தமிழக கோரிக்கைகளை மோடி நிறைவேற்றுவதால் கூட்டணி - தம்பிதுரை

0
அதிமுக கோரிக்கை களை மோடி அரசு நிறைவேற்றி வருவதாக வும், அதனால் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள தாகவும் அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார். மக்களவை தேர்தலை பொறுத்த வரையில் தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக – புதிய தமிழகம் ஆகிய வற்றுக்கு இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. 
தம்பிதுரை


இதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங் களவை உறுப்பினர் பதவியும், பாஜகவு க்கு 5 மக்களவை தொகுதி களும், புதிய தமிழகத் திற்கு ஒன்றையும் அதிமுக ஒதுக்கி யுள்ளது. தேமுதிக வுடன் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சி எந்த முடிவு எடுக்கும் என்பதை இதுவரை கணிக்க முடிய வில்லை. 

இதற்கிடையே தேமுதிக கேட்ட தொகுதி களை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித் துள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்த நிலையில், கூட்டணி மற்றும் தேர்தல் குறித்து அதிமுக எம்.பி. தம்பிதுரை அளித்துள்ள பேட்டியில் கூறி யிருப்பதாவது-

அதிமுக வின் கோரிக்கை களை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. எனவே இந்த கூட்டணி வளர்ந்தால், தமிழகத் திற்கு இன்னும் நிறைய திட்டங்கள் கிடைக்கும்.

அது மட்டுமின்றி தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பது தான் முதல் நோக்கம். இத்தகைய காரணங் களுக்காக நாங்கள் பாஜக வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings