தொடர் ஏப்பம் என்ற பாதிப்புக்கு உரிய சிகிச்சை !

எம்மில் பலருக்கும் தொடர் ஏப்பம் என்ற பாதிப்பு பல தருணங்களில் ஏற்பட்டிருக்கும். இது மிகப்பெரிய அசௌகரிய த்தையும், தர்மசங்கட த்தையும் ஏற்படுத்தும். 
தொடர் ஏப்பம்

சிலருக்கு உணவருந்தும் முன்னரும், சிலருக்கு உணவருந்திய பிறகும், சிலருக்கு உணவு அருந்திக் கொண்டிரு க்கும் போதும் தொடர் ஏப்பம் வரக்கூடும்.

சிலருக்கு சாப்பிடாமல் விரதம் இருந்தாலும் தொடர் ஏப்பம் வரும்.

அதே போல் உடலின் எந்த பகுதியை யாவது தொட்டால் சிலருக்கு தொடர் ஏப்பம் வரும். 

இத்தகைய தொடர் ஏப்பம் வருவதற்கு எம்முடைய இரைப்பையி லுள்ள உட்சுவர் உணவிலுள்ள அமிலத் தன்மையால் பாதிக்கப் படுவது தான் காரணம்.

சாப்பிட்டவுடன் சில மணித்துளி களிலேயே உறங்குபவர்கள், சாப்பிட்ட வுடன் தேநீர், கடலை மிட்டாய், ஐஸ்கிறீம் போன்ற நொறுக்குத் தீனியை சாப்பிடு பவர்களுக்கும், அவர்களின் இரைப்பையின் உள் சுவர்களில் இயல்புத் தன்மை மாற்றமடைந்து தளர்வு ஏற்படுகிறது. 
இதன் காரணமாக இரைப்பை யிலுள்ள உணவு, இரைப்பை யின் உள் சுவர் மீது அழுத்தத்தை கொடுக்கும். 

இத்தகைய அழுத்தம் காரணமாக அங்கு உருவாகும் அமிலம் கலந்த வாயு, உணவு குழாய் வழியாக ஏப்பமாக வெளியேறும்.

இரைப்பை யில் உள்ள புண்களில் தங்கும் உணவுத் துகள்களில் காரணமா கவும் தொடர் எப்பம் வரக்கூடும்.

இதற்கு நன்கு பசி எடுத்த வுடன் சாப்பிடுவதும், நன்றாக மென்று சாப்பிடுவதும் ஆக சிறந்த நிவாரணமாக பரிந்துரைக்கப் படுகிறது. 

இருந்தாலும் சிலருக்கு வாரம் ஒருமுறை உணவு அருந்தாமல் நீரை மட்டும் உணவாக பருகுவது இதற்கான நிவாரணமாக கருதப் படுகிறது.

இதற்கு மருத்துவர்கள் எண்டாஸ்கோபி மூலம் இரைப்பை யின் உட்சுவர், நடுசுவர், வெளிச்சுவர் ஆகிய மூன்றையும் ஆராய்ந்து, எங்கு பாதிப்பு ஏற்பட்டிருக் கிறது என்பதை கண்டறிந்து ,அது உரிய நிவாரணத்தை சிகிச்சை யாக வழங்குவார்கள்.
சிலருக்கு இதன் காரணமாக மண்ணீரல் பாதிக்கப் பட்டிருக்கும். அதற்கும் உரிய சிகிச்சை அளித்து அந்த பாதிப்பை குணப் படுத்துவார்கள். 

ஏப்பம் காரணமாக மண்ணீரல் பாதிக்கப் பட்டிருந்தால், இதன் காரணமாக கார்டியோ மயோபதி என்ற இதய பாதிப்பை ஏற்படும்.

சிலருக்கு இதன் காரணமாக இரத்த அழுத்தமும் ஏற்படக்கூடும்.

சிலருக்கு இதன் காரணமாக தலை சுற்றலும் ஏற்படலாம். ஆகவே தொடர் ஏப்பம் வந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். 

மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின் படி உணவுப் பழக்க வழக்கத்தை முறைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
Tags: