முதல்வர் காலமானதாக ஜெயா பிளஸில் நியூஸ் !

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற தவறான செய்தியை அதிமுகவின் அதிகார பூர்வ செய்தி தொலைக் காட்சியான ஜெயா பிளஸ் ஒளிப்பரப்பியுள்ளது. பின்னர், அதனை டிவி நிர்வாகம் மறுத்துள்ளது.
முதல்வர் காலமானதாக ஜெயா பிளஸில் நியூஸ் !
சென்னை அப்போலோ மருத்துவ மனையில் 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மிக மோசமாக உள்ளது என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. இதனால் தமிழகம் முழுவதும் பதற்ற நிலை உருவானது. 

இதனைத் தொடர்ந்து மாலை 5.40 மணியளவில் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார் என்ற செய்தியை சில தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின. 

இதனால், தமிழக த்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக தொண்ட ர்கள் கற்களை வீசி தாக்கு தலில் ஈடுபட்டனர். 
இந்நிலையில் 5.49 மணி யளவில் அப்போலோ நிர்வாகம், முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது என்றும் மரணம் என்று வெளியான செய்தி தவறானது என்றும் கூறியது. 

இதன் பின்னர், அதிமுக தொண்டர்கள் அமைதி யானர்கள். அவர்களின் முகங்களில் இருந்த சோகம் மாறி இயல்பு நிலைக்கு திரும்பின. இது வெல்லாம் இப்போதைக்கு பெரிய செய்தி அல்ல. 

அதிமுகவின் அதிகார பூர்வ தொலைக் காட்சியான ஜெயா பிளஸ்சில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார் என்று சிலைட் போடப் பட்டுள்ளது.

அதிமுகவின் அதிகார பூர்வமான தொலைக் காட்சியே ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்ற செய்தியை வெளியிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 
பின்னர், இது குறித்த செய்தியை ஜெயா பிளஸ் நீக்கி விட்டது. மேலும், அப்படி செய்ய வில்லை என்று ஜெயா தொலைக் காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித் துள்ளது. 

ஆனாலும், அவர்கள் வெளியிட்ட தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கால மானார் என்ற சிலைட் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:
Privacy and cookie settings