அமமுக பெயர் கொண்ட சுயேட்சைகளுக்கு குக்கர் சின்னம் !

0
தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின் தமிழகத்தில 127 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது. தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக, தேர்தல் ஆணையர்கள், சுசில் சந்திரா, அசோக் லவசா மற்றும் இயக்குநர்கள் திலீப் சர்மா, ஓஜா ஆகியோர் தமிழகம் வந்தனர்.
அமமுக பெயர் கொண்ட சுயேட்சைகளுக்கு குக்கர் சின்னம்


சென்னையில் நேற்று, அங்கீரிக் கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதி களுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில், இன்று காலை வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி ராஜேந்திரன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மற்றும் உயர் அதிகாரி களுடனும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் அசோக் லவசா, பணப்பட்டு வாடாவை தடுக்க வாகன சோதனையை அதிகரிக்கவும், மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனையை தீவிரப் படுத்தவும் உத்தர விட்டுள்ளதாக கூறினார். மேலும், பட்டுவாடாவுக்காக பணம் எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி யுள்ளதாக குறிப்பிட்டார். 


மேலும், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். அத்துடன், தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க உத்தர விட்டுள்ளதாவும் அசோக் லவசா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மேலும், 4 தொகுதி களுக்கான இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், முடிவு செய்த பின் அதனை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், BSNL விளம்பரத்தில் பிரதமர் புகைப்படம் வருவது குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை எனவும் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும், சுயேட்சை களுக்கு குக்கர் சின்னம் அளித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் யாருக்கும் சாதகமாக செயல்பட வில்லை எனவும் சட்டப் படிதான் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)