உலக கோடீஸ்வரர் அம்பானியின் காரை பற்றி தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வைத்திருக்கும் கார்களைப் பற்றியும் அவற்றில் என்னனென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றியும் தற்போது காணலாம்.
அம்பானியின் காரை பற்றி தெரியுமா?


இந்திய அளவில் மட்மில்லாமல் உலக அளவில் மிகப்பெரிய பணக்காரராக முகெஷ் அம்பானி வலம் வருகின்றார். 

மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வரும் இவர்கள் வீட்டு திருமணக் காட்சியினை சமீபத்தில் இணையத்தில் பலரும் அவதானித் திருப்பார்கள்.

தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்களில் உணவு பகிரப்பட்டது மட்டுமின்றி கோடிக் கணக்கான பணத்தினைக் செலவு செய்து திருமணம் நடந்தது. ஒரு பத்திரிக்கை செலவு மட்டும் லட்சத்திற்கும் மேல் சென்றது.

மும்பையில் உள்ள அவர்களின் அன்டிலியா வீடும், அவர்கள் பயன்படுத்தும் மிக விலை உயர்ந்த கார்களும் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஒரு உதாரணம்.

உலகின் ஆடம்பரமான வீடுகளில் ஒன்றான இதில் கார்களை நிறுத்துவதற்கு மட்டும் 8 தளங்கள் இருக்கின்றன.

பல விலை உயர்ந்த கார்கள் அணிவகுத்து நிற்கும் இதில், ரேஞ்ச் ரோவர் கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தவை.
குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது எப்படி?
பல்வேறு ஆடம்பரமான கார்கள் இருந்தாலும் முகேஷ் அம்பானி பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series) காரையே பயன்படுத்தி வருகின்றார்.

அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றான இதன் விலை 10 கோடி அடக்கமாகும்.

காரின் விலை 8.70 கோடி என்றும் இதனை இந்தியாவில் பதிவு செய்வதற்கு 1.60 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளார் களாம்.

முகேஷ் அம்பானி இந்த காரை வாங்கியிருப்பதற்கு பின்னால் இருக்கும் பல்வேறு காரணங்களை தற்போது காணலாம்.

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் செடான் ரக கார் ஆகும். ஆனால் முகேஷ் அம்பானி பயன்படுத்தி வருவது ரெகுலர் 7-சீரிஸ் கார் கிடையாது.


இது ஹை-செக்யூரிட்டி வேரியண்ட் ஆகும். இந்த லக்ஸரி செடான் காரின் 760எல்ஐ வெர்ஷன் (760Li Version) அடிப்படையில், கூடுதல் பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டு உருவாக்கப் பட்டதாம்.

பாதுகாப்பினை மையமாகக் கொண்ட இந்த கார் சாதாராண கார்களைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாச மானதாக கூறப்படுகின்றது.

விஆர்7 (VR7) பாதுகாப்பு தரநிலை களுக்கு முழுவதும் இணங்கும் வகையில் உருவாக்கப்பட்ட முதல் கவச கார் ஆகும். குறித்த காரின் டோர் பேனல் களுக்கு இடையே கெவ்லர் தகடுகள் வழங்கப் பட்டுள்ளன.

இதன் விண்டோவில் 65 மிமீ தடிமனான புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் பொருத்தப் பட்டுள்ளன. இதன் எடை 150 கிலோ கிராம்கள் ஆகும்.

ராணுவத்தில் பயன் படுத்தப்படும் ஏகே-47 மற்றும் கையெறி குண்டுகளால் இந்த காரை எதுவும் செய்ய முடியாதாம். அவ்வாறு தாக்குதல் நடத்தினாலும் இந்த கார் எளிதாக அதனை தாங்கி நிற்குமாம். 
புரோஸ்டேட் சுரப்பி என்பது என்ன?
அத்துடன் 17 கிலோ கிராம் வரையிலான டிஎன்டி-யால் (TNT) நடத்தப்படும் மிக பயங்கரமான வெடிப்பு களையும் கூட பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட் கார் எளிதாக தாங்கி நிற்க வல்லது.
ஹை-செக்யூரிட் கார்


அவசர காலத்திற்கு எப்போதும் ஆக்சிஜனை சேமித்து வைத்திருக்கும் இந்த காரானது ரசாயன தாக்குதலால் கூட ஒன்றும் செய்ய முடியாதாம். 

அவ்வாறான தாக்குதல் நடந்தாலும், அதற்கு எதிர்வினை யாற்றுவதற்கு தேவையான கிட்கள் இதில் பொருத்தப் பட்டுள்ளதாம்.

இந்த பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட் காரில் கேபினில் தீப்பிடிக்க வாய்ப்பே இல்லை என்றும் அவ்வாறான அசம்பாவிதம் ஏற்பட்டால்

தானாகவே அணைக்கும் தொழில் நுட்பம் இருப்ப தாகவும் ட்யூயல் லேயர் டயர்கள் கொடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படு கின்றது.
காலங்கடந்த திருமணங்கள் கேள்விக் குறியாகும் வாழ்க்கை
காரின் எரிபொருள் டேங்கில் கசிவு மற்றும் வெடிப்பு என எதுவும் ஏற்பாடாமல் இருக்கும் இந்த காரின் டயர்கள் பயங்கரமாக சேத மடைந்தாலும் மணிக்கு 80 கி.மீற்றர் வேகத்தில் பயணம் செய்ய முடியுமாம்.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.2 வினாடி களில் எட்டி விடும் வல்லமை கொண்ட இந்த காரில் பல சொகுசு வசதிகளும் காணப் படுகின்றன.
Tags: