புரோஸ்டேட் சுரப்பி என்பது என்ன?





புரோஸ்டேட் சுரப்பி என்பது என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஆண்களின் சிறுநீர்ப் பையை ஒட்டியவாறு, சிறு நீர்ப்பாதையின் அருகில் இருக்கும், 20 முதல் 25 கிராம் எடையுள்ள சுரப்பி.புரோஸ்டேட் சுரப்பியில்,
புரோஸ்டேட் சுரப்பி




கட்டி ஏற்பட காரணம் என்ன?

டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்னும் ஹார்மோன் சுரப்பு, 40 வயதுக்கு மேல் அதிகரிப்பதால், வீக்க மடைந்து புரோஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது.

புரோஸ்டேட் சுரப்பியில் கட்டி இருப்பதற் கான அறிகுறிகள் என்னென்ன?

சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது, அடிக்கடி சிறுநீர் வரும் உணர்வு, சிறுநீர் வராமல் அடைத்துக் கொள்வது, சிறுநீர்த் தொற்று, சிறு நீர்ப்பையில் கல் உருவாவது, போன்றவை. 
புரோஸ்டேட் சுரப்பி கோளாறுகளை கண்டறியும் பரிசோதனைகள் என்னென்ன?

மல வாய் பரிசோதனை (DRE), அல்ட்ரா சவுண்ட், சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் உள்ளன. புரோஸ்டேட் அளவு, வடிவத்தை இதில் அறியலாம். 

புற்றுநோய் காரணமாக, புரோஸ்டேட் சுரப்பி உயிரணுக்கள் (PSA}அதிக அளவில் புரதத்தை உற்பத்தி செய்கின்றனவா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இப்பாதிப்பு யாருக்கெல்லாம் வரும்?
புரோஸ்டேட் சுரப்பி உயிரணுக்கள்




40 வயதிற்கு குறைவான ஆண்களில் அரிதாகவும், 60 வயது ஆண்களுக்கு, 50 சதவீதமும், 70 முதல், 80 வயது ஆண்களுக்கு, அதிக அளவிலும், இப்பாதிப்பு ஏற்படலாம்.

புரோஸ்டேட் சுரப்பியில் இருக்கும் கட்டியின் தன்மையை அறிவது எப்படி?

மல வாய் பரிசோதனை (DRE), ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலம் அறியலாம்.

சிகிச்சைகள் என்னென்ன?

புரோஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சி, ஆரம்ப கட்டத்தில் இருந்தால், மருந்துகளே போதுமானது. மருந்துகள் பயனளிக்காத, 10 சதவீதம் நோயாளி களுக்கு, எண்டோஸ்கோபி எனப்படும் நுண்துளை அறுவைச் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த லாம்.
இப்பிரச்னையால், சிறுநீர் கழிப்பதில் ஏன் சிரமம் ஏற்படுகிறது?

சிறுநீர் செல்லும் குழாயை ஒட்டியவாறு புரோஸ்டேட் சுரப்பி உள்ளது. வயது அதிகரிக்கும் ஆண்களுக்கு, புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப் பாதையை அழுத்துவதால், சிறுநீர் ஓட்டம் குறைகிறது.
சிறுநீர்ப் பாதையை அழுத்துதல்




இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

சிறுநீரகப் பாதை தொற்று, சிறுநீர் வருவதை கட்டுப் படுத்த இயலாத நிலை உட்பட சிறுநீரகங்கள் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் ஏற்படும்.

புரோஸ்டேட் சுரப்பியில் கட்டியை திறந்த நிலை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றலாமா?
70 முதல் 300 கிராம் வரை உள்ள பெரிய கட்டிகளையும் ஹோல்மியம் லேசர் சிகிச்சை (Holep) மூலம் அகற்ற முடிகிறது. 

இது எண்டோஸ்கோபி எனப்படும் நுண்துளை அறுவைச் சிகிச்சை ஆகும். இதன் மூலம், ரத்த விரயமும் குறைவாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)