கண்களில் தொடர்ந்து நீர் வடிவதற்கான காரணங்கள் என்ன?

நம்மில் பலருக்குத் தொடர்ச்சியாகக் கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும் பிரச்சனை இருக்கும். 
இன்றைய கால கட்டத்தில் கைபேசி மற்றும் கணினி போன்ற வற்றின் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்குப் பரவலாக இந்த பிரச்சனை இருக்கிறது.
மனித உடலில் மிகவும் உணர்ச்சி மிக்க பகுதிகளில் கண்களும் ஒன்று. ஒரு சிறு பிரச்சனை கூட கண்களுக்கு அசௌகரியம் அல்லது வலியை உண்டாக்கலாம். 

கண்களில் ஏற்படும் சிறு தொற்று பாதிப்பு கூட நமது அன்றாட செயல் பாடுகளில் குறிப்பாக வேலை, படிப்பு போன்ற செயல்களில் அடுத்த சில நாட்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்.

ஆகவே, கண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கண்களில் சிறு பிரச்சனை உண்டாக நேர்ந்தாலும் உடனடியாக கண் மருத்துவரைக் கண்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பல நேரங்களில் நாம் எதிர் கொள்ளும் கண் தொடர்பான பிரச்சனைகளில் ஒன்று கண்களில் நீர் வடிதல்.

இந்த அறிகுறியுடன், எரிச்சல், அரிப்பு, கண் சிவந்து போவது போன்ற அறிகுறிகளும் தென்படும். 

தொடர்ந்து கண்களில் நீர் வடிதல் பல வகையான பிரச்சனை களைக் கொடுக்கும்.

கண்களில் நீர் வடிதல் ஏற்பட்டால், கண்களில் கை வைத்து கசக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். 

கண்களில் நீர் வடிதலுக்கான சில காரணங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.

அவற்றை இப்போது பார்க்கலாமா?

1. உலர் கண் நோய்க்குறி (Dry Eye Syndrome )
கண்களில் உள்ள திசுக்கள் வறட்சி அடையும் போது இந்த உலர் கண் நோய்க்குறி என்னும் பாதிப்பு உண்டாகிறது. 

காட்சி உபகரணங் களின் அதிக பயன்பாடு, தூசி போன்றவை காரணமாக இந்த பாதிப்பு உண்டாகிறது.
இந்த நிலை உண்டாகும் போது, மனித நோய் எதிர்ப்பு மண்டலம், கண்களில் அதிக நீரை உற்பத்தி செய்து, திசுக்கள் சேதமடைவதை தடுக்க உதவுகிறது.

இதனால் கண்களில் அதிக நீர் தொடர்ச்சியாக இருக்க முடிகிறது. உலர் கண் நோய்க்குறியுடன் கண் எரிச்சல், அரிப்பு, அடிக்கடி கண் சிமிட்டுதல் போன்ற அறிகுறிகள் சேர்ந்து வருகின்றன.

2. சில வாய்வழி மருந்துகள்
பல நேரங்களில் நாம் சில மருந்துகளை எடுக்கத் தொடங்கும் போது கண்களில் நீர் வழிய ஆரம்பிக்கிறது.

ஒவ்வாமைக் கான மருந்து, கட்டிகளுக்கான மருந்து, மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்து, பார்கின்சன் மருந்து போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் போது கண்களில் வறட்சி ஏற்படும்.

இதனால் அதிக நீர் வெளியேற்றப்படும் பாதிப்பு ஏற்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பதில் நடவடிக்கை காரணமாக இந்த நீர் வடிதல் உண்டாவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

3. தன்னுடல் தாக்கு நோய் (Autoimmune Diseases)
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மிகையான இயக்கத்தால் உடலில் உள்ள ஆரோக்கியமான அணுக்களை அழிக்க முற்படும் நிலை தன்னுடல் தாக்கு நோய் என்று அறியப்படுகிறது .

சில வகை தன்னுடல் தாக்கு நோய் பாதிப்பின் காரணமாக கண்களில் நீர் வடிதல் உண்டாகலாம். Sjogren’s syndrome என்னும் தன்னுடல் தாக்கு நோய் கண்களில் ஈரப்பதம் ஊட்டும் சுரப்பிகளை பாதிக்கிறது. 

இதனால் கண்கள் வறண்டு நீர் வடிய தொடங்குகிறது. மேலும், தொடர்ச்சியாக கண்களில் எரிச்சல் மற்றும் வீக்கம் உண்டாகிறது.

4. தடுக்கப்பட்ட கண்ணீர் குழாய்கள்

மனிதக் கண்களை ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக வைக்க , சிறிய சுரப்பிகள் அல்லது குழாய்கள் கண்ணீரை உற்பத்தி செய்கின்றன. 

மேலும், கண்களில் சேரும் அழுக்குகளை வெளியேற்ற இவை உதவுகின்றன.

tearsமாசு, தொற்று, கண் ஒப்பனைப் பொருட்களின் அதீத பயன்பாடு போன்றவை இந்தக் கண்ணீர் சுரப்பிகளை அடைக்கின்றன.

இந்தக் கண்ணீர் சுரப்பிகள் அடைக்கப்படும் போது, கண்கள் வறண்டு, எரிச்சல் ஏற்பட்டு, கண்களில் அதிக திரவத்தை உற்பத்தி செய்கின்றன. 

இதனால் எல்லா நேரத்திலும் கண்களில் இருந்து நீர் வடியத் தொடங்குகிறது.
5. ஒவ்வாமை

மகரந்தம், தூசி, தூசிப் பூச்சிகள், மாசு, புகை, செல்லப் பிராணிகளின் முடி, கோபம் போன்றவை காரணமாக சிலருக்கு ஒவ்வாமை உண்டாகலாம். 

இந்த ஒவ்வாமை காரணமாக கண்களில் உள்ள திசுக்கள் சேதமடைகிறது. இதனால் கண்களில் நீர் உற்பத்தி அதிகரிக்கிறது. 

இதன் காரணமாக கண்களில் நீர் வடிகிறது. கண் ஒவ்வாமையுடன் தொடர்புடைய மற்ற அறிகுறிகள், அரிப்பு, எரிச்சல் மற்றும் கண் சிவப்பு போன்றவை ஆகும்.

6. சில வகை கண் மருந்துகள்
கண் தொற்று, உலர் கண்கள், கண்களில் உண்டான காயம், கண் அறுவை சிகிச்சை ஆகிய வற்றிற்காக மருத்துவர்கள் சில கண் மருந்துகளைப் பரிந்துரை செய்யலாம்.

அதில் சில வகை கண் மருந்துகள் சில எதிர்மறை விளைவுகளான கண் வீக்கம், எரிச்சல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை உண்டாக்கலாம்.
7. கண் தொற்று பாதிப்பு

கண்களில் உண்டாகும் கிருமி அல்லது பாக்டீரியா பாதிப்பால் கண்கள் சிவந்து போவது, எரிச்சல் அரிப்பு, மேலும் அதிக நீர் வழிவது போன்ற பல பாதிப்புகள் உண்டாகும்.

இந்த பாதிப்புகள் சிறிதாக இருக்கும் போதே தகுந்த சிகிச்சை எடுக்காத போது கண்களில் நீர் வடிய ஆரம்பிக்கலாம்.
Tags: