ஆங்கிலத்தில் சரளமாக பேசும் பிச்சைக்காரர் - ஒரே இரவில் பேமஸ் !

0
அழுக்கு துணி, பரட்டை தலையுடன் இருக்கும் இவர் ஒரு பிச்சைக்காரர்.. கோயில் வாசலில் பிச்சை எடுக்கிறார்.. ஆனால் திடீரென ஒரு தகராறு வந்து விடவும், 
ஆங்கிலம் பேசும் பிச்சைக்காரர்


இந்த ஆசாமி வாயை திறந்து பேச ஆரம்பித்தார் பாருங்க.. ஓவர் நைட்டில் ஓவர் ஃபேமஸ் ஆகி விட்டார் !

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகன்னாதர் கோயில் பிரசித்தி பெற்றது.. 

இந்த கோயிலின் வளாகத்தில் ஏராளமான பிச்சைக்காரர்கள் எப்போதுமே இருப்பார்கள். இதில் ஒருவர்தான் கிரிஜா சங்கர் மிஸ்ரா.

பிச்சை எடுப்பதற் கென்றே வழக்கமாக ஒரு இடம் இவருக்கு இருக்கும்.. யாரிடமும் பேசமாட்டார்.. அமைதியாக போய் அந்த இடத்தில் உட்கார்ந்து பிச்சை எடுப்பார்.

அப்படிதான் பிச்சை எடுக்க வரும் பாது, தன் இடத்தில், ஒரு ரிக்‌ஷாக்காரர் வண்டியை நிறுத்தி வைத்திருந்து இருக்கிறார்.. 

அதனால் ரிக்‌ஷாவை எடுக்க சொல்லி சைகையிலேயே கிரிஜா சங்கர் கேட்டுக் கொள்ள, அதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவித்துள்ள தாக தெரிகிறது. 
இதற்கு பிறகு தான் வாயை திறந்து சத்தம் போட்டு பேச ஆரம்பித்தார் கிரிஜா சங்கர்.. இரு தரப்பிலும் மாறி மாறி வார்த்தைகள் வந்து விழுந்தனவே தவிர, அந்த ரிக்‌ஷாவை அங்கிருந்து எடுக்க வில்லை.

ஒரு கட்டத்தில் ஆத்திரமும், ஆவேசமும் அடங்காத பிச்சைக்காரர், ரிக்ஷாக்காரரை பலமாக தாக்கி விட்டார்.. இதில் அவருக்கு ரத்தம் பொல பொலவென கொட்ட தொடங்கியது. 

கோயில் வாசலிலேயே அந்த இடம் ரணகளமாகி விட்டது.. விஷயம் அறிந்து போலீசார் வந்து விட்டனர்.. 2 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்... 2 பேரையும் புகார் எழுதி தருமாறு சொன்னார்கள்.

அப்போது தான், கிரிஜா சங்கர், அந்த பேப்பரில் கடகடவென இங்கிலீஷில் புகார் எழுதினார்.. சரளமாகவும், வேகமாகவும் அந்த புகாரை எழுதி தள்ளினார். இதை பார்த்து போலீசார் அரண்டு போய் விட்டனர்.. 

வந்த புகாரை விட்டு விட்டு, அவர் யார் என்ற விசாரணை யில் இறங்கி விட்டனர்.. அப்போது தான் அவர் ஒரு என்ஜினியர் என்று தெரிய வந்தது. 

புவனேஸ்வரை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஎஸ்பியின் மகன் தான் இந்த கிரிஜா சங்கர்.. பிஎஸ்சி படித்த அவர், டிப்ளமோ என்ஜினியரிங் முடித்திருக்கிறார். படித்து முடித்து விட்டு, மும்பையில் ஒரு பிரபல கம்பெனியில் வேலையிலும் இருந்திருக்கிறார்.
பிஎஸ்சி படித்த பிச்சைக்காரர்


அந்த சமயத்தில் தான் திடீரென மனநலம் பாதிக்கப் பட்டுள்ளது.. அதற்கு பிறகு புரிக்கு வந்து பிச்சை எடுக்க ஆரம்பித்து விட்டார்..

இந்த தகவல்களை கேட்டு போலீசார் ஆச்சரியப் பட்டனர்.. 

இப்போது குடும்பத்தி னரிடம் கிரிஜா சங்கரை ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

"இவ்வளவு படிச்சிட்டு ஏன் இப்படி பிச்சை எடுக்கறீங்கன்னு" கேட்டால், அது என் சொந்த விஷயம்.. 

பிஎஸ்சி முடிச்சிட்டு டிப்ளமோ என்ஜினியரிங் படிச்சேன்.. ஒரு ஆபீசில் வேலை பார்த்தேன்.. ஆனால் என் சீனியர்களுடன் எப்பவுமே எனக்கு ஆபீசில் தகராறு.. மனசெல்லாம் வலி.. 
அதான் அந்த வேலையை விட்டுட்டு வந்துட்டேன்.. இன்னும் என் மனசு ரணமாதான் இருக்கு" என்றாராம்.

பிச்சை எடுக்கும் இடத்தில் இவர் எப்படி இருப்பார் என்று அடுத்தகட்ட விசாரணையில் ஆர்வத்துடன் போலீசார் இறங்கினர்.. 


நைட் நேரத்தில் நிலா வெளிச்சத்தில், இங்கிலிஷ் நியூஸ் பேப்பர்களை விடிய விடிய படிப்பாராம் கிரிஜா சங்கர்.. இதை கேட்டதும் போலீசாருக்கு தலையே சுற்றி விட்டது.. 

பல பல ஆச்சரியங் களை தனக்குள் ஒளித்து வைத்துள்ளார் இந்த கிரிஜா சங்கர்!

எதற்கோ தகராறு செய்ய போய்.. கடைசியில் சரளமான இங்கிலீஷால் அடையாளம் காணப் பட்டுள்ளார் இந்த என்ஜினியரிங் படித்த நபர்.. 

இந்த வருடம்கூட, என்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் பலரும் உரிய வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது வருந்தத்தக்க ஒன்று தான்.. 
என்றாலும், இளமையில் கற்ற கல்வி ஒருவரை எப்போதுமே கைவிடாது என்று நம் பெரியவர்கள் சொல்லி வைத்தது, கிரிஜா சங்கர் விஷயத்தில் எவ்வளவு பெரிய உண்மை!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)