நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு?

0
கால்களை ஒழுங்காக பரிசோதனை செய்வதன் மூலமும் இவற்றை ஆரம்பத்திலேயே இனம் காண்பதன் மூலமும் எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு?

நடக்கும் போது கால் தசை நோ.

கால்களில் விறைப்புத் தன்மை.

கால்கள் குளிர்ச்சித் தன்மை.
கால்களில் உணர்ச்சியின்மை.

கால் உரோமங்கள் உதிர்தல்.

கால் நிறம் மாறுதல்.
கால்களை எவ்வாறு பராமரிக்கலாம்?

தினமும் கால்களில் ஏதாவது காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்து பாருங்கள்.

கால் விரல் இடுக்குகள்.

கால்பாதங்கள் இதை கண்ணாடியைப் பயன்படுத்தி பார்க்கலாம்.

காலின் மேற்பகுதிகள்.

கால்களில் காயங்கள் ஏற்பட்டால் உடன் வைத்திய உதவியைப் பெறவும்.

தினமும் காலை இளஞ்சூடான நீரினால் கழுவி உலர்ந்த துணியால் நீரை ஒற்றி எடுக்கவும். அழுத்தி துடைக்க வேண்டாம். அது சிலவேளைகளில் காயத்தை ஏற்படுத்தலாம்
நீர் இளஞ்சூடானது என்பதை உறுதிப்படுத்திய பின்பே இந்நீரை பயன்படுத்த வேண்டும். 

இதற்கு முழங்கையை நீரினுள் வைத்து பார்ப்பதன் மூலம் நீர் இளஞ்சுடானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நகங்கள் வெட்டும் போது வளைவாக வெட்ட வேண்டாம். நேராக வெட்டவும், வளைத்து வெட்டும் போது சில வேளை காயங்கள் ஏற்படலாம். 

கால்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டால் உடன் வைத்தியரின் உதவியைப் பெறவும். 
கால்களுக்கு மெல்லிய எண்ணெய்களை பூசுவதன் மூலம் வெடிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 

எப்போதும் பாதணிகளை அணியவும் (வீட்டினுள்ளேயும் அணிதல் சிறந்தது) பாதணிகள் அணியாமல் நடந்து திரியும் போது காயங்கள் ஏற்படலாம்.
பாதணிகள் அணியும் போது இறுக்கமான வற்றை அணிய வேண்டாம். இறுக்கமான பாதணிகளின் பட்டிகள் கால்களை வெட்டி காயத்தை ஏற்படுத்தலாம். 
பாதணிகளை சரியான அளவில் அணியவும். இயலுமான வரை பாதங்களை மூடக்கூடியதாக மென்மையான பாதணிகளை அணிவது சிறந்தது.

சப்பாத்து அணியும் போது கால் உறை (கால்மேஸ் அணிந்து சப்பாத்தை அணியவும். கால் உறை அணியும் போது கால்களுக்கு முகப்பவுடர் போட்டு அணியவும்.

கால் உறைகளைத் தெரிவு செய்யும் போது கால் விரல்களை விட அரை அங்குலம் நீளமானதாகத் தெரிவு செய்யவும்,  நைலோன் கால் உறைகளையோ அல்லது இறப்பர் உள்ள கால் உறைகளையோ அணிவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

சப்பாத்துக்களை தெரிவு செய்யும் போது சரியான அளவானதை தெரிவு செய்யவும். இரண்டு சோடி சப்பாத்துக்களை வைத்திருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை அணிதல் சிறந்தது.
நீரழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள் (Complications) !

நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு? 

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ! 

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க ! 

இன்சுலின் மருந்து போடுவது எப்படி? 

இன்சுலின் போடும் முன் கவனிக்க வேண்டியவை !

பார்வையைப் பறிக்கும் நீரிழிவு ! 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)