திடீரென்று உடல் பாகங்கள் ஏன் மரத்துப் போகிறது?

இந்தக் கேள்வியை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் கேள்வி திடீரென்று உடல் பாகங்கள் ஏன் மரத்துப் போகிறது என்பது. 
உடல் பாகங்கள் ஏன் மரத்துப் போகிறது?
நமது உடல் பாகங்களுக்கு உணர்ச்சியை அளிப்பது நமது நரம்பு மண்டலம். 

மூளையும் முதுகுத் தண்டுவடமும் சேர்ந்து மத்திய நரம்பு மண்டலம் (Central nervous system) என்று அழைக்கப் படுகிறது. 

இதிலிருந்து ஆரம்பித்து உடல் முழுவதும் பரவியுள்ள நார் போன்ற அமைப்புடைய நரம்புகள் அனைத்தும் சேர்ந்ததே வெளி நரம்பு மண்டலம் (Peripheral nervous system).

இவை தவிர நமது மனக் கட்டுப் பாட்டில் வராமல் இயங்கும் உறுப்புகளை (இருதயம், மூச்சு, சிறுநீரகம் போன்றவை) செயல்படுத்த மூன்றாவது ஒரு தன்னிச்சை நரம்பு மண்டலமும் உண்டு.
மேலே உள்ள படத்தில் மஞ்சள் நிறத்தில் தெரிவது மூளையும் முதுகுத் தண்டும் சேர்ந்த மத்திய நரம்பு மண்டலம். 

பச்சை நிறத்தில் காட்டப்படுவது உடலின் பல பாகங்களு க்கும் செல்லும் வெளி நரம்பு மண்டலம்.
நமது உடலுக்கு தொடு உணர்ச்சியும் பிற உணர்ச்சி களையும் (வலி, அரிப்பு, சூடு போன்றவை) கொடுப்பது இந்த நரம்பு மண்டலமே. 

நமது உடலின் பாகங்களை நாம் அசைப்பதும் நாம் அசைவதும் நரம்புகளாலே.

பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட உடல் பாகத்திற்கு உணர்ச்சியைக் கொடுக்கும் நரம்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அந்த பாகம் செயலிழந்து விடும். நரம்பின் தன்மைக்கேற்ப பாதிப்பு இருக்கும். 

உணர்ச்சியைத் தூண்டும் நரம்பில் (Sensory nerves) நோய் ஏற்பட்டால் குறிப்பிட்ட உடல் பாகம் உணர்வு இன்றி மரத்துப் போய் விடும். 
இந்த நிலை சில நிமிடங்களோ சில மணி நேரங்களோ அல்லது சில நாட்களோ இல்லை வாழ்நாள் முழுவதுமோ நீடிக்கக் கூடும். 

செயலைத் தூண்டும் நரம்பில் (Motor nerves) பாதிப்பு வந்தால் குறிப்பிட்ட உடல் பாகம் செயலிழந்து துவண்டு விடும்.

இதற்கு பல காரணங்கள் உண்டு.

வெகுநேரம் ஓரிடத்தில் சரியான பாங்கில்லாமல் அமர்ந்திருத்தல் அல்லது உறங்குதல் (உதாரணம். நாற்காலியில் அமர்ந்து கொண்டே கைகளைப் பக்க வாட்டில் தொங்க விட்டுக் கொண்டு உறங்குதல்)

சில சத்துக் குறைபாடுகள்

சர்க்கரை நோய்

சில ஆபத்தான வேதிப் பொருட்கள்

நரம்புகளில் ஏற்படும் கட்டிகள்

சில காயங்களால் நரம்புகள் பாதிக்கப்படுதல்

மூளையில் ஏற்படும் நோய்கள்

காரணமே இல்லாமை.

இது போன்ற நோய்களில் காரணத்தை சரி செய்து விட்டால் நரம்புகள் பழைய நிலைக்கு வந்து விடும். மரத்துப் போன பாகங்கள் மீண்டும் சாதாரண நிலைக்கு வந்து செயல்பட ஆரம்பித்து விடும்.
அல்னார் (ulnar) நரம்பு
கேள்வியின் இரண்டாவது பாகம் திடீரென்று உடலில் ஏற்படும் சிலிர்ப்பைப் பற்றியது. இந்த நிலை பொதுவாக திடீரென்று நரம்புகள் தூண்டப்பட்டால் நிகழ்வது.
நமது உடலில் பெரும்பாலான நரம்புகள் தசைகளால் மூடப்பட்டு பாதுகாப்பாக அமைந்துள்ளன சில நரம்புகள்.

உதாரணம். முழங்கையின் பின்னால் இருக்கும் அல்னார் (ulnar) நரம்பு போன்றவை சற்று வெளிப்புறமாக அமைந் திருக்கும். 

இது போன்ற உடலின் வெளிப் பாகங்களில் அமைந்துள்ள நரம்புகளில் சிறிய அதிர்வோ அழுத்தமோ ஏற்பட்டால் (முழங்கையை திடீரென்று எதாவது பொருள் மீது இடித்து விடுதல்) 

அந்த பாகம் முழுவதும் மின்சாரம் பாய்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்படும். இது சில நொடிகளில் சரியாகி விடும்.

மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் சிறிய அடைப்பு ஏற்பட்டாலும் உடலின் சில பகுதிகளில் சிலிர்ப்பு போன்ற உணர்வு ஏற்படும்.

ஏதாவது ஆபத்தான தருணத்தை உடலும் மனமும் உணரும் போது அட்ரினல் போன்ற சுரப்பிகள் சுரந்து உடல் முழுவதும் சிலிர்ப்பு ஏற்படும்.
வலிப்பு நோயின் சில வகைகளில் உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டு வலிப்பு வரும்.
ஆக பல காரணங்க ளாலும் உடல் சிலிர்ப்போ மரத்துப் போதலோ ஏற்பட்டாலும் பெரும் பாலான சமயங்களில் இவை ஆபத்து இல்லாத தொந்தரவுகளே.
Tags: