ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி வரம்பு மீறி விசாரணை - உயர் நீதிமன்றம் !

0
மறைந்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், தமிழக அரசால் நியமிக்கப் பட்ட ஆறுமுக சாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் தங்கள் தரப்பு மருத்துவர்களிடம் ஆறுமுக சாமி ஆணையம் விசாரிக்கக் கூடாது என்று அப்போலோ நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது.
ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி வரம்பு மீறி விசாரணை


ஆறுமுக சாமி ஆணையத்தில் போதிய நிபுணத்துவம் இல்லை என மனுவில் குறை கூறியிருந்த அப்போலா, சுதந்திரமான, மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு விசாரிக்க வேண்டு மென்றும் கோரிக்கை வைத்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆறுமுக சாமி ஆணையம் 90% விசாரணையை முடித்துள்ளதை சுட்டிக் காட்டி, அப்போலோ வின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.

தங்கள் வரம்புக்கு மீறி விசாரணை மேற்கொள்ளக் கூடாது என ஆணையத் திற்கும் நீதிபதிகள் அறிவுறுத்தி யுள்ளனர். ஜெயலலிதா விற்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரம் பற்றி மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும். சிகிச்சை சரியா? தவறா? என விசாரிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings