பெண்கள் விலைபேசி விற்கப்படும் விசித்திர சந்தை !

பல்கேரியா நாட்டில் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை பெண்க ளுக்காக மணமகள் சந்தை என்ற விநோத திருவிழா தற்போது களை கட்டி யுள்ளது.
பெண்கள் விலைபேசி விற்கப்படும் விசித்திர சந்தை !
பல்கேரியா (Bulgaria) நாட்டில் உள்ள ஸ்டாரா சகோரா (Stara Zagora) என்ற நகரத்தில், ‘மணமகள் சந்தை’ என்ற ஒரு விநோ தமான விழா 4 ஆண்டுக ளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது.

Kalaidzhi சமுதாயத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு 15 வயது பூர்த்தி அடையும்போது பள்ளிக ளிலிருந்து நிறுத்தி விடுவார்கள்.
இதனால், பள்ளி பருவத்தில் எந்த தவறிலும் ஈடுபட வாய்ப்பு இல்லாமல் இளம் வயதி லேயே திருமணம் செய்து வைக்கி றார்கள்.

பல நூற்றாண் டுகளாக நடந்து வரும் இந்த ‘மணமகள் சந்தை’ விழாவில் வறுமையின் காரணமாக திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் தங்கள் மகள்களை ஒரு பொது இடத்திற்கு அழைத்து வரு வார்கள்.

அதேபோல் தங்கள் மகன் களுக்கு நல்ல மண மகளை தேடி பெற்றோர்கள் அவர்களின் மகன்களை அங்கு அழைத்து வருவார்கள்.
இந்த சந்திப்பில், இரு தரப்பு பெற்றோர்கள் தங்கள் மகன் களையும், மகள் களையும் ஒன்றுகூடி பேசி தங்கள் விருப்ப வெறுப்பு களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்வார்கள்.

பிறகு, விருப்பமான பெண்களை தெரிவு செய்த ஆண்கள் அந்த பெண்களுடன் சிறிது நேரம் நடனம் ஆடுவார்கள். இந்த காட்சியை இரு தரப்பு பெற்றோ ர்களும் கண்டு களிப்பார்கள்.

அன்றைய தினம், கவர்ச்சியான மற்றும் ஆடம் பரமான ஆடைகள், நகைகளை அணிந்து வரும் மணப் பெண்கள், தங்கள் மனதிற்கு பிடித்த மணமகனை தேர்ந்தெடுப் பார்கள்.

ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை தெரிவு செய்தவுடன், ஆண்களின் பெற்றோர்கள் பெண்களின் பெற்றோர் களுடன் விலை பேரம் நடத்து வார்கள்.
மணமகனின் பெற்றோர்கள் கூறும் விலை ஏற்புடையதாக இருந்தால், அந்த தொகையை பெற்றுக் கொண்டு தங்கள் மகளை அவர்களுக்கு விற்று விடுவார்கள்.
இந்த விழாவிற்கு வரும் ஒவ்வொரு பெண்ணும் சுமார் 2,200 முதல் 4300 பவுண்டுகள் வரை பேரம் பேசப்பட்டு விற்கப் படுவார்கள்.

ஏழை பெற்றோர்கள் தங்கள் மகள்களை செலவில்லாமல் திருமணம் செய்து வைக்க 4 ஆண்டு களுக்கு ஒரு முறை வரும் இந்த விழாவை ஆவலுடன் எதிர்ப் பார்த்து காத்திருப் பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !