கணவருக்கு முடிவெட்டிய விட்ட பாலிவுட் நடிகை.. வைரலாகும் வீடியோ !

பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, தனது கணவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராத் கோலிக்கு முடி வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கணவருக்கு முடிவெட்டிய விட்ட நடிகை


கடந்த 2008ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ரப்னே பனா டி ஜோடி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வரும் அனுஷ்கா ஷர்மா, கடந்த 2017ம் ஆண்டு விராத் கோலியை திருமணம் செய்து கொண்டார்.


மூன்று கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கானு உடன் இணைந்து நடித்துள்ளார் 

அனுஷ்கா ஷர்மா. ஷாருக்கானின் ரப்னே பனா டி ஜோடி, ஜீரோ உள்ளிட்ட படங்களிலும், சல்மான் கானுடன் சுல்தான் படத்திலும், அமீர் கானுடன் பிகே படத்திலும் இணைந்து நடித்துள்ளார்.

ஆங்கிரேஸி மீடியம்

2018ம் ஆண்டு ரிலீசான ஷாருக்கானின் ஜீரோ படத்தில் நடித்த அனுஷ்கா ஷர்மா, ஷாருக்கானை போலவே அடுத்ததாக எந்த ஒரு பெரிய படத்திலும் கமீட் ஆகவில்லை. 


A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on


இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடுவதற்கு முன்பாக ரிலீசான இர்ஃபான் கானின் ஆங்கிரேஸி மீடியம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

ஹாட் 

கடந்த இரு ஆண்டுகளாக எந்த ஒரு புதிய படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் ஆகாத நிலையில், கணவனுடன் கிரிக்கெட் போட்டிகளுக்கு சென்று வந்த அனுஷ்கா ஷர்மா, சமீபத்தில், செம கிளாமராக போட்டோஷூட் நடத்தி, 

அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி, விரைவில் புதிய படத்தில் ஒப்பந்தமாக முயற்சி செய்து வந்தார். ஆனால், கொரோனா காரணமாக தற்போது அந்த முயற்சி தள்ளிப் போயுள்ளது.

பார்பர்

கொரோனா வைரஸ் அதிகளவில் பராவாமல் இருக்க மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள டோட்டல் லாக் டவுனை கோலி மற்றும் அனுஷ்கா தம்பதியினர் கடைபிடித்து வருகின்றனர். 

குவாரண்டின் காலத்தில் வெளியே முடி வெட்ட செல்ல முடியாத சூழலில் தனது கணவருக்காக ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறி உள்ளார் நடிகை அனுஷ்கா ஷர்மா.


டொனேட் ஃபர்ஸ்ட்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதிக்காக பல நடிகர்களும், பிரபலங்களும் தங்களால் இயன்றதை கொடுத்து வருகின்றனர். 

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனும் நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளார். 

ஆனால், விராத் கோலி மற்றும் அவரது மனைவி எந்தவொரு நிவாரண நிதியும் வழங்கவில்லை என பல நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Tags: