எமர்ஜென்சி என்றால் என்ன?

முப்பது ஒன்பது வருடங்களுக்கு மேலாயிற்று… அந்த அச்ச மூட்டும் காலங்களின் ஆட்டங்கள் நிகழ்ந்து 1975 ஜுன் 25 அதிகாலை. திடீரென்று அந்த செய்தி வந்தது. ‘அவசர நிலை பிரகடனம்' !
எமர்ஜென்சி என்றால் என்ன?
அப்படி என்றால் என்ன வென்பதே பலருக்கு தெரியாது. இதற்கு முன் ஒரு போரின் போது இது அறிவிக்கப் பட்டதாக சிலர் சொன் னார்கள்.

தேர்தல் முறை கேடுகளால், இந்திரா காந்தி பாராளு மன்றத்திற்கு தேர்ந் தெடுக்கப் பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ,
பலரின் கவனத்தையும் ஈர்த்த 34 கிலோ மார்பகத்தை கொண்ட செலிபிரிட்டி... சக்சஸ் கதை !
நாட்டுக்கே ஆபத்து என்று திரித்து, அவசர நிலை பிரகடனம் செய் தாராம் அம்மையார்!

அப்போதைய ஜனாதிபதியான பக்ருதீன் அலி அஹமது இந்த சட்டத்தையும், பின்னால் வந்த பல அவசர சட்டங்களுக்கும் மறுப்பேதும் சொல்லாமல் கையெழுத்து போட்டு தள்ளிக் கொண்டி ருந்தார்!

என்ன ஏது என்று புரிவதற்குள் எதிர்கட்சி தலை வர்கள் அனைவரும் சிறை வைக்கப் பட்டனர். ஆயிரக் கணக்கான தொண்டர் களும் சிறையில்..பலர் தலைமறை வானார்கள்!

அப்போது தமிழ் நாட்டில் திமுக ஆட்சி. காங்கிர சுக்கு எதிரான நிலை. தலை வர்கள் பலர் தமிழக த்தில் தலை மறைவாக தஞ்சம் புகுந்தனர்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோவை பேரூரில் ஒரு வீட்டில் தலை மறைவாக இருந்தார் என்றெல் லாம் நண்பர்கள் சொன் னார்கள்!

போரா ட்டங்கள் தடை செய்யப் பட்டன. வீராதி வீர சூராதி சூர தொழிற் சங்க தலை வர்கள் எல்லோரும் கப்சிப்.
ஜனாதிபதி பக்ருதீன் அலி அஹமது
நேரத்து க்கு ரயில்கள் ஓடின…காலை பத்து மணிக் கெல்லாம் அவரவர் சீட்டில் அரசு ஊழியர்கள் பவ்யமாக அமர்ந்தனர்!

யாரை வேண்டு மானாலும் காவல் நிலைய த்திற்கு அழைத்து சென்று உதைக் கலாம், கைது செய்யலாம்,
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை பழம் !
சித்ரவதை செய்ய லாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்கு முறைக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப் பட்டன. 

எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெய பிரகாஷ் நாராயணன், கிருபளானி, அத்வானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலை வர்கள் எந்த காரண மும் இன்றி கைது செய்யப் பட்டனர்.

பல அமைப் புக்கள் தடை செய்யப் பட்டன. ஆர்.எஸ் .எஸ். இவற்றில் ஒன்று. சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்தன.. மார்க்சிஸ்ட் கட்சியும் திமுக வினரும் இதில் அடங்குவர்.

இவர்களின் தலைவர் களும் தொழிற்சங்க வாதிகளும் கைது செய்யப் பட்டு சிறையில் கடும் சித்திர வதைக்கு உள்ளாக்கப் பட்டனர்.
இவர்களை முடக்கிய சட்டமான ‘மிசா’வையே பலர் பின்னாளில் பட்ட மாக அணிந்து கொண்டனர். இதற்கிடை யில் இந்திரா காந்தியும் அவருடைய ஆலோச கர்களும்…இருபது அம்ச திட்டம் என்ற பெயரில்!

வீட்டிலேயே கழுத்து வலியை குணமாக்க வேண்டுமா? அப்ப இத படிங்க !

நாட்டு நலனுக்கு என்று இருபது திட்டங்களை அறிவித்து இருபத்தி நாலு மணி நேரமும் இதன் பஜனை பாடினார்கள்.
Be Indian, Buy Indian
‘Be Indian, Buy Indian’ என்பது இதில் ஒன்று. இதன்படி அந்நிய பொருட் களுக்கு தடை என்ற வதந்தி கிளம்பியது. அப்போது கடத்தல் என்பது பெரும் தொழில் அல்லவா!

அந்நிய வாட்சுகள், அந்நிய டேப் ரிக்கார்ட ர்கள் என்று இந்தியாவு க்கு கடத்தப் பட்ட பொருட்கள் தான் பரவலாக நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த செய்தி கேட்டதும் அனை வரும் இவற்றை வீட்டுக்குள் மறைத்து வைத்த காமெடி களும் நடந்தன.

திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும்… ’மேம் பாலத்துல கஸ்டம்ஸ் செக்கிங் பண்ணி பாரீன் வாட்சுகளை பிடிக்கி றாங் களாம்’ என்று… அவ்வளவு தான்…

முதுகு தண்டுவடத்தின் பணிகள் என்ன? 

அனைவரும் தத்தமது சீக்கோ, ரீக்கோ வாட்சு களை உள்ளா டைக்குள் மறைத்து வைக்காத குறையாய் ஒளித்து வைத்து நடமாடு வார்கள்!

இக்கால கட்டத்தில் இந்திரா மகன் சஞ்சய் காந்தியின் நடவடிக்கைகள் பிரபல மாயின. குடும்ப கட்டுப் பாட்டு திட்டத்தை பலவந்த மாக குடிசை வாசிகள் மீது பிரயோகப் படுத்தினார்.

தில்லியை அழகுபடுத்துகிறேன் பேர்வழி என்று துர்க்மான் கேட் குடிசைகள் மீது புல்டோ சர்களை ஏவினார்.
அவசர நிலை
அவசர நிலையை கேலி செய்து எடுக்கப் பட்ட ‘கிச்சா குர்சி கா’ படத்தின் நெகடிவ் களை கைப்பற்றி கொளுத்தப் ப்ட்டது.

சீனித் துளசி என்றால் என்ன? சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி ! 

அதிகார வ்ர்க்கம்.. தங்களுக்கு வேண்டாத வர்களை உள்ளே தூக்கி போட இந்த அவசர நிலை அவர்க ளுக்கு ஒரு வரப்பிரசா தமாக ஆயிற்று!

கல்லூரி விடுதிகளு க்குள்ளும் காவல் துறை நுழை ந்தது. புரட்சிகர சிந்தனை மிக்க மாண வர்கள் இழுத்து செல்லப் பட்டனர்.

கேரளத் தில் ராஜன் என்ற மாணவன் காவல் நிலைய த்தில் கொலை செய்யப் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. இன்று வரை அவன் உடலுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் இல்லை.

எதிர்ப்பு குரல் கொடுத்த கவிஞர்களும் இலக்கிய வாதிகளும் காவல் நிலைய ங்களில் தொங்க விடப்பட்டு உதைக்கப் பட்டனர்..

உருளைக் கட்டை சிகிச்சை கள் செய்யப் பட்டு நடக்க முடியாத வர்கள் ஆனவர் பலர். இயல் பாகவே ஆதரவுக் குரல் கொடுப்ப வர்களும் உருவா யினர்.

பூமிக்கு அடியில் கட்டப்பட்ட ரகசியமான பாதாள நகரம்?

‘இந்திரா தான் இந்தியா’ என்ற டி.கே. பருவாவின் புகழ் பெற்ற ஜால்ரா வார்த் தையை சிரமேற் கொண்டு தமிழக த்தில் இலக்கி யங்கள் உருவாகின.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத் தட்ட இந்திரா வின் மக்கள் தொடர் பாளராகவே மாறி, இந்தோ சோவியத் கழகம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தியது. இன்றும் நினை விருக்கிறது…

முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு இருபதம்ச திட்டத்தின் புகழ் பாடும் போது சொன்ன வரி… காஷ்மீர் ஆப்பிளை இங்கே இருப்ப வனும் வாங்கி திங்க பயன் படுகிறது இந்த திட்டம் என்று.
இந்திராவை ஒரு துர்கையாக சித்தரித்து ஒரு மாபெரும் ஓவியத்தை காட்சிக்கு வைத்தார்
வினோபா பாவே, அன்னை தெரசா, குஷ்வந்த் சிங் போன்ற வர்கள் பகிரங்க மாக அவசர நிலையை ஆதரித்தனர் என்று சொல் வார்கள்.

எம்.எப்.உசைன் என்ற ஓவியர் இந்திராவை ஒரு துர்கையாக சித்தரித்து ஒரு மாபெரும் ஓவியத்தை காட்சிக்கு வைத்தார்.

பத்திரிக்கை தணிக்கை அப்போது கொடி கட்டி பறந்தது. ஹிந்து போன்ற பத்திரி கைகள் கப்சிப் ஆயின.

எதிர்ப்புக் குரல் இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற பத்திரிகை களில் இருந்து மட்டும் வந்தன. அதிகாரி களுக்கு ஒரு செய்தி பிடிக்க வில்லை என்றால் நீக்கப் பட்ட பின்புதான் அச்சுக்கு போயின.

அப்போதைய பத்திரிகை களில் பல பத்திகள் காலியா கவும் வெள்ளை யாகவும் இருப்பதை பார்க்க லாம். துக்ளக் குக்கு பயங்கர டிமாண்டு, பல பக்கங்கள் வெள்ளை யாய் இருந்தும்!

தண்டுவடம் பாதித்தால் என்ன நடக்கும்?

ஒரு இதழில் எம்ஜியார் நடித்த ‘சர்வாதிகாரி’ படத்தின் வசனங் களை பல பக்கங் களுக்கு அச்சடித் திருந்தார் சோ!

வானொலியை திருப்பி னால் எப்போதும் ‘இருபதம்ச திட்டம்…ஆஹா… இது இந்திரா வின் சட்டம்…ஓஹோ’ என்ற கண்றாவி பாட்டை கேட்க வேண்டியது தலை விதியானது!

திரைப்படத் தணிக்கை களும் தடை களும் இன்னும் பிரபலம். குடிப்பது போன்ற காட்சி களும், வன்முறைச் சண்டை களும் கத்திரிக்கு பலியா யின.

அரசை விமர்சிப்பது போல காட்சிகள் வந்தால் அம்போதான்! தமிழகத் தில் ஜனாதிபதி ஆட்சி ஒரு நாள் பிரகடனப் படுத்தப் பட்டது! பல தலைவ ர்கள் கைது செய்யப் பட்டனர்.

ஸ்டாலின், முரசொலி மாறன் போன்ற வர்கள் உள்ளே! மக்கள் மத்தியில் குமுறல்கள் உருவாகத் தொடங்கின.
சிறையில் சிட்டிபாபு அடித்து கொல்லப்பட்டார்
சிறையில் சிட்டிபாபு அடித்து கொல்லப் பட்டார் என்று தகவல் பரவியது. அவரது உடல் திருவல்லிக் கேணியில் அவரது இல்ல த்தில் வைக்கப் பட்டிருந் தது.

அங்கு குழுமிய மக்களின் மனதில் சிறைக் கொடுமைகள் பற்றிய பல தகவ ல்கள் பரவின.

அதே நேரத்தில் முரசொலி அடியார் போன்ற சிலர் சிறை ஒரு உல்லாசக் கூடம் என்பது போன்ற தகவல் களையும் பரப்பினர்.

பின்னர் ஒரு வழியாக . 1977ல் நடை பெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல் வியை கண்டது.

குழந்தைகளுக்கு கூஸ்கூஸ் கேக் செய்வது எப்படி?

இந்திரா, சஞ்சய் போன்ற வர்கள் கூட அவர்கள் தொகுதி யில் தோற்றனர்! மக்களும் சகஜ நிலை க்கு திரும்பினர்! இப்போது இந்த பிளாஷ்பேக் கதை எதற்கு என்கிறீர் களா?

நாட்டில் எமர்ஜென்சி (அவசர நிலை) பிரகடனப் படுத்தப் பட்டு 40 ஆண்டுகள் ஆன நிலை யில், இது தொடர் பாக டெல்லி யில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரி கைக்கு அத்வானி பேட்டிய ளித்துள்ளார்.

அவசர நிலையை எதிர்த்து பெரும் போராட்ட த்தில் ஈடுபட்டு 19 மாதங்கள் சிறைத் தண்டனை அனுப வித்த அத்வானி அது தொடர் பான பேட்டியில்,

“இந்திய அரசியல் அமைப் பானது எப்போது வேண்டு மானாலும் அவசர நிலை ஏற்படும் அளவுக்கு மிகவும் வலுவற்ற தாகவே இருக் கிறது.
ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கம் நாட்டில் மேலோங்கி இருக் கின்றன
தற்போதைய சூழலில், ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கம் நாட்டில் மேலோங்கி இருக்கின்றன.

அரசியல் சாசன பாதுகாப்பு வலுவாக இருப்பினும் கூட ஜனநாயக த்தை ஒடுக்கும் சக்தி களின் ஆதிக்கமே வலுவாக இருக்கிறது. இப்போது உள்ள சட்ட திட்டங்கள் அவசர நிலையை தவிர்க்க போது மானதாக இல்லை.
மீண்டும் அவசர நிலை ஏற்படாமல் தடுக்கும் அளவிற்கு முதிர்ச்சி யுடைய அரசியல் தலைமை இந்தியா வில் இல்லை என நான் கூற வில்லை.

ஆனால், அந்த தலைமைக்கு அத்தகைய சூழலை தடுக்கும் வலிமை யில்லை என்பதே எனது நம்பிக்கை யின்மையை அதிகரித் துள்ளது.

எனவே, நாட்டில் மீண்டும் அவசர நிலை ஏற்பட வாய்ப் பில்லை என நான் முழுமை யாக நம்ப வில்லை” எனக் கூறி யுள்ளார்.

அது தான் இப்போதைய ஹாட் டாபிக்! இந்த டாபிக்கில் உங்கள் பங்களிப்பை பகிர்ந்து கொள்ளவே மேற்படி முன்கதைச் சுருக்கம்!
Tags: