விலையில்லா மிதிவண்டித் திட்டம் நிறுத்தம் - அரசுத் தரப்பு !

0
தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களு க்குப் பாடப்புத்தகம், காலணி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இலசமாகக் கொடுக்கப் படுகின்றன. இலவசம் எனும் சொல்லைத் தவிர்த்து 'விலையில்லா' திட்டம் எனச் சொல்லி வருகிறது. 
விலையில்லா மிதிவண்டி



2001 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வால் தொடங்கப் பட்டது இந்தத் திட்டம். 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியி னருக்கு மட்டும் என இருந்ததை, பின் அனைவருக்கும் என மாற்றி அமைத்தார்கள். 

பேருந்து வசதிகள் அதிகம் இல்லாத மாணவர் களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்தத் திட்டம் இருந்தது. 

ஆனால், இந்தத் திட்டம் நிறுத்தப்பட இருப்பதாகச் செய்திகள் வந்தன. 2013 -14 ஆம் நிதி ஆண்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்க, 217 கோடி ரூபாயும், 2014 -15 ஆம் ஆண்டில் 218 கோடி ரூபாயும், 2015 -16 ஆம் ஆண்டில் 235 கோடி ரூபாயும், 

2016 -17 ஆம் ஆண்டில் 250 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கிய நிலையில், 2017 - 18 ஆம் ஆண்டில் 16 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி யிருப்பதை தணிக்கைத் துறையில் அறிக்கை வழியே தெரிய வந்திருக்கிறது. 

அதற்கு அடுத்த ஆண்டான 2018- 19 ஆண்டுக்கு நிதி ஒதுக்கி யதற்கான குறிப்புகளும் இல்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் பல லட்சம் மாணவர் களுக்கு மிதிவண்டி வழங்கியதாக இருப்பது முரணாக இருக்கிறதே என்று, கல்வி செயற் பாட்டாளர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். 
இதனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை இந்த அரசு செயல் படுத்தாமல் முடிக்க விருக்கிறதோ என்ற கேள்வி களையும் எழுப்பி வருகின்றனர்.

இந்தத் திட்டத்தால் கிடைக்கும் சைக்கிள் மாணவர் களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது மிதிவண்டி அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் இது குறித்து கேட்ட போது, "பாடப் புத்தகங்களே உரிய நேரத்தில் வருவதில்லை. 
ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட மிதிவண்டித் திட்டம்



அப்படியே வந்தாலும் சில வகுப்பு களுக்கு மட்டும் கொடுக்காமல் இருப்பார்கள். அதை வாங்குவதே பெரும் போராட்டம் தான். அதே போல லேப் டாப் வழங்குவதிலும் நிறைய பிரச்னைகள் வரும். விலையில்லா மிதிவண்டி சென்ற ஆண்டு எங்கள் பகுதியில் வழங்கப் படவில்லை. 

மற்ற இடத்தில் எப்படி என்று தெரிய வில்லை. அந்த மாணவர் களுக்கு இந்த ஆண்டு வழங்கப் பட்டன. இன்னும் பல இடங்களில் வழங்கப் படவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தால் கிடைக்கும் சைக்கிள் மாணவர் களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது. 

எங்கள் ஊரில் பள்ளி தொடங்கும் நேரத்துக்கு ஒரு பஸ் வரும். ஆனால், பெரும்பாலும் அது தாமதமாகவே வரும். அதனால், அதில் வரும் மாணவர்கள் முதல் வகுப்பை முழுமை யாகக் கேட்க முடியாத நிலைதான் இருந்தது. 

சைக்கிள் கொடுத்ததும் சரியான நேரத்துக்கு வந்து கொண்டிருக்கி றார்கள். குறிப்பாக மாணவிகள் வருவதற்கு ஈஸியாக இருக்கிறது. அதனால், சைக்கிள்கள் வழங்குவதை நிறுத்தாமல் இருந்தால் நல்லது" என்று கருத்து களைப் பகிர்ந்து கொண்டனர்.
"விலையில்லா மிதிவண்டித் திட்டம் நிறுத்தப்பட விருக்கிறதா?" என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். "நிச்சயமாக இல்லை. இப்போது தான் இது தொடர்பான அதிகாரிகளுடன் பேசினேன். 

போன வருஷம் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ இரண்டு வகுப்பு மாணவர் களுக்கும் கொடுத்தோம். அதற்கு முந்தைய வருஷம் தான் சில காரணங்க ளால் கொடுக்க வில்லை. 
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்



இந்த வருஷம் அனைத்து சி.இ.ஓக்களு க்கு கடிதம் அனுப்பி, மாணவர்கள் எண்ணிக்கையை உறுதிப் படுத்தச் சொல்லி யிருக்கிறோம். 

அதனால் எந்தந் தடையும் இல்லை. நீங்கள் நியூஸ் பேப்பரில் பார்த்தாலே தெரியுமே! எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் எனப் பலரும் விலையில்லா மிதிவண்டிகள் கொடுக்கும் செய்திகள் வந்து கொண்டிருக் கிறதே! 

நிதி குறைவாக ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பது என்பதும் சரியான தகவல் இல்லை. அதற்கு முந்தைய ஆண்டுக்கான விடுபடலுக் காக இருக்கலாம்." என்றார்.
"மாணவர் களுக்கு லேப் டாப் வழங்குவதிலும் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே?" எனக் கேட்டேன். "2019 -20 கல்வி ஆண்டில், 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர் களுக்கு லேப் டாப் வழங்கிக் கொண்டிருக் கிறோம். 

திருவள்ளூரில் இரண்டு பள்ளிகள் தவிர அனைத்து க்கும் கொடுத்து விட்டோம். சென்ற ஆண்டு வழங்கப்படாத மாணவர் களுக்கு இந்த ஆண்டு டிசம்பருக்குள் நிச்சயம் கொடுக்கப்படும்." என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)