கும்பகோணம், காட்பாடி நபர்களுக்கு கொரோனா.. தமிழகத்தில் 40 ஆக உயர்வு !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தற்போது, தமிழகத்தின் மேலும் இருவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
கும்பகோணம், காட்பாடி நபர்களுக்கு கொரோனா


தற்போது கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 40 ஆக உயர்ந்திருக்கிறது. 

இரண்டு நபர்கள் தற்போது புதிதாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை, தமிழகத்திற் கான தேசிய சுகாதார மிஷன் உறுதி செய்துள்ளது.
அதில் ஒருவர் 42 வயதானவர். கும்பகோணத்தைச் சேர்ந்த அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். 

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று ஊர் திரும்பிய நிலையில், அவருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டது.


மற்றொருவர், 49 வயதானவர். காட்பாடியில் சேர்ந்த அவர், வேலூரிலுள்ள, தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று விட்டு, மத்திய கிழக்கு நாடுகள் வழியே, காட்பாடி திரும்பி யுள்ளார்.
இவ்வாறு அந்த தகவல் தெரிவிக்கிறது. சென்னையில் மட்டும் ஏற்கனவே 24,000 பேர் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்படு வருகிறார்கள். 

இதில், ரத்த மாதிரிகள் சோதனைக்கு பிறகு தான், அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும்... oneindia
Tags:
Privacy and cookie settings