பிரேக் பிடிக்காத பஸ்ஸை நிருத்திய ஐஏஎஸ் அதிகாரி - ஓட்டிய ஷிகாவின் தில் !

0
"என்னது.. பிரேக் பிடிக்கலையா.. தள்ளுங்க.. நான் பார்க்கிறேன்" என்று பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அரசு பஸ்ஸை தானே ஓட்டி சென்று சோதனை செய்த சம்பவம் பலரையும் ஈர்த்துள்ளது.
பிரேக் பிடிக்காத பஸ்ஸை நிருத்திய ஐஏஎஸ்


பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் மேனேஜிங் டைரக்டராக இருப்பவர் ஷிகா ஐஏஎஸ்... ஷிகா என்றாலே அதிரடி என்று தான் அங்கு பெயர்.. 

அந்த அளவுக்கு துணிச்சல் நிறைந்தவர்.. யாருக்கும் பயப்பட மாட்டார்.. பொதுமக்களுக்கு நல்லது என்றால் எதற்கும் துணிந்து நிற்பார்.
கடந்த வருடம் செப்டம்பரில், பிஎம்டிசியின் மேனேஜிங் டைரக்டராக பொறுப்பை ஏற்றார் ஷிகா.. அந்த நாளில் இருந்தே ஷிகாவின் அதிரடிகள் ஆரம்பமாயின.

அதிகாரி ஷிகா

இந்நிலையில் தான் பிஎம்டிசி பஸ்களில் கொஞ்ச நாளாகவே அடிக்கடி பிரேக் ஃபெயிலியர் ஏற்படுகிறது என்றும், 

இதனால் விபத்துக் களை நிறைய சந்திக்க நேரிடுகிறது என்றும் பொது மக்கள் தரப்பில் கூறப்பட்டது.. இந்த புகார்கள் ஷிகாவின் காதுகளுக்கு எட்டியது.

ரெட் கலர் சுடிதார்

இதனால் அதிர்ந்த ஷிகா, பஸ் பிரேக்குகள் சரியாக இருக்கிதறா என்பதை யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ள முயலவில்லை.. 
மாறாக தானே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க முயன்றார்.. ஹோஸ்கோட் பயிற்சி மையத்திற்கு ஷிகா ரெட் கலர் சுடிதாரில் வந்தார்.

ஆச்சரியம்


அங்கு ஏராளமான பஸ்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன... அதில், வால்வோ பஸ் ஒன்றில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.. கியரை போட்டு பஸ்ஸை ஓட்ட ஆரம்பித்தார்... 

பிரேக் சரியாக பிடிக்கிறதா என்று தானே நேரடியாக சரிபார்த்தார்.. இதை பார்த்த பிஎம்டிசி அதிகாரிகளும் ஊழியர்களும் ஆச்சரிய மடைந்தனர்..

பெண் இயக்குனர்

ஏனென்றால், மொத்தமுள்ள 6,400 அரசு சிட்டி பஸ்களில் 4,000 டிரைவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்...

முழுக்க முழுக்க ஆண்கள் தான் இந்த வேலையை பார்த்து வந்தாலும், ஒரே ஒரு பெண் டிரைவர் மட்டும் உள்ளராம். 

இந்த பிஎம்டிசி பஸ்களில் தான் லட்சக் கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.. 
ஓட்டிய ஷிகா ஐஏஎஸ்


அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிஎம்டிசியின் பெண் இயக்குனரே பஸ்ஸை ஓட்டி பார்த்து..

பிரேக்கு களை செக் செய்தது பெரிதும் பாராட்டை பெற்று வருகிறது.

வைரல் வீடியோ

அது மட்டுமல்ல.. பொதுவாக பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களின் ஓட்டுனர்கள் ஆண்களாகவே இருப்பர்..

பெண்களால் இப்படிப்பட்ட வாகனங் களை ஓட்டி சாதிப்பதற்கு நிறைய காரணங்கள் தடையாக உள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. 
இந்த சூழலில் தான் ஷிகாவின் இந்த முயற்சி பல பெண்களின் கவனத்தை திருப்பி உத்வேகத்தை கூட்டியுள்ளது..

கச்சிதமாக பஸ்ஸின் ஸ்டியரிங் வீலை பிடித்து.. பஸ் ஓட்டும் ஷிகாவின் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)