ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நீல நிற பனிப்பாறை !

உலகில் வேறெங்கும் காண முடியாத விசித்திரமான, மர்மமான பனிப் பாறை ஒன்று அண்டார்டிகா பனி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த 
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நீல நிற பனிப்பாறை !
அலெக்ஸ் கார்னல் (Alex Cornell) என்பவர் இயற்கை காட்சிகளை படம் பிடிப்பதை தொழிலாக கொண்டவர். 
இவர் சமீபத்தில் அண்டார்டிகா பிரதேசத்திற்கு பனிக்கட்டி களையும், பனிப்பாறை களையும் படம் பிடிக்க சென்றுள்ளார்.

அங்கே பரந்து விரிந்த பனிபிரதேசத் திற்கு நடுவில் செங்குத்தாக மிகப்பெரிய பனிப்பாறை ஒன்றை கண்டு பிடித்தார்.

அது வழக்கமாக காணப்படும் பனிப்பாறை போல் இல்லாமல், விசித்திர மாகவும் மர்ம மாகவும் காணப் பட்டதாக கார்னல் குறிப்பிட் டுள்ளார்.

பனி பிரதேசங் களில் காணப்படும் பனிப் பாறைகளில் 90 சதவிகிதம் பனிப் பரப்பிற்கு கீழ் தான் இருக்கும்.
ஆனால் அந்த விசித்தி ரமான பனிப் பாறையின் பெரும் பாலான பகுதி பனிப் பரப்பிற்கு மேலேயே இருப்ப தாகவும் குறிப்பிட் டுள்ளார்.
மேலும் உலகில் உள்ள அனைத்து பனிப்பாறை களும் வெள்ளை நிறத்தில் இருக்கும் போது, அந்த விசித்திரமான பனிப்பாறை மட்டும் நீல நிறத்தில் இருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்ததாக கூறியுள்ளார்.

பனிப் பாறைகள் அவ்வப் போது உடையும் தன்மை கொண்டதால், ஆங்காங்கே சிறு சிறு பனிக்கட்டிகள் சிதறி கிடக்கும்.

ஆனால் அந்த மர்மமான பனிப்பாறை யானது நேர்த்தியாக செதுக்கியது போல், எந்த உடைந்த பாகங்கள் இல்லாமல் பளப் பளப்பாக இருந்தது தன்னை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யுள்ளதாக அவர் குறிப்பிட் டுள்ளார்.
அலெக்ஸ் கார்னலின் புகைப் படங்களை ஆராய்ந்த அறிவியல் வல்லுனர்கள் ‘இந்த பனிப்பாறை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம்’ என கருத்து தெரிவித் துள்ளனர்.

இப்பனிப் பாறையை பற்றி விரிவாக ஆராய அறிவியல் வல்லுனர்கள் முயன்று வருகின்றனர்.
Tags: