கூட்டணிக்குத் தலைமை ஏற்க ராகுல் தகுதியானவர் தான் - திருமாவளவன் !

0
எந்தத் தயக்கமும் இன்றி காங்கிரஸ் தலைமையில் இனி அணி திரளலாம் என, 


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக தொல். திருமாவளவன் இன்று (செவ்வாய்க் கிழமை) வெளியிட்ட அறிக்கை யில், 

"நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்  களில், பாஜக ஆட்சியி லிருந்த மூன்று மாநிலங்க ளிலும் ஆட்சியை இழந்துள்ளது. 

மற்ற 2 சிறிய மாநிலங்க ளிலும் பாஜக அல்லாத கட்சிகளே ஆட்சியைப் பிடித்துள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 

மூன்று மாநிலங்க ளிலும் அதிகப் படியான நாடாளு மன்றத் தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. 

சத்தீஸ்கரில் உள்ள 11 இடக்களில் 10 தொகுதி களையும், மத்தியப் பிரதேசத்தில் 29 இடங்களில் 27 தொகுதி களையும் 

ராஜஸ்தானில் 25 இடங்களில் அனைத் தையும் ஆக மொத்தத்தில் 65 இடங்களில் 62 இடங்களை பாஜக வென்றிருந்தது.


தற்போது இந்த மூன்று மாநில ங்களிலும் பாஜக அடைந்துள்ள தோல்வி 2019 பொதுத் தேர்தலில் 30 இடங்களைக் கூட அதனால் பெற முடியாது என்பதையே காட்டுகிறது.

பாஜக ஆட்சியிலிருந்த மூன்று மாநிலங் களையும் தக்க வைப்பதில் தான் நரேந்திர மோடியின் 

எதிர் காலம் அடங்கி யுள்ளது என்று ஊடகங்கள் கருத்து தெரிவித்து வந்தன. 

அதனடிப் படையில் பார்த்தால் 2019 பொதுத் தேர்தலில் மோடியின் வீழ்ச்சி உறுதி என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு தனது பிரச்சாரத் தின் மூலம் மாபெரும் வெற்றியை ராகுல் காந்தி ஈட்டித் தந்துள்ளார். 

அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மதச் சார்பற்ற கூட்டணியைத் தலைமை ஏற்று 

வழி நடத்த அவர் தகுதியானவர் தான் என்பதை இதன் மூலம் நிரூபணம் செய்துள்ளார்.

எனவே, இந்தியா வெங்கும் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள் எவ்விதத் தயக்கமு மின்றி 


காங்கிரஸ் தலைமையில் அணி திரண்டு நரேந்திர மோடியின் மக்கள் விரோத கொடுங்கோல் 

ஆட்சியை அகற்றிட முன்வர வேண்டும்" என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings