கும்பகோணத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் !

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் 6 கட்சிகள் கொண்ட கூட்டணி. ஆறுமுகம் கொண்ட எங்களுக்கு என்றுமே ஏறுமுகம் தான். கும்பகோணத்தில் அறிமுகப்படுத்தப்படும் 4 வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். 

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவருக்கு 110 விதியின் கீழ் அறிக்கை வாசிக்கும் வியாதி இருக்கிறது. 110 விதியின் கீழ் அறிவித்த எந்த திட்டத்தையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை.

அதற்கு உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். மதுரையில் 100 அடி உயரத்தில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்றும், துணைகோள் நகரம் அமைக்கப்படும் என்றும் 110 விதியின் கீழ் அறிவித்தார். ஆனால் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

மக்களுக்கு யார் துரோகம் செய்தாலும் பார்த்து கொண்டு இருக்கமாட்டேன். அதேபோல் தவறு செய்தாலும் தட்டி கேட்பேன். எனது கட்சியினர் தவறு செய்தாலும், எனது மகன்கள், மனைவி தவறு செய்தாலும் சத்தம்போடுவேன். 

நாங்கள் 6 கட்சி தலைவர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்வில் ஏற்றம்பெற எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:
Privacy and cookie settings