், 63.4% குறைவான தவறையே ஸ்பீச் ரெககனைஷன் ஏற்படுத்துகிறது. மேலும் இது text செய்வதை காட்டிலும் 2.8% அதிவேகமாக செயல்படுகிறது என்பதையும் கண்டறியப்பட்டது” என்கிறார். 

எல்லா ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஸ்பீச் ரெககனைஷன் ஆப்ஷன் இருந்தாலும் கூட, இதை நாம் பயன்படுத்தாமலேயே இருக்கக் காரணம், அதன் தொழில்நுட்ப பிழைகள் தான். 
விலங்குகள் புரியும் விந்தைகள்
இங்கிலாந்தில் இருக்கும் ஒருவரின் ஆங்கில உச்சரிப்பும், இந்தியாவில் இருக்கும் ஆங்கில உச்சரிப்பும் வேறுவேறு அல்லவா? ஆனாலும் ஒரே மொபைலைத் தான் இருநாட்டவர்களும் உபயோகப் படுத்துவார்கள். 
இது போன்ற எத்தனை நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் கூட, டெக்ஸ்ட் சாட்டிங், மொபைல் கமாண்ட்ஸ் கொடுப்பது போன்ற பல விஷயங்களுக்கு இது பயன்படுவதால், இந்த தொழில் நுட்பத்திற்கான மவுசு இன்னும் குறையவே இல்லை. 

எனவே இன்னும் சில காலம் பொறுத்திருங்கள். உங்கள் மொபைல், உங்கள் சொல்லைத் தட்டாமல் கேட்கலாம்! அப்படியே, தமிழில் சரளமாக பேசுவதையும், ஸ்பீச் ரெககனைஷன் செய்து விடுங்களேன் டெக்கீஸ்!
Tags:
Privacy and cookie settings